search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missile test"

    • அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது.
    • வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சியோல்:

    ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அரசாங்கம் அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்த சோதனை செய்கிறது. குறிப்பாக, எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க போர் கப்பலின் தென் கொரிய வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையானது கடுமையான ஆத்திரமூட்டல் என்று தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா மீறுவதாகவும், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகளம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும்.
    • ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது.

    அமெரிக்கா, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, "ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்தது.

    2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும்" என்று தெரிவித்துள்ளது.

    ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இவ்வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வளி மண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை.

    • தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை.
    • எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது.

    வடகொரியா நாடு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதனை வடகொரியா கண்டுகொள்ளவில்லை.

    சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8 ஏவுகணை சோதனை செய்தது. இந்தநிலையில் தென்கொரியா எல்லை அருகே பீரங்கி குண்டுகளை கடலில் வீசி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்கொரியா ராணுவம் கூறும்போது, "எல்லையில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. இது சில மணி நேரங்கள் நீடித்தது" என்று தெரிவித்தது.

    வடகொரியாவின் எல்லையில் இருந்து சுமார் 40 முதல் 50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் நகர் பகுதிக்கு அருகே பீரங்கி குண்டு சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    டோக்கியோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார்.

    இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.  இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  
    ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
    வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருகிறது என்பதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. #NorthKorea #MissileTest
    சியோல்:

    வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தி வந்தது. ஏவுகணை சோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்தி வந்து உலக நாடுகளை அதிர வைத்தது. அமெரிக்கா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் தொடர் பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுத திட்டங்களை அந்த நாடு நடத்தியது. இது அமெரிக்காவுக்கு சவாலாக அமைந்தது.

    இரு நாடுகளுக்கும் இடையே தீராப்பகை மூண்டது.

    ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினார்கள்.

    அந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாயின. கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா பாடுபடும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.



    அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து வடகொரியா அணுகுண்டு வெடித்து சோதிக்கவில்லை. ஏவுகணை சோதனைகளையும் நடத்தவில்லை. ஆனால் வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் அகற்றப்படவும் இல்லை.

    இந்த நிலையில் இரு தலைவர்களும் சமீபத்தில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த மாதம் 27, 28-ந்தேதிகளில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

    அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளில் ஒரு பகுதியைக் கூட அகற்ற முன்வராததுதான் இந்த பேச்சுவார்த்தையின் தோல்விக்கு காரணம் என வடகொரியா கூறியது.

    இந்த நிலையில் வடகொரியா மீண்டும் தனது அணு ஆயுதப்பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் நகருக்கு அருகே அமைந்துள்ள சானும்டாங்க் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் அல்லது ஏவுகணையை ஏவுவதற்கான பணிகள் நடந்து வருவதை செயற்கைகோள் படங்கள் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்தப் படங்களில் சானும்டாங்க் ஏவுதளத்தில் பெரிய அளவிலான வாகன நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கடந்த காலத்தில் இப்படி காணப்பட்டபோது அந்த நாடு, ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனை நடத்தி இருக்கிறது. எனவே இப்போது மறுபடியும் அந்த நாடு ஏவுகணை அல்லது ராக்கெட் சோதனையில் ஈடுபடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் வடகொரியாவின் பிரதான ராக்கெட் ஏவுதளமான சோஹேயும் மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.

    அதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், “நமது புரிதலில் இருந்து விலகிச்செல்கிற வகையில் அவர் (வடகொரிய தலைவர் கிம்) ஏதாவது செய்தால் அது எனக்கு ஏமாற்றத்தைத் தரும். இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் மீண்டும் சோதனைகளை நடத்த தொடங்கினால் அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்” என்று குறிப்பிட்டார். 
    ×