search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anitha Radhakrishnan"

    • கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.20½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.
    • குமாரபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனியன் மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருஷ்ணா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5½ லட்சம் மதிப்பில் புதிதாக பயணியர் நிழற்குடையும், கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.20½ லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறையும் கட்டப்பட்டுள்ளது.

    அதேபோல், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட சுனாமி நகரில் ரூ.18.98 லட்சம் மதிப்பிலும், குமாரபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிதாக சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதியில் ரூ.82 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.

    இதன் திறப்புவிழா நேற்று அந்தந்த பகுதிகளில் நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மொத்தம் ரூ.64.98 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி வகுப்பறை, சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றையும், ரூ.82 லட்சத்தில் போடப்பட்ட தார் சாலையையும் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், நகராட்சி ஆணை யாளர் கண்மணி, யூனியன் ஆணையர் அன்றோ, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், கீழநாலுமூலைகிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திராணி, ஊர் தலைவர் முத்துகுமார், மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ராமஜெயம், அரசு வழக்கறிஞர் சாத்ராக், திருச்செந்தூர் நகராட்சி, நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை, ஒன்றிய பொருளாளர் பரிசமுத்து, தி.மு.க. சுற்றுசூழல் அணி தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், கிளை செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக ரவி என்ற பொன்பாண்டி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுற்றுச்சூழல் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக ரவி என்ற பொன்பாண்டி, தலைவராக சிவசுப்பிர மணியன், துணைத்தலைவராக மனோகரன், துணை அமைப்பா ளராக செந்தில்குமார், ஜெகதீஸ்வீராயன், பிரபாகரன், ஜீவா பாலமுருகன், சுடலை, ஆகியோர் தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கணேஷ்நகரில் உள்ள இல்லத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை, சுற்றுச்சூழல் அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த சாதனைகள், திட்டங்கள், மாநில வளர்ச்சி பணிகளை அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சுற்றுச்சூழல் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொழிலாளர் அணி அமைப்பாளர் ரகுராமன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவருமான சரவணக்குமார், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, தர்மலிங்கம், ஓன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சிமன்ற உறுப்பினர் சக்திவேல், இளைஞர் அணி ராஜேந்திரன், கவுதம் மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தி.மு.க. மாநில மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    உடன்குடி:

    தி.மு.க. மாநில மீனவர் அணி நிர்வாகிகள் கூட்டம் தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    மாநில மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தலைவர் பெர்னார்டு, துணைத் தலை வர்கள் சங்கர் எம்.எல்.ஏ., மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர்கள் தம்பிதுரை, பொன்னரசு, ஜெயபிரகாஷ், புளோரன்ஸ், ரவிச்சந்திர ராமவன்னி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிஷங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாத புரத்தில் நடந்தமீனவர்நல மாநாட்டில் தமிழக மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது, விசைப்படகுகளுக்கான மானியவிலை டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கி உத்தரவு பிறப்பித்தது, மீனவர்கள் நலத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 5,034 வீடுகளுக்கு பட்டா வழங்க உத்தரவு, 45 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்க உத்தரவு,

    தூத்துக்குடி, கன்னி யாகுமரி, நெல்லையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் களுக்கு மண்எண்ணைய் 3,400 லிட்ட ரில் இருந்து 3,700 லிட்டராக உயர்த்தியது,

    தங்கச்சிமடத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வு, பாம்பன் பகுதியில் உள்ள மீன் பிடி படகுகளை நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு அமைப்பதற்கும், ஆய்வு மேற்கொள்ள மற்றும் குத்துக்கால் மீன்பிடித்து றைமுகத்தில் படகுகளை நிறுத்த தூண்டில் வளைவு பாலம் அமைக்க ஆய்வு மேற்கொள்ள உத்தரவு,

    மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகள், தடுப்பு சுவர்கள் அமைக்க ப்படும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்,

    மீனவர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கி உத்திரவு,

    நாட்டுப்படகு மீனவர்க ளுக்கு மானிய விலையில் ரூ. ஆயிரம் வெளி பொறுத்தும் எந்திரம் வழங்கிட உத்திரவு என 10 அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்-அமைச்சர்மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க., மீனவர் அணி மற்றும் ஒட்டு மொத்த மீனவ சமுதாயம் சார்பில் பாராட்டு தெரிவிப்பது, கலைஞர் தூற்றாண்டு விழா மீனவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களில் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    • சண்முகபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் யூனி யனுக்கு உட்பட்ட வீரபாண்டியன் பட்டினம் ரூரல் ஊராட்சி சண்முக புரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தாக கட்டப் பட உள்ள ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து சண்முகபுரம் காந்திநகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார். மேலும் திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பள்ளிபத்து ஊராட்சி செங்குழியில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், தி.மு.க. மாநில வர்த்தகரணி இணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறையினர் தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
    • வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2020-ம்ஆண்டு சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.

    இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அமலாக்கத்துறையினர் தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இதன் மீதான விசாரணை கடந்த 20-ந்தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு ஆகஸ்ட் 23-ந்தேதி நடைபெறும் என அறிவித்தார். அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. அப்போது இருதரப்பினரும் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • இந்த புதிய மின்மாற்றியினால் 60 மின் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.

    உடன்குடி:

    உடன்குடி உப கோட்டம் உடன்குடி நகர் விநியோக பிரிவுக்கு உட்பட்ட, உடன்குடி பேரூராட்சி 7-வது வார்டு ஸ்டாலின் நகர் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு கூடுதல் மின் அழுத்தம்வேண்டியும், சீரான மின்னழுத்தம் வழங்கவும் தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி னர். அமைச்சரின் ஏற்பாட்டில் தூத்துக்குடி, திருச்செந்தூர் மின்சாரத் துறை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி புதிய மின்மாற்றி ரூ.4.60லட்சம் மதிப்பீட்டில் ஸ்டாலின் நகரில் அமைக்கப்பட்டது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    7-வது வார்டு உறுப்பினர் முத்து சந்திரா முன்னிலை வகித்தார். இந்த புதிய மின்மாற்றியினால் 60 மின் நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.

    இந்நிகழ்ச்சியில் உடன்குடி உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம், உடன்குடி உபகோட்ட பிரிவு அலுவ லர்கள் உமா மகேஸ்வரி, உடன்குடி இளமின் பொறி யாளர் (நகர்) சூசைராஜ், இளமின் பொறியாளர் (ஊரகம்) மற்றும் மின்வாரிய பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மைதானத்தில் ஏராளமான பொதுமக்களும்,பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளும், தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாடி பயன் பெற்று வருகின்றனர்.
    • இதனை முறையாக சீர்படுத்தி 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓடு தளங்கள் அமைத்து, தண்ணீர் பைப்புகள் அமைத்து தரவேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலை ப்பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்.

    அவரை நேரில் சந்தித்த பள்ளி மாணவ-மாணவிகள் அமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியதாவது:-

    பள்ளியில் விளையாட்டு மைதானம் மிகப்பெரிய அளவில் உள்ளது. இதில் ஏராள மான பொதுமக்க ளும்,பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளும், தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாடி பயன் பெற்று வருகின்றனர்.

    இதனை முறையாக சீர்படுத்தி 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓடு தளங்கள் அமைத்து, தண்ணீர் பைப்புகள் அமைத்து அதில் கால்பந்து விளையாடும் விதமாக ஒரு புல்வெளி மைதானம் அமைத்து தர வேண்டுகிறோம். இதன்மூலம் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஞானராஜ், வெள்ளா ளன்விளை ஊராட்சிமன்ற தலைவர் ராஜரத்தினம், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
    • இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலை ப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருசந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானராஜ் வரவேற்றார். தாசில்தார் வாமனன், பள்ளித்தாளாளர் ராஜேஷ், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், துணைச்சேர்மன் மீராசிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரி சங்கர், வெள்ளாளன்விளை ஊராட்சிதலைவர் ராஜரத்தினம், உடன்குடி பேரூராட்சி துணை த்தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துச்செல்வன், உடன்குடி பேருராட்சி கவுன்சிலர் ஜாண்பா ஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜூதீன், மணப்பாடு ஜெயபிரகாஷ், ராஜாபிரபு, மாவட்ட அணி அமைப்பா ளர்கள் இளைஞரணி ராமஜெயம், நெசவாளர்அணி மகாவிஷ்ணு, வெள்ளா ளன்விளை செயலாளர் லியாஷ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் அதனாஷியஸ் நன்றி கூறினார்.

    • உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி யில் 112 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் படி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி யில் 112 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, 112 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஸ்டாலின், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சத்தான சத்துணவு திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், கல்வி உபகரணங்கள் வழங்கல் இப்படி ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். படிக்கின்ற பருவத்தில், மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்படிந்து மிகுந்த கவனத்துடனும், ஓழுக்கத்துடனும் கல்வி கற்க வேண்டும். கல்வி செல்வம் குறைவில்லா செல்வமாகும்.

    தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் படி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீராசிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ், ஜான்பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் விங்ஸ்டன் வரவேற்றார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், இளைஞரணி ராமஜெயம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபர், சிராஜூதீன், மகாவிஷ்ணு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஜெசிபொன்ராணி, செல்வகுமார், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் முகமதுசலீம், அன்வர் சலீம், நிர்வாகிகள் கணேசன், தங்கம், திரவியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருச்செந்தூர் அருகே புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
    • முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னதை போல் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் இயக்குனர் பிரொமில்டன் லோபோ வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவ, மாணவிகள் 65 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    தமிழ்நாடு 2-வது இடம்

    சுகாதாரமும், கல்வியும் இரு கண்கள் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்தை, கல்வியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கல்வி செல்வத்தை மட்டும்தான் யாரும் எடுத்து செல்ல முடியாது. அது உங்களோடே இருக்கும்.

    கல்வி வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும். கடலோர மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை நிறுவிய பெருமை இந்த கல்வி நிறுவனத்திற்கு உண்டு. இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது பள்ளிக்கு வராத மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் சத்தான வகையில் மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும் என்பதற்காக முட்டைகள் வழங்கி உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றினார்கள். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறுபான்மையின மக்களை காக்கின்ற அரசாக விளங்கி வருகிறது.

    ஆசிரியரின் வழிகாட்டுதல்

    முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னதை போல் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும். மாணவர்களாக இருக்கின்ற நீங்கள் தாய், தந்தையரின் சொல்லை கேட்டும், அதுபோல ஆசிரியரின் வழிகாட்டுதலின் படியும் சிறப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்தில் ரூ. 28 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 6 புதிய விநியோக மின் மாறிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், வாமணன், மண்டல துணைத் தாசில்தார் தங்கமாரி, அடைக்கலாபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மநாயகம், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் அன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதிஷ் வி. ராயன், வீரபாண்டியன்பட்டினம் (ரூரல்) பஞ்சாயத்து தலைவர் வசந்தி, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் பேச்சுமுத்து, கட்டுமான மற்றும் மேம்பாட்டு பொறியாளர் ராம்மோகன், உதவி பொறியாளர்கள் முத்துராமன், ராஜா ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 53 மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
    • திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 9 மின்கல வாகனங்களை வழங்கி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் கங்கா கவுரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 195 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். அரசுப்பள்ளி எல்லா வகையிலும் உயரவேண்டும் என்பதற்காகவும், புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் பெயரில் ரூ.7 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி அந்தப்பணி பள்ளிகள் தோறும் நடைபெற்று வருகிறது.

    இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலினின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ஆசிரியை ரீட்டா நன்றி கூறினார்.

    இதேபோல, திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஷிபாஜெனி அமுதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 53 மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலவச சைக்கிள்களை வழங்கினார். 15-வது நிதிநிலை மானியக்குழு சார்பில் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மைப்ப ணிக்காக தலா ரூ.2 லட்சம் மதிப்பில் 9 மின்கல வாகனங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலா, தி.மு.க. வர்த்தக அணி இணைச்செயலர் உமரிசங்கர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ் குமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பிச்சம்மாள் ஆனந்த், துணைத்தலைவர் கவிதா, உறுப்பினர்கள் கிருஷ்ண வேணி, நகராட்சி உறுப்பினர்கள் ஆனந்த ராமச்சந்திரன், சுதாகர், கண்ணன், அந்தோணிட்ரூமன், ரேவதி கோமதிநாயகம், முத்து ஜெயந்தி, லீலா, நகர துணை செயலாளர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம் வழங்குதல் நடைபெற்று வருகிறது.
    • நாளை இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வை குண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம் வழங்குதல் நடைபெற்று வருகிறது.

    சப்பர பவனி

    இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம்,கருட வாகனம், குதிரை, ஆஞ்ச நேயர் என பல்வேறு வாகனங்களில் சப்பரபவனி நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகனத்தில் அய்யா வைகுண்டர் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(திங்கட்கிழமை) பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர். இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார் இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செய லாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரத ராஜபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    ×