search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meta"

    • பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டுள்ளனர்.
    • மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

    சுமார் 5 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர் மார்கடிங் பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் தெரிவித்துள்ளார். இவரது பதிவு மட்டுமின்றி, மேலும் பலர் வெளியிட்டு இருக்கும் பதிவுகளில் இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

    கடந்த மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார். செலவீனங்களை குறைக்கும் நோக்கில் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அங்கமாகவே தற்போதைய பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்கடிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் 11 ஆயிரம் பேர், அதாவது 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் முதல் முறையாக அறிவித்து இருந்தது.

    • புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
    • புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.

    சமூக வலைதள உலகில் மாற்றம் எப்போதும் மாறாத ஒன்று. முன்னணி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், P92 அல்லது பிராஜக்ட் 92 பெயரில் புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சமூக வலைதள சேவை உருவாக்கப்பட இருக்கிறது.

    இந்த சமூக வலைதளம், "Instagram for your thoughts" எனும் டேக்லைன் கொண்டிருக்கிறது. இந்த வலைதளம் பிரத்யேக அம்சங்கள் மற்றும் பயனர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம் மெட்டா மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களிடையே நடைபெற்ற ரகசிய உரையாடல்களை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி புதிய வலைதளம் இன்ஸ்டாகிராமை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த தளம் மாஸ்டோடான் போன்ற சேவைகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு புதிய தளத்திலும் சைன்-இன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இன்ஸ்டாவில் உள்ள ஃபாலோயர்களை புதிய தளத்திலும் சின்க் செய்து கொள்ள முடியும்.

    புதிய சமூக வலைதளம் டெக்ஸ்ட்-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது. மெட்டாவின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராமின் கிளை நிறுவனமாக புதிய வலைதளம் செயல்பட இருக்கிறது. இந்த வலைதளம் டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் தளத்தினை உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் தளமாகவே இருந்து வருகிறது.

    இந்த நிலையில், டுவிட்டர் போன்று செய்திகளை பகிரும் நோக்கில், எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தின் ஆரம்பக்கட்ட சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாத வாக்கில் இந்த வலைதளம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    புதிய வலைதளத்தில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் கொண்ட பதிவுகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் இணைய முகவரிகளை பகிர்வது, புகைப்படம் அல்லது ஐந்து நிமிடங்கள் வரை ஓடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் மற்ற சமூகவலைதளங்களில் இருப்பதை போன்றே, இதிலும் லைக், ரிப்ளை மற்றும் ரிபோஸ்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படுகிறது. 

    • இந்த அம்சம் மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

    மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் பெயரில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.

    தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

     

    "இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.

    வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் சாட் லாக் ஆப்ஷன்களில் பயனர்கள் இதர சாதனங்களில் உள்ள சாட்களை லாக் செய்யும் வசதியை வழங்குவது, பிரத்யேக பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்களை வழங்க மெட்டா திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து உள்ளது.

    • மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
    • இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

    சான் பிரான்சிஸ்கோ :

    கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், டுவிட்டர், பேஸ்புக், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உட்பட பல நிறுவனங்களும் ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன. இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

    பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதை தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.

    இந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக மேலும் 4,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டது.
    • மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.

    பிப்ரவரி மாத வாக்கில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்தது. வெரிஃபைடு கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக எலான் மஸ்க்-இன் டுவிட்டர் தளத்தில் இதே போன்ற கட்டண முறையிலான வெரிஃபிகேஷன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தற்போது அமெரிக்காவிலும் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டு வருகிறது. மெட்டா வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் 11.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    இந்தியாவிலும் இந்த சேவைக்கான வெயிட்லிஸ்ட் ஒன்றை மெட்டா பிளாட்ஃபாரம் துவங்கி இருப்பதாகவும், விரைவில் சந்தா கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், மெட்டா வெரிஃபைடு சந்தா முறைக்கான இந்திய கட்டணம் மொபைலில் மாதம் ரூ. 1,450 என்றும் வலைதளத்திற்கு மாதம் ரூ. 1,099 என்றும் தெரிவித்து இருக்கிறது.

    மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. வெரிஃபைடு சந்தா செலுத்துவோர் ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொடுத்து அக்கவுண்ட்-ஐ வெரிஃபை செய்து கொள்ளலாம். சந்தா செலுத்துவோருக்கு நேரடி வாடிக்கையாளர் சேவை, பதிவுகளை அதிக நபர்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பலன்களை வழங்குகிறது.

    இந்தியாவில் இந்த சேவை தற்போதும் பீட்டா டெஸ்டிங்கிலேயே உள்ளது. மெட்டா வெரிஃபைடு சந்தாவில் இணைய பயனர்கள் வெயிட்லிஸ்ட்-இல் இணைய வேண்டும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது. மெட்டா வலைதளத்தில் இருந்தபடி பயனர்கள் வெயிட்லிஸ்ட்-ஐ இயக்க முடியும்.

    • டுவிட்டரை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் கட்டண முறையில் வெரிஃபைடு சேவையை வழங்க துவங்கியது.
    • டுவிட்டர் மட்டுமின்றி டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களிலும் இதே போன்ற கட்டண முறை அமலில் இருந்துவருகிறது.

    மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. புதிய கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற முடியும். முன்னதாக இதே போன்ற சேவையை எலான் மஸ்க்-இன் டுவிட்டர் அறிமுகம் செய்தது.

    மெட்டா வெரிஃபைடு சேவை பயனர்களுக்கு புளூ பேட்ஜ் மூலம் அக்கவுண்ட்களை அரசு அடையாள அட்டை மூலம் வெரிஃபை செய்கிறது. இதற்கான கட்டணம் வெப் வெர்ஷனில் மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் மாத கட்டணம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    பிப்ரவரி மாத வாக்கில் இந்த சேவைக்கான டெஸ்டிங் துவங்கிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. முன்னதாக ஸ்னாப்சாட் மற்றும் டெலிகிராம் போன்ற சேவைகளிலும் இதேபோன்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சேவையின் மூலம் சமூக வலைத்தள நிறுவனங்கள் வருவாய் ஈட்ட துவங்கி இருக்கின்றன.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது அமெரிக்கா மற்றும் மேலும் சில நாடுகளில் அறிமுகமாகி இருக்கிறது. முறையான அரசு அடையாள அட்டையுடன் மாத சந்தா செலுத்தும் பட்சத்தில் வெரிஃபைடு வசதி வழங்கப்படும்.

    • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பணிநீக்கம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
    • கடந்த ஆண்டு இறுதியில் மெட்டா நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மெட்டா நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றி வருவோரில் பலரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்த நிலையில், மெட்டா நிறுவனம் மேலும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. பணிநீக்கம் பற்றிய அறிவிப்பு வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

    பணிநீக்க அறிவிப்புடன், புதிய முடிவு குறித்து மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் ஏப்ரல் மாத இறுதியில் தொழில்நுட்ப குழுக்களில் பணிநீக்கம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். இந்த நடவடிக்கை காரணமாக மே மாத வாக்கில் பிஸ்னஸ் குழுக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

    "அடுத்த சில மாதங்களில், org தலைவர்கள் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவர். இதில் குறைந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், புதிய ஊழியர்களை பணியில் சேர்த்தல் உள்ளிட்டவைகளை குறைக்கப்பட உள்ளன. குறைந்த பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் எங்களின் பணியமர்த்தும் குழுவை குறைப்பது என்ற கடின முடிவை எடுத்திருக்கிறோம். பணியமர்த்தும் குழு உறுப்பினர்களிடம், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி நாளை அறிவிக்க இருக்கிறோம்," என மெட்டா நிறுவனம் சார்பில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வரும் மாதங்களில் 5 ஆயிரம் ஓபன் ரோல்களை நீக்க மெட்டா முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை பணிநீக்க நடவடிக்கைகள் தொடரும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு அளிப்பது பற்றி மெட்டா தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    • மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
    • சமீபத்தில் தான் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.

    இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

    ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    • ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஊழியர்களில் பெரும்பாலானோரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது.
    • நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்து இருந்தது.

    ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்து இருக்கிறது.

    நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில், தற்போதைய தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய டெக் நிறுவனமாக இருக்கும். இதுபற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்டுகிறது.

    இந்தமுறை பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுபற்றிய செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மெட்டா பதில் அளிக்கவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது.
    • அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

    சான்பிரான்சிஸ்கோ:

    உலகம் முழுவதும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பயனர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதியே இந்த அபராத தொகையை அளிக்க சம்மதித்து உள்ளோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • மெட்டாவின் ஸ்மார்ட்வாட்ச்சில், ஒரு கேமரா டிஸ்பிளேவின் கீழ் பகுதியிலும், மற்றொன்று பின்புறத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
    • ஸ்மார்ட் பேண்டுகளின் தயாரிப்பில் மெட்டா நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இரட்டை கேமராக்களைக் கொண்ட தனது முதல் ஸ்மார்ட்வாட்ச்சின் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிலன் என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த ஸ்மார்ட்வாட்ச், அதன் பெரிய டிஸ்பிளே மற்றும் செயல்பாட்டுக் கண்காணிப்பு, மியூசிக் பிளேபேக் மற்றும் செய்தி அனுப்புதல் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆப்பிள் வாட்சுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இருப்பினும், ஆப்பிள் வாட்ச் போலல்லாமல், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கேமரா அமைப்புடன் அந்த ஸ்மார்ட்வாட்சை மெட்டா நிறுவனம் உருவாக்கி வந்ததாம். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மெட்டா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வந்த அந்த ஸ்மார்ட்வாட்ச்சில், ஒரு கேமரா டிஸ்பிளேவின் கீழ் பகுதியிலும், மற்றொன்று பின்புறத்தில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.


    இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாராகி வந்த இரட்டை கேமரா ஸ்மார்ட்வாட்ச்சின் தயாரிப்பை மெட்டா நிறுவனம் நிறுத்திவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஸ்மார்ட் பேண்டுகளின் தயாரிப்பில் அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து மெட்டா நிறுவனம் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    ×