search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meng Wanzhou"

    அமெரிக்காவின் அழுத்தத்தின்பேரில் கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவன நிதித்துறை தலைமை அதிகாரி மெங் வான்ஜவ் ஜாமினில் விடுதலையானார். #Canadiancourt #HuaweiCFO #MengWanzhou
    ஒட்டவா :

    சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.

    அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்? என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    கைதான உடன் உடல்நலக்குறவை காரணம் காட்டி மெங் வான்ஜவ் மருத்துவமனையில் சேர்ந்தார்.

    அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தது.

    சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங் வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்தது. மெங் வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட தெரிவித்தார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் வான்கோவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது



    இந்த வழக்கில் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடந்துவந்த நிலையில், மெங் வான்ஜவ்-ஐ விடுதலை செய்து வான்கோவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கோடி கனடா டாலர்கள் பிணைத்தொகை மற்றும் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். வான்கோவர் நகரில் உள்ள அவரது ஒரு வீட்டில் தங்கி இருக்க வேண்டும்.

    செல்லும் இடங்களை அடையாளம் காட்டும் ‘ஜி.பி.எஸ்.’ பட்டையை கையில் அணிந்திருக்க வேண்டும். என்ற நிபந்தனைகளுடன் அவரை ஜாமினில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். #Canadiancourt #HuaweiCFO #MengWanzhou
    ஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. #ChinaTelecom #Huawei #MengWanzhou #Canada
    பீஜிங்:

    சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி.

    கடந்த 1-ந் தேதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் வேண்டுகோளின்பேரில் இந்த நடவடிக்கையை கனடா மேற்கொண்டது. வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை, ஹூவாய் நிறுவனம் மீறியதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.

    மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டிருப்பது மனித உரிமை மீறல் என்று சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வான்கூவர் கோர்ட்டில் மெங்வான்ஜவ், கடந்த வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    மெங்வான்ஜவ் சார்பில் தாக்கலான ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்துள்ளது.

    இந்த 2 விவகாரங்களிலும் திங்கட்கிழமை (இன்று) தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அறிவித்தார்.



    இந்த நிலையில் மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று கனடாவை சீனா நிர்ப்பந்தம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக அந்த நாட்டுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று பீஜிங்கில் உள்ள கனடா தூதருக்கு வெளியுறவு துறை துணை மந்திரி லீ யுசெங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனாவின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு அவர் வரவழைக்கப்பட்டுள்ளார்” என கூறிப்பட்டுள்ளது.

    மேலும், “மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்” எனவும் கனடாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், “ அமெரிக்கா சொன்னதற்காக, மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டது, அவரது சட்டப்பூர்வ உரிமைகளை மீறிய நடவடிக்கை ஆகும். இது சட்டத்தை புறக்கணித்த செயல். அர்த்தமற்றது. கைது செய்யப்பட்டுள்ளவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரது சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளுக்கு கனடா பொறுப்பேற்க வேண்டியது வரும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர், “ சீனாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது” என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார். #ChinaTelecom #Huawei #MengWanzhou #Canada
    சீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவன அதிபரின் மகள் மெங்வான்ஜவ் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். #ChinaTelecom #Huawei #MengWanzhou #Canada
    ஒட்டவா:

    சீன நாட்டின் தொலைதொடர்பு நிறுவன அதிபரின் மகள், கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார். இந்த நடவடிக்கை, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்த நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய். இவரது மகள், மெங்வான்ஜவ்.

    இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆவார். இவர் கனடா நாட்டில் வாங்கூவர் நகரில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய தகவலை இப்போதுதான் கனடாவின் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. எனவே அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார்.

    அதே நேரத்தில் மெங்வான்ஜவ் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. அது வர்த்தகப்போராக மாறியது. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி அர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அதில் இரு தரப்பு வர்த்தக போரை நிறுத்தி வைக்க உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, ஜனவரி 1-ந் தேதி முதல் அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீனப்பொருட்களுக்கு அமெரிக்காவும் கூடுதல் வரி விதிக்கப்போவதில்லை. 90 நாட்களுக்கு இது நீடிக்கும். அதற்குள் இரு தரப்பும் பேசி தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இப்போது சீன தொலை தொடர்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டிருப்பது இரு தரப்பு உறவில் மேலும் உரசலை உருவாக்கும்.

    கனடாவின் ஒட்டவா நகரில் உள்ள சீன தூதரகம் உடனடியாக மெங்வான்ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இத்தகைய கைது நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதாகவும், இது மனித உரிமையை மிக மோசமாக பாதிப்பதாக அமைந்துள்ளதாகவும் சீன தூதரகம் கூறி உள்ளது.

    மெங்வான்ஜவ் கைது பற்றி தங்களுக்கு கூடுதல் விவரம் எதுவும் தெரியவில்லை. குற்றச்சாட்டு பற்றி மிகச்சிறிய அளவில்தான் தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஹூவாய் நிறுவனம் கூறுகிறது.

    ஈரான் மீதும், வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளை ஹூவாய் நிறுவனம் மீறியதாக அமெரிக்கா கருதுகிறது. இது தொடர்பாக அமெரிக்கா விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில்தான் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் இந்த விவகாரத்தில்தான் கைது செய்யப்பட்டிருப்பார் என யூகிக்கப்படுகிறது.

    அமெரிக்காவின் பொருளாதார தடைகளை ஹூவாய் நிறுவனம் மீறியதாக எழுந்துள்ள புகார் குறித்து அந்த நிறுவனம் மீது அமெரிக்கா விசாரணையை தொடங்கி உள்ளது என கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் ‘வால்ஸ்டிரிட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.   #ChinaTelecom #Huawei #MengWanzhou #Canada
    ×