search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical camp"

    • கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர்.
    • சிறந்த கன்றுகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் இலவச கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தலைமை கால்நடை டாக்டர் செல்லத்துரை தலைமை தாங்கினார். முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரவேலு தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த முகாமில் கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி, கால்நடை ஆய்வாளர் ராஜி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள், தாது உப்பு உள்ளிட்டவைகளை வழங்கினர். பின்னர் சிறந்த கன்றுகளை வளர்த்த 6 கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சி சகடமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் முன்னிலை வகித்தார்.

    கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

    முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும்எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள்- ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் உதவி டாக்டா்கள் முத்துகுமரன், ராதா, சிவப்பிரியா, ஸ்ரீதர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
    • இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    மதுரை

    கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி அரைஸ் விரிவாக்கத்துறை மற்றும் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மழைகாலங்களில் நோய் பரவுவதை தடுக்க இலவச பொது மருத்துவ முகாம் நத்தப்பட்டி, வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் நடைபெற்றது. வடக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அரைஸ் விரி வாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வரவேற்றார். கணிதவியல் துறைத் தலை வர் ராபர்ட் திலீபன், அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்தி வழங்கினர். கணிதவியல் துறை பேராசிரியர் சஜன் ஜோசப் நன்றி கூறினார்.

    நத்தப்பட்டி முகாமில் கல்லூரி துணை முதல்வர் துரைசிங்கம், பொருளாதாரத்துறை தலைவர் ஜெய ராஜ், கோவிலாங்குளம் ஊராட்சி செயலர் ஜெயபால், பொருளாதாரத்துறை பேராசிரியர் நந்தக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    புள்ளநேரி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கல்லூரி துணை முதல்வர் இன்னாசி ஜான், புள்ள நேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி, ஊரக வியல்துறைத் தலைவர் அம்புதாஸ் அரவிந்த் ஆகி யோர் பங்கேற்றனர். ஊரக வியல்துறை பேராசிரியர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.

    நத்தப்பட்டி முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமையிலும், வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் மருத்துவர்கள் சாந்தினி, பிரியா தலைமையிலான குழுவினர்கள் பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, சர்க்கரை, ரத்த அழுத்தம் குறித்து பொது மக்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாம் நடந்தது.
    • உதவி சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை பேரூ ராட்சிகளின் இயக்ககம் சார்பாக தூய்மைப் பணியா ளர்கள் மேம்பாட்டுத்திட்டத் தின் கீழ் வாடிப்பட்டி பேரூ ராட்சியில் உள்ள முக்கிய தூய்மை பணியாளர்களை அடையாளம் காணும் கணக் கெடுப்பு பயிற்சியும் மருத் துவ முகாமும் நடந்தது.

    இந்த பயிற்சிமுகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்தழகு வரவேற்றார்.

    இந்த முகாமில் தூய்மை பணியாளர்களுக்கான மாதிரி பேரூராட்சிபயிற்றுநர் எபிநேசகென்னடி பயிற்சி யளித்தார். அதன்பின் நடந்த மருத்துவமுகாமில் கச்சை கட்டி அரசுமருத்துவமணை மருத்துவர் செல்வி தலைமை யில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்து ராஜ், சுகாதாரஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், இனிய குமார், சதீஸ் ஆகியோர் பேரூராட்சி பணியாளர் களுக்கு மருத்துவ பரிசோத னை செய்தனர். முடிவில் உதவி சுகாதார பணி மேற் பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.
    • முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுதிறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.

    முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர், வாலாஜாபாத் மேற்பார்வையாளர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நந்தாபாய், அசோக்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொசு மருந்து அடிக்கப்பட்டது
    • ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் மருத்துவ வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொசு பெருக்க த்தால் காய்ச்சல் பரவும் நிலை உள்ளதாக மாலைமலரில் செய்தி வெளியானது.

    இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று முன்தினம் காரப்பட்டு மருந்து வட்டத்திற்குட்பட்ட அடிவாரம் வீராணங்கள் நந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடித்து மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    புதுப்பாளையம் மருத்துவ வட்ட அலுவலர் அலுவலர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராமப் பகுதி முழுவதும் டெங்கு கொசு பெருக்கத்தை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நந்திமங்கலம் கிராம பகுதியில் டெங்கு, மலேரியா உள்பட காய்ச்சல்கள் பரவலை தடுக்க காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கலந்து க்கொண்ட நந்திமங்கலம் கிராம பகுதி பொதுமக்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
    • இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி, அரண்மனைப்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு மருத்துவ முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    இம்முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் மூலம் மாற்றுத்திறன் சதவீதம் குறித்து அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இம்மருத்துவ முகாமில் பங்கேற்ற 58 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மேலும், இதுபோன்று மருத்துவ முகாம்கள் இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்திலும்,நாளை 11-ந்தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளிரோடு உடுமலைப்பேட்டையிலும் நடக்கிறது.

    12-ந்தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , 13-ந் தேதி பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,16-ந்தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வட்டார வளமையம், 17 -ந்தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , 18-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி , 19-ந்தேதி பொங்கலூர் பி.யுவி. என்.தொடக்கப்பள்ளி , 26-ந்தேதி குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி , 27-ந்தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,31-ந்தேதி மூலனூர்அரசு மேல்நிலை ப்பள்ளி மற்றும் 1.11.2023 அன்று திருப்பூர் வடக்கு தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு மருத்துவ முகாம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். எனவே சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டாரங்கள் தோறும் நடைபெறுவதால் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இம்முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
    • கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு கட்டமாக குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அகிலா உத்தரவின் படி தினந்தோறும் குறிஞ்சிப்பா டி வட்டாரத்தி ற்குட்பட்ட கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது. நேற்று கருங்குழி கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலை மையில் சுகாதார ஆய்வா ளர் . கனகரத்தினம் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மேற்கொள்ள பட்டது.காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டா ல் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள டாக்டர்களை அணுகி சிகிச்சை மற்றுமி ஆலோசனை பெற வேண்டும் என வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். கனிமொழி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதேபோல குறிஞ்சி ப்பாடி வட்டாரம் பொன்ன ங்குப்பம் கிராமத்திலும் கொசு ஒழிப்பு பணிகள்

    நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் . ஜெயச்சந்திரன் மற்றும் கலாநிதி ஆகியோர் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொ ள்ள பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு அளிக்க பட்டது. முதிர் கொசுக்களை அழிப்பதற்கு புகைமருந்து தெளிக்கும் பணிகளை வடக்குத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி துவக்கி வைத்தார். 

    • நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
    • தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கைத்தறி உதவி இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி கிராமத்தில் கைத்தறி துறை சார்பாக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நெசவாளர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், கைத்தறி உதவி இயக்குனர் வெங்க டேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து. நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னர்.

    பின்னர் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக நெசவாளர்களை கொண்ட தொகுதி ராஜ பாளையம் தொகுதி தான். தமிழ்நாட்டில் அதிகளவில் காடா நெசவு செய்து கொடுக்கும் தொகுதியாக ராஜபாளையம் தொகுதி திகழ்கிறது. நெசவாளர் களுக்கு நமது முதல் அமைச் சர், மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் களான வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனும், நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னர சும், ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் எப்போதும் உறு துணையாக இருப்போம் என உறுதி கூறினார்.

    இந்நிகழ்வில் பேரூர் சேர்மன் ஜெயமுருகன், தலைமை மருத்துவர் கரு ணாகரபிரபு பேரூர் செயலா ளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க. சார்பில் நாளை நடக்கிறது
    • ரத்த தானம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் பா.ம.க. சார்பில் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை 9-ந்தேதி முத்துக்கடை பஸ் நிலையம் அருகில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் இலவச கண் சிகிச்சை, ரத்ததானம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு பரிசோதனை, சிகிச்சைகள் பெறலாம் எனவும், ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காரைக்குடி அழகப்பா கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 300-க்கும் அதிகமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அழகப்பா கல்வி குழுமத்தின் தாளாளர் டாக்டர் உமையாள் ராமநாத னின் 95-வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண் டாடப்பட்டது. அழகப்பா கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர் கள், ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் ஊழி யர்கள் வரிசையாக அணிவ குத்து குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைர வன், அறங்காவலர் தேவி அலமேலு வைரவன் ஆகி யோரின் வழிகாட்டுதலுடன் டாக்டர் உமையாள் ராமநா தன் அவர்களின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து வணங்கி மரியாதை செலுத்தினர்.

    ஆச்சியின் பிறந்த நாளை நினைவு கூறும் வண்ணம் இலவச மருத்துவ முகாம் அழகப்பா நர்சிங் கல்லூரி யில் நடைபெற்றது. அதில் பொது மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு தொண்டை, மகப்பேறு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், பிசியோதெரபி, கண் மருத்துவம், ரத்தம் தானம் போன்ற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மூலம் ரத்த தான முகாம் நடத்தப் பட்டது. முகாமில் 300-க்கும் அதிகமான பொதுமக் கள் பயன் பெற்றனர். குழும மேலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

    • டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுதிறனாளி மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
    • ஜெகன் பெரியசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுதிறனாளி மாணவ - மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செவித்திறன் கருவி, ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டமணி, பகுதி செயலாளர் ரவீந்திரன், தி.மு.க. பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மண்டல தலைவர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×