search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Master Superintendent Information"

    • பொங்கல் உள்பட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா
    • பார்சல் சேவையானது அனைத்து துணை அஞ்சல் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்பட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா நாட்களில் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் நபர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள், ஆடை, அணிகலன்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கலாம்.சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சேலம் தலைமை தபால் அலுவலகத்தில் பிரத்யேக சர்வதேச பார்சல் சேவை மையம் பண்டிகை காலம் முடியும் வரை இரவு 9 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், சர்வதேச தபால், பார்சல் சேவையானது ஆத்தூர் தலைமை அஞ்சல் அலுவலகம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம்மாப்பேட்டை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், கொண்டலாம்பட்டி, கெங்கவல்லி, பேளூர், வாழப்பாடி, தலைவாசல் உள்ளிட்ட அனைத்து துணை அஞ்சல் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்திய அஞ்சல் துறை மூலம் சர்வதேச பார்சல்கள் குறைவான கட்டணத்தில் விரைவாக சென்று சேருகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச தபால், பார்சல் சேவையை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×