என் மலர்

  நீங்கள் தேடியது "Makkalai Thedi Meyor"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டு பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
  • முகாமில் பிறப்பு, இறப்பு கோரி கேட்கப்பட்ட சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டது.

  நெல்லை:

  நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டு பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வண்ணம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.

  ஆனால் தொலைவில் உள்ள பகுதிகளை சேர்ந்த முதியவர்கள் உள்ளிட் டவர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வர சிரமம் அடைந்தனர். இதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களது குறைகளை கேட்கும் வகையில் 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டத்தை முதன் முறையாக மேயர் சரவணன் தொடங்கினார்.

  இந்த திட்டத்தின் முதல் படியாக இன்று தச்சநல்லூர் பகுதியில் மக்களை தேடி மேயர் திட்டம் அங்குள்ள வரி வசூல் மையத்தில் இன்று நடைபெற்றது.

  இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

  இதில் மண்டலத்திற்குட்பட்ட 1,2,13 மற்றும் 14-வது வார்டு பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

  முகாமில் பிறப்பு, இறப்பு கோரி கேட்கப்பட்ட சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டது. குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாலையில் உரிய பெயர் மாற்றத்துடன் ஆணை வழங்கப்படுகிறது.

  கட்டிட அனுமதி மற்றும் மனை பிரிவு அனுமதி குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டது.

  மேலும் அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மேயர், துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

  தொடர்ந்து மண்டலத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தனர்.

  பின்னர் அங்குள்ள பகுதிகளில் பசுமையான நெல்லையாக மாற்றும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர்.

  ×