search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magic"

    • வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்.
    • இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மகள் தாரணி (25). இவரை அதே பகுதியை சேர்ந்த விஜய் மதுரவேல் (30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் கோபீசன் என்ற மகன் உள்ளான்.

    இந்நிலையில் தார ணிக்கும் அப்பகுதியில் உள்ள அஜித்குமார் என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தாரணி அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தாரணியின் தாய் சசிகலா (47), அவரை அஜித்குமாரிடமிருந்து பிரித்து கூட்டி வந்து கூப்பிட்டாம் பாளையத்தில் உள்ள தனது சகோதரர் கதிர்வேல் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று கதிர்வேல் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு தாரணியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கதிர்வேல், இது குறித்து தாரணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    தாரணியின் பெற்றோர், அவரை பல்வேறு இடங் களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தாரணி தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மதுரையில் வாலிபர் திடீர் மாயமானார்
    • சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் டி.உச்சப் பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது42), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் தாயார் இறந்ததில் இருந்தே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்த ன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

    அவர் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று முத்துகுமரன் ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வருவதாக கூறி சென்றார்.
    • மனைவி விஜி தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆரணி வீதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது55). இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    முத்து குமரன் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று காலை முத்துகுமரன் ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் எங்கும் முத்துகுமரன் இல்லை. இதையடுத்து அவரது மனைவி விஜி தனது கணவர் மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.
    • திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-பழனி சாலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 14ந் தேதி டெல்லியை சேர்ந்த ரோகித்ராய் (வயது22), கமல்ராய் (22), மெகந்தர்ராய் (30), அஜய்ராய் (23), மேக்ராஜ் (60) ஆகிய 5 பேர் திண்டுக்கல்மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மேஜிக் செய்து காட்ட அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் அளித்தனர்.

    ஆனால் இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர்கள் கல்வி அலுவலக வெளியில் இருந்த அறிவிப்பு பலகையில் நாசுருதீன் கையெழுத்தை ஸ்கேன் செய்து பள்ளிகளில் மேஜிக் செய்ய அனுமதி வழங்கப்ப டுவதாக போலியான சுற்றறிக்கையை தயார் செய்தனர். மேலும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்தனர்.

    அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என தெரிய வந்தது. இதனையடுத்து மேஜிக் ஆசாமிகளை பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • காதல் ஜோடி மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது19). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அதே கல்லூரியில் படிப்பவர் சங்கரப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமஜெயம் என்பவரின் மகன் தனுஷ்வரன்(20), மாரீஸ்வரியும், தனுஷ் வரனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி மதியம் வீடு திரும்பவில்லை.

    பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். மாலையில் அவரது சகோதரர் பிரேம்குமாருக்கு செல்போனில் மாரீஸ்வரி அழைத்துள்ளார். கல்லூரியில் உடன் படிக்கும் தனுஷ்வரனை காதலித்த தாகவும், அவருடன் சென்றிருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறினார். இதுகுறித்து பிரேம்குமார் பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தந்தை பாலமுருகன் சங்கரப்பநாயக்கன்பட்டிக்கு சென்று ராமஜெயத்திடம் விசாரித்துள்ளார். அப்ேபாது ராமஜெயம் தனக்கும் இப்போதுதான் தனது மகன் அழைத்ததாகவும் தன்னுடன் படிக்கும் மாரீஸ்வரியை அழைத்து சென்றிருக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து இரு வீட்டாரும் காதல்ஜோடியை பற்றி பலரிடம் விசாரித்தும், அவர்களை பல இடங்களில் தேடியும் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து மகளை மீட்டு தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே பள்ளி மாணவி திடீரென மாயமானார்.
    • சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் அறிவ ழகன். இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது15) மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தில் இருக்கும் வி.கள்ளப்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு தாயுடன் சென்றிருந்தார். சம்பவத்தன்று உசிலம் பட்டியில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று வருவதாக தாயிடம் கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் அதன்பிறகு பிரியதர்ஷினி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாயமான அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.

    • பிரீத்தி (வயது 19) பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • சுபாஷினி(வயது 20). இவர் பிபிஏ 3-ம் ஆண்டு தற்போது நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக் குப்பத்தை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகள் பிரீத்தி (வயது 19). மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர், அன்று மாலை வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பிரீத்தியை போனில் தொடர்பு கொண்டனர் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு போன் தொடர்பை துண்டித்து விட்டதாகவும், அவர் பயன்படுத்திய செல்போன் தொடர்ந்து சுட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் பிரீத்தியன் பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் இவரது மகள் சுபாஷினி (20). இவர் உளுந்தூர்பேட்டை சாரதா குருகுலம் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பூண்டி வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். கடந்த 8-ந்தேதி காலை 11 மணிக்கு தனது வீட்டில் இருந்து கண்டரக்கோட்டை நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.


    • தொழிலாளி மாயமானார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மாலை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (32) இவர்களுக்கு நவீன் குமார் (13) என்ற மகனும் ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரேமா கோபித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ரமேஷ் குழந்தைகளை கவனித்து வந்தார். பலமுறை பிரேமாவை சமாதானப்படுத்த முயன்றபோதும் அவர் கணவருடன் சேர்ந்து வாழ சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரமேஷ் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ரமேஷின் தாய் சாந்தி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே இளம்பெண்-கல்லூரி மாணவர் மாயமானார்கள்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கிலி, டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது22) கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மகாலட்சுமி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் சங்கிலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் கற்பகலட்சுமி. இவரது மகன் கார்த்திகேயன். இவர் அங்குள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 16-ந் தேதி அன்று இவர் திடீரென மாயமானார்.

    இதைத் தொடர்ந்து கற்பக லட்சுமி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்ததில் கார்த்திகேயன் தனது காதலியை தேடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை மீட்டு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் கற்பக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தியூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் அட்டகல்லூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (21). குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக காயத்ரி வீட்டிலிருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து அங்கிருந்து பஸ் மூலம் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி சம்பவத்தன்று காயத்ரியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து அந்தியூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் காயத்ரி கல்லூரி செல்வதற்காக பஸ்சில் ஏறி சென்று உள்ளார்.

    அதன் பின்னர் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை மாயமான தனது மகளை மீட்டுத்தருமாறு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் அங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவி-இளம்பெண் மாயமாயினர்.
    • போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவிகளை ேதடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். மேலும் தையல் வகுப்பிற்கும் சென்று வந்தார்.

    நேற்று வழக்கம் போல் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாணவி மாயமானது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் அவரது தாய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை ேதடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரும்பல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள். இவரது 21 வயது மகள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலை பார்த்தபோது அவர் வீட்டில் இல்லை. மாயமான அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலம்மாளின் மகளும், வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபருடன் மாயமா னாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் 4 ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை ஊழியர் மாயமானார்.
    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் சீனிவாசன் (வயது 18).

    இவர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வேலைக்கு சென்ற அவர் நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் மாயமான சீனிவாசனை தேடி வருகிறார்கள்.
    ×