search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai AIIMS Hospital"

    தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நன்றி தெரிவித்துள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

    கடந்த ஜூன் 20-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரத்து 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.



    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, பாதுகபபு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி.

    மேலும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
    மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை மனுவில் தெரிய வந்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai

    மதுரை:

    தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூர் மற்றும் குஜராத், பீகார், இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இந்த அறிவிப்பின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி தனியார் நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்தது.

    அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில் மத்திய அரசு அனுமதித்த 13 எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகம், குஜராத், பீகார், இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமைய உள்ள மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இவற்றுக்கு கால நிர்ணயமும் நியமிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்குவங்காளம், மராட்டியம், அசாம், ஜார்கண்டில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு குறைந்த அளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIIMS #AIIMSinMadurai

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிறார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள் போன்றவை குறித்து ஆலோசிக்க பா.ஜனதா உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவமூர்த்தி, தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



    கூட்டம் முடிந்ததும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மிகப்பெரிய அளவில் இயற்கை சீரழிவு இல்லாமல் தான் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. காவிரி ஆணையம் அமைத்தல், நீட் தேர்வை அந்தந்த மாவட்டங்களில் எழுதுதல் என தொடர்ந்து மத்திய அரசு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் இங்குள்ள பல கட்சிகள் விமர்சனம் மட்டுமே செய்துவருகின்றன.

    கவர்னரின் சுற்றுப்பயணத்தை தி.மு.க. தேவையில்லாமல் அரசியலாக்குகிறது. கவர்னர் சட்டத்தில் உள்ள சரத்துக்களை அறிவித்து இருக்கிறார். ஆனால் அவர் எங்களை மிரட்டுகிறார் என்கிறார்கள். எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்க இதனை மட்டும் கையில் எடுப்பதால், இவர்கள் மக்கள் திட்டங்களுக்காக பேசமாட்டார் கள் என்று மக்களுக்கே புரிந்துவிட்டது.

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகைதர இருக்கிறார். தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் மட்டுமே அதிபுத்திசாலி என்றும் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை என்ற வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். 20 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் அறிவாற்றலும், உழைப்பாற்றலும், தேசிய பண்பும் பெற்று இருப்பதால் தான் இன்று ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறேன்.

    எனக்கு தலைவராக இருக் கும் தகுதி இருக்கிறதா? என்பதை சொல்வதற்கு அன்பு மணிக்கு தகுதி இருக்கிறதா? என்பது வேறு விஷயம். இவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது அவரால் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்கு கொண்டுவர முடியவில்லை. யார் சுயமுயற்சியில் தலைவரானார்கள்? யார் அவர்களின் தந்தையின் முயற்சியில் தலைவரானார்கள்? என்பது குறித்து விவாதிக்க அன்புமணி ராமதாஸ் தயாரா?

    பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். ஒரு தொலைக்காட்சியில் என்னிடம் கேள்வி கேட்கும்போது, மரம்வெட்டுவதை பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்கிறார் என்று கேட்கிறார்கள். அதற்கு நான், மரம் வெட்டுவதை பற்றி அவர்கள் பேசலாமா? என்று கேள்வி மட்டும் தான் கேட்டேன். உங்களுக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது? அதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?

    இவ்வாறு அவர் கூறினார். 
    எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #BJP #PMK

    சென்னை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி அரசு கொண்டு வந்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையில், இம்மருத்துவமனை அமைவதற்கு பா.ம.க.தான் காரணம் என அன்புமணி ராமதாசும் டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இதனால் டுவிட்டர் தளத்தில் அன்புமணிக்கும், தமிழிசைக்கும் காரசார கருத்து மோதல் வெடித்தது.

    டாக்டர் தமிழிசையை கண்டித்து தமிழக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க. வினர் முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் போலீசார் குவிக்பபட்டனர்.

    சாலையின் 2 பக்கங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பா.ம.க. தொண்டர்கள் இந்தி பிரசார சபா அருகே முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் திரண்டனர்.

    அவர்கள் அங்கிருந்து பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்றனர்.

    அப்போது பா.ஜனதா தொண்டர்கள் 20 பேர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பஸ்சில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் கீழே இறங்கினர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    போலீசார் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் ஆங்காங்கே தள்ளி விட்டனர். பா.ஜனதாவை சேர்ந்த மூர்த்தி என்பவரை போலீசார் பிடித்து வேனில் ஏற்றினர்.


    இதைத் தொடர்ந்து மற்ற தொண்டர்கள் கலைந்து சென்றார்கள். பின்னர் பா.ம.க.வினரை பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    ஏ.கே.மூர்த்தி தலைமையில் சுமார் 150 பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் களேபரம் நடந்து கொண்டிருந்தபோது பா.ஜனதா அலுவலகத்தில் கட்சியின் மையக்குழு கூட்டம் தேசிய செயலாளர் முரளிதரராவ் தலைமையில் நடந்தது.

    மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், நரேந்திரன், தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

     ஏ.கே.மூர்த்தி தலைமையில் பா.ஜனதா அலுவலகம் நோக்கி பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்ற காட்சி. #BJP #PMK

    ×