search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Adalat"

    • ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொது மக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தரப்பி னர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலை யில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கோர்ட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், பிரச்சினைகளை விரைவாக கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளை பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகள் எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சு வார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சி யங்களாக பயன்படுத்து வதில்லை. எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும்.

    மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடை யாது என்பது போன்ற விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.

    • பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன
    • சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு)பி.சிவஞானம் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் பி.திருஞான சம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 234 வழங்கப்பட்டது. இதில் விரைவு நீதிமன்ற அரசு வக்கீல் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், உதயன், வடிவேல், சரவணன் கலந்து கொண்டனர்.

    பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டு பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 11கோடியே 57 லட்சத்து 215 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன.

    முகாமில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் சி.எம்.டி.ஏ. வழக்கறிஞர் பிரசன்ன குமார், கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பல்லவன் மற்றும் அரசு வழக்கறிஞர் அம்ரத் காந்தி உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

    • திருமங்கலம் கோர்ட்டில் நாளை சிறப்பு லோக் அதாலத் நடக்கிறது.
    • மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் நாளை (11-ந்தேதி) சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் நலன்கருதி நடைபெறும் இந்த சிறப்பு லோக் அதலாத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களையும், திருமங்கலம் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல்நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், பிற கோரிக்கைள் தொடர் பாகவும் உடனடியா தீர்வு காண மனுசெய்து உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம்.

    • திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 1,952 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் தீா்வுத் தொகை ரூ.39.12 கோடியாகும்.  

    • வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொண்டனர்.
    • தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    கோவை,

    நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பணி ஆனைக் குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி ராஜசேகர் தலைமையில், நீதிபதிகள் கோவிந்தராஜன், குலசேகரன், முரளிதரன், ராமகிருஷ்ணன், சஞ்சீவி பாஸ்கர், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டக் குழு ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி கங்கா ராஜ் செய்திருந்தனர். இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய கோர்ட்டுகளில் நடந்தது.

    இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் இன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடைபெற்றது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொண்டனர். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொண்டனர்.

    • தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம்.

    கோவை,

    நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது.

    இந்த மக்கள் நீதிமன்றமானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலூர் ஆகிய நீதிமன்றங்களில் நடக்கிறது.

    இதில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணும் வகையில் பல்வேறு அமர்வுகளாக நடக்கிறது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீதி மன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம். இந்த லோக் அதாலத்தை பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண பயன் படுத்திக்கொள்ளலாம்.

    • நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மாவட்டத்தில் மொத்தம் 681 வழக்குகள் முடிக்கப்பட்டன. ரூ.3 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 192க்கு தீா்வு காணப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ஊட்டியில் மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கிக் கடன் தொடா்பான வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன நஷ்ட ஈடு கோரும் வழக்குகள், குடும்ப பிரச்சினை, சம்பந்தமான வழக்குகள், காசோலை வழக்குகள், சிவில் வழக்குகள், தேசிய வங்கிகளின் வாராக் கடன் சம்பந்தமான அனைத்து வகை வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டன.

    இதில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக் குழுவின் செயலாளரும் சாா்பு நீதிபதியுமான சி.ஸ்ரீதா், ஊட்டி உரிமையியல் நீதிபதி ஏ.மோகன கிருஷ்ணன் மற்றும் ஊட்டி குற்றவியல் நீதித்துறை நடுவா் என்.தமிழினியன் ஆகியோா் ஊட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு கண்டனா்.

    அதேபோல, குன்னூா் நீதிமன்ற வளாகத்தில் சாா்பு நீதிபதி எஸ்.சந்திரசேகரன் தலைமையில் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.அப்துல் சலாம் மற்றும் கே.இசக்கி மகேஷ்குமாா் முன்னிலையில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை எடுத்துக்கொண்டு சமரச தீா்வு கண்டனா்.

    கூடலூா் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் ஆா்.ஷஷின்குமாா் தலைமையில் கூடுதல் உரிமையியல் நடுவா் க.பிரகாஷ் முன்னிலையிலும், பந்தலூா் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை நடுவா் டி.சிவகுமாா் மற்றும் என்.சிவசுப்பிரமணியன் முன்னிலையில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீா்வு கண்டனா்.

    கோத்தகிரி நீதிமன்ற வளாகத்தில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் வனிதா முன்னிலையிலும், குன்னூா் மாவட்ட உரிமையியல் நடுவா் ராஜ்கணேஷ் முன்னிலையிலும் வழக்கு களுக்கு தீா்வு கண்டனா். இதில் வழக்காடிகள், வங்கி மேலாளா்கள், மாவட்ட நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

    மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,137 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 652 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. அதேபோல, வங்கி வாராக் கடன் வழக்குகளில் 29 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ.84 லட்சத்து 5 ஆயிரத்து 897. மாவட்டத்தில் மொத்தம் 681 வழக்குகள் முடிக்க ப்பட்டன. ரூ.3 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரத்து 192க்கு தீா்வு காணப்பட்டன.  

    • நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
    • இதில் சார்பு நீதிபதி (பொ) முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.

    இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்கு, காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    இவற்றில் பல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் சார்பு நீதிபதி (பொ) முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.

    • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் இன்று நடைபெற்றது.
    • இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து தாலுகா நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் இன்று நடைபெற்றது.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து சமரச முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    காசோலை தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்கு, விவாகரத்து தவிர்த்த குடும்ப பிரச்சினைகள், தொழிலாளர் நலம், விற்பனை வரி, வருமானவரி, சொத்து வரி உள்ளிட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான லதா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    • விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம்.
    • விபத்து வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில் அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 26-ந்தேதி லோ அதாலத் என்னும்மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் விசாரணைக்குஎடுத்து கொள்ளப்படவுள்ள வழக்குகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட நீதிபதிசொர்ணம் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.விபத்து வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிகளவிலான வழக்குகளுக்கு தீர்வுகாணும் வகையில் அறிவுறுத்தப்பட்டது. இதில்குற்றவியல் நடுவர் புகழேந்தி, மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிபதி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள், வக்கீல்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.
    சென்னை:

    நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத், தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு முறையும், மாநில அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகின்றன.

    லோக் அதாலத்தில், செக் மோசடி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பினரின் சம்மதத்துடன் சுமூக முடிவு எடுக்கப்படும். இதற்காக ஒரு நீதிபதி மற்றும் 2 உறுப்பினர்கள் கொண்ட அமர்வை மாநில சட்டப்பணி ஆணைக்குழு உருவாக்கும்.

    இதுபோன்ற மாபெரும் லோக் அதாலத் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னை ஐகோர்ட்டில், நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணகுமார், கோவிந்தராஜ், பவானி சுப்பராயன், அப்துல் குத்தூஸ், தண்டபாணி, ராஜமாணிக்கம், சுப்பிர மணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், சரவணன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு மதுரை கிளையில் 6 நீதிபதிகள் தலைமையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போல மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழகம் முழுவதும் 468 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அமர்வுகள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில், எத்தனை வழக்குகள் சுமூக முடிவுக்கு வந்துள்ளது என்பது குறித்து மாலையில் தான் தெரிய வரும். #tamilnews
    தமிழகத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் மூலம் 77,785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.262½ கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டு, சப்-கோர்ட்டுகளிலும் நேற்று லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடந்தது. இதில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 77 ஆயிரத்து 785 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 கோடியே 66 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

    தஞ்சாவூரில் நடந்த சாலை விபத்தில் இறந்த தம்பதிக்கு இழப்பீடு கோரி அவரது மகள்கள் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயேந்திரன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் 2009-ம் ஆண்டு அரசு பஸ் மோதி பலியாகினர். விஜயேந்திரனின் இரு மகள்களும் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் ரூ.94 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், விஜயேந்திரனின் இரு மகள்களுக்கும் அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.84 லட்சத்து 39 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்த தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்தது.

    தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்த மெகா லோக் அதாலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ரூ.1 கோடியே 5 லட்சம் இழப்பீடு தர ஒப்புக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து இழப்பீடு தொகைக்கான காசோலையை நீதிபதி சரவணன், விஜயேந்திரனின் மகள்களிடம் வழங்கினார்.
    ×