என் மலர்
நீங்கள் தேடியது "Linking Aadhaar Number with Voter Card"
- தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
- அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பணியில் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்தாண்டு ஆகஸ்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5 சட்டமன்ற தொகுதிகளில் 1,300 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து வருகின்றனர்.
இதில், போதிய முன்னேற்றம் காணப்படாததால் கடந்த 25, 26 ஆகிய 2 நாட்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், கடந்த 25-ந் தேதி 4,595 பேரின் ஆதார் எண்ணும், 26-ந் தேதி 3,994 பேரின் ஆதார் எண்ணும் என்றும் 2 நாட்களில் 8,589 பேரின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் 71 சதவீதம் பேரின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.






