என் மலர்
நீங்கள் தேடியது "lining kurti"
- இல்லத்தரசிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
- இதுவரை யாரும் அறியாத ரொம்பவே பயனுள்ள குறிப்பு.
பெண்களுள் வீடு மற்றும் சமையலறை தான் அதிகம் செலவிடும் நேரமாக இருக்கிறது. இன்று இருக்கும் அவசர உலகில் பெண்களும் வேலை பார்த்து சம்பாதித்துக் கொண்டே தான் வீட்டையும் கவனித்து கொள்கிறார்கள். இந்த எளிய குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் இல்லத்தரசிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். அந்த வகையில் இதுவரை யாரும் அறியாத ரொம்பவே பயனுள்ள குறிப்புகளை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

* புடவை கட்டும் போது சேஃப்டி பின் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும்போது பின் புடவையில் மாட்டிக்கொண்டு புடவையை கிழித்துவிடும். இதனால் விலை உயர்ந்த புடவைகள் கூட கிழிந்துவிட அதிக வாய்ப்புகள் இருக்கும். எனவே அதற்கு மாற்றாக சேஃப்டி பின்னில் ஒரு உருண்டை பாசியை போட்டு வைத்துக்கொண்டால் புடவை அல்லது ஆடைகளில் பின்களை மாட்டும் போது ஆடைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே பின்களில் ஒரு உருண்டை பாசியை எப்போதும் க்ளூ கொண்டு ஒட்டி வைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

* பட்டுப்புடவை அல்லது விலை உயர்ந்த டிஷைனர் புடவைகள் போன்றவற்றை நாம் எப்போதாவது மட்டுமே அணிவது வழக்கம். அதாவது கல்யாணம், கோவில், ஏதாவது பாட்ர்ட்டி போன்ற இடங்களுக்கு செல்லும்போது மட்டுமே அணிந்து செல்வோம். இந்த புடவைகளை நாம் எப்போதாவது தான் சுத்தம் செய்வோம். இதனால் புடவைகளில் உள்ள ஜாக்கெட்களில் வியர்வை நாற்றம் இருக்கும் எனவே அதனை போக்குவதற்காக நாம் வெளியே செல்லும் போது ஜாக்கெட்டுகளில் ஸ்வெட் பேட்ஸ் கடைகளில் கிடைக்கிறது. எனவே அதனை வாங்கி பயன்படுத்தி வந்தால் ஜாக்கெட்டில் வியர்வை படாமல் பாதுகாக்க முடியும்.
* சில சமயம் நாம் சுடிதார் அணியும் போது பேண்ட்டில் உள்ள நாடா உள்ளே சென்று நம்ம எரிச்சல் அடையச்செய்யும். அப்போது எளிதாக பேண்ட் நாடாவை வெளியே எடுக்க ஒரு கத்தரிக்கோல் கொண்டு எடுத்துவிடலாம். பேண்ட்டில் உள்ளே இருக்கும் நாடாவை அதன் வழியாக சிறிய கத்தரிக்கோல் முனையைக்கொண்டு வெளியே எடுத்துவிட முடியும்.
* இப்போது நிறைய பெண்கள் லெகிங்ஸ் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே அதனை வாங்கும்போது உங்களது அளவை விட சற்று பெரியதாக தேர்வு செய்ய வேண்டும். அதாவது எம் என்றால் எல் எடுக்க வேண்டும். எல் என்றால் எக்ஸ்.எல் எடுக்க வேண்டும். அப்போது நிறைய நாட்கள் பயன்படுத்த முடியும். மற்றும் லெகிங்ஸ் வாங்கும் போது முடிந்த வரை நாடாவுடன் கூடிய லெகிங் வாங்கிவது நல்லது.

* அலுவலகம் செல்லும் பெண்கள் தற்போது ரெடிமேட் டாப்களை தான் அதிகம் தேர்வு செய்து வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும்போது நிறைய டாப்களில் நெக் அளவு பெரியதாகவும், இறங்கியும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே நாம் அதனை அதிகம் பயன்படுத்தாமல் இருப்போம். இதனை தவிர்க்க இப்போது சந்தையில் கேமி ஸ்லிப் என்று ரெடிமேட் ஸ்லிப் கிடைக்கிறது. இது கைக்குட்டையை விட சிறிய அளவில் இருக்கும். இது மிகவும் பாதுகாப்பானது. இரண்டு பக்கமும் லேஸ் வைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் பயன்படுத்தும் பிராவின் ஸ்டாப் பகுதியில் மாட்டிவிட்டு பயன்படுத்த வேண்டும். இப்போது நெக் இறங்கி இருக்கும் சுடிதாரை அணிவதற்கு எளிதாக இருக்கும். இந்த கேமி ஸ்லிப்கள் ஒயிட், பிளாக், ஸ்கின் கலர் ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

* சில சமயம் நாம் வாங்கக்கூடிய பிராக்களில் கப் சைஸ் சரியாகவும், ஸ்டாப் சைஸ் அதாவது சுற்றளவு சிறியதாக இருக்கும். இதனால் நாம் பயன்படுத்தும்போது இறுக்கமாக இருக்கும். கொஞ்சம் உடல் எடை அதிகரித்தாலும் இறுக்கமாக இருக்கும். இதனை தடுக்க இப்போது கடைகளில் பிரா எக்ஸ்டண்டர் கிடைக்கிறது. இந்த எக்ஸ்டண்டரை பிரா கொக்கிகளில் மாட்டிக்கொண்டு பயன்படுத்தலாம். இந்த பிரா எக்ஸ்டாண்டர் ஒயிட், பிளாக், ஸ்கின் கலரில் கிடைக்கிறது. இது எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்று.

* அடுத்து நிறைய பெண்களுக்கு பிராக்களை பயன்படுத்தும் போது தோள்பட்டையில் வலி மற்றும் வீக்கம், காயம் ஏற்படுவதுண்டு இதனை தடுப்பதற்காக இப்போது சந்தைகளில் சிலிக்கான் ஸ்டாப் குஷன் என்று புதிதாக வந்துள்ளது. இதனை நாம் பயன்படுத்தும் பிராவின் பட்டைகளில் எளிதாக மாட்டிக் கொள்ளலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது தோள்பட்டையில் ஏற்படும் வலி மற்றும் காயங்களில் இருந்து விடை கிடைக்கும்.
* நாம் கடைகளில் வாங்கு சுடிதாரில் பட்டன் வைத்திருக்கும் இந்த பட்டன்கள் நாளடைவில் உதிர்ந்துவிட வாய்ப்புண்டு. எனவே இதனை தடுக்க சுடிதாரில் உள்ள பட்டன்கள் மற்றும் கற்கள் பதித்த உடைகளாக இருந்தால் அதில் கிளியர் நெயில்பாலிஷ் எடுத்து அதன் மேல் தடவி வைத்தால் கற்கள், பட்டன்கள் உதிர்ந்து விழாமல் இருக்கும். இந்த டிரிக்கை நீங்கள் பயன்படுத்தும் கற்கள் பதித்த பொட்டு மற்றும் கற்கள் பதித்த கிளிப்களிலும் இந்த கிளியர் நெயில் பாலிஷை பயன்படுத்தலாம்.

* சிலசமயம் நாம் ஆசைப்பட்டு சுடிதார் வாங்கி இருப்போம் ஆனால் அதை போட்டு பார்க்கும்போதுதான் அது டிரான்ஸ்பரண்டாக (கண்ணாடி மாதிரி) இருக்கும். இதனை தடுப்பதற்காக லைனிங் குர்தி என்று இப்போது கடைகளில் விற்கப்படுகிறது. இந்த லைனிங் குர்தியும் பல்வேறு கலரில் கிடைக்கிறது. இதனை வாங்கி பயன்படுத்தும்போது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.






