search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshya Sen"

    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.

    துபாய்:

    40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியன் லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 7-21, 21-23 என்ற செட் கணக்கில் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்தார்.இதனால் லக்ஷயா சென் முதல் சுற்றிலே தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடம்பிடித்துள்ளார்.
    • லக்சயா சென் உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறினார்.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (21), முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் சிறப்பான பார்மில் இருக்கும் லக்சயா 25 போட்டிகளில் 76,424 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

    அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

    இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடம்பிடித்துள்ளார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியது.
    • நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியா சார்பில் 25 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹசை எதிர்கொண்டார்.

    இதில் லக்‌ஷயா சென் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

    • பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் கானம்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங் விளையாடினர்.

    முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்‌ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க் வீரருடனான போட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
    • இந்தியாவின் பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தொற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌சயா சென், டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகின் 4ம் நிலை வீரரான சௌ தியென் சென்-னை லக்‌சயா சென் எதிர்கொண்டார். இந்த போட்டியில் லக்‌சயா சென் 16-21, 21- 12, 14-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன் ஆகியோர் மோதினர். இதில் பி.வி.சிந்து 12- 21, 10-21 என்ற நேற் செட்களில் தோல்வி அடைந்தார்.

    நீச்சல் வீரர் ஆர்யன் பயிற்சி பெறுவதற்காக ரூ.8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த  18 வயதான ஆர்யன் நெஹ்ரா சிறந்து விளங்குகிறார். 

    கடந்த 2017ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் அவர் 5 தங்கப்பதக்கங்களை வென்றார்.

    நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக இளையோர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தயாராகுவதற்காக துபாயில் உள்ள அக்வா தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறவேண்டும் என்ற நீச்சல் வீரர் ஆர்யன் நெஹ்ராவின் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கு இந்திய ஒலிம்பிக் பிரிவு இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது.  அவர் பயிற்சி பெறுவதற்காக ரூ.8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ளது. 

    விமானக் கட்டணம், தங்கும் செலவு, பயிற்சியாளர் கட்டணம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவை இத்தொகையில் அடங்கும்.

    இதேபோல், உலகின் முதல்நிலை பேட்மிண்டன் வீரர் விக்டர் அக்சல்சன்னுடன் துபாயி்ல் பயிற்சி பெறவேண்டும் என்ற இந்திய வீரர் லக்சயாசென்னின் கோரிக்கைக்கு ஒலிம்பிக் பிரிவு இயக்க கமிட்டி உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். 

    இந்த மாதம் நடைபெற்ற  தாமஸ் கோப்பை போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற லக்சயா சென்,  மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 5ம் தேதி வரை துபாயில் நடைபெறவுள்ள பயிற்சியில் விக்டர் அக்சல்சன்னுடன்  பயிற்சி பெற திட்டமிட்டுள்ளார். 

    பின்னர், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சியிலும் பங்கேற்க லக்சயாசென் முடிவு செய்துள்ளார். 
    இளையோர் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கான பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். #YouthOlympics2018
    இளையோர் ஒலிம்பிக் தொடர் அர்ஜென்டினாவில் நடைபெற்று வருகிறது. பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சீனாவின் லீ ஷிபெங்கை எதிர்கொண்டார்.



    இந்தியாவின் லக்‌ஷயா சென் சீன வீரரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்பியடைந்தார்.
    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். #LakshyaSen
    புதுடெல்லி:

    ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஜூனியர் உலக சாம்பியன் குன்லாட் விடிட்ஸ்ரனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே கவுதம் தாக்கர் (1965-ம் ஆண்டு), பி.வி.சிந்து (2012-ம் ஆண்டு) ஆகியோர் சாம்பியன் ஆகி இருக்கிறார்கள்.

    உத்தரகாண்ட்டை சேர்ந்த 16 வயதான லக்‌ஷயா சென் கூறுகையில், ‘இந்த போட்டியில் நெருக்கடியின்றி எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குன்லாட்டை வீழ்த்தினேன். தங்கப்பதக்கத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது நிச்சயம் எனது நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும்’ என்றார்.
    ×