search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam"

    27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில், 27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களது குறைகளை நேரில் தெரிவித்துக் தீர்வு காணலாம் என கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

    • டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.
    • கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கும்பகோணம், மணஞ்சேரி, கல்யாணபுரம், பருத்திக்குடி ஆகிய பகுதிகளை கடந்து சென்றது.

    அப்போது கும்பகோணம் விஜயீந்திர மடம் சார்பில் காவிரி படித்துறையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலை ஊற்றி தீபாராதனை காண்பித்தனர்.

    பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    • வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
    • 23-ந்தேதி அன்று கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-

    கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான பொதுக் கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி மற்றும் 23 ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.

    வருகிற 22 ந் தேதி அன்று தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல், வணிக மேலாண்மை மற்றும் புவியியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கும்

    23-ந் தேதி அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    பாபநாசம்:

    தேசிய நெடுஞ்சாலை யான தஞ்சாவூர் முதல் கும்பகோணம் சாலை 2015-ம் ஆண்டு புதியதாக போடப்பட்டது.

    கடந்த 8 ஆண்டுகளில், மராமத்து பணிகள் மட்டும் செய்து வருவதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தும், பகல் நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை, அருகில் வந்து பார்த்து விட்டு, உடனே பக்கவாட்டில் திருப்பும் போது பின் புறம் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

    மேலும், கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரஹ மற்றும் பழமையான கோயில்கள் இருப்பதால், விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு "மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியு ள்ளோம்.

    மிக விரைவில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தஞ்சாவூர்- கும்பகோணம் - அணைக்கரை சாலைகளை மேம்படுத்த ரூ.79 கோடி அனுமதித்துள்ளது.

    இந்நிலையில், புதிய சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    தற்போது பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், வழுத்தூர் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாலைகளின் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வரும் ஜனவரி மாதம் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4, 5-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.
    • 5-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது தந்தை ஜெயராமன் குடும்பத்தினரின் குலதெய்வ கோவிலாகும். துர்கா ஸ்டாலினின் ஏற்பாட்டின்படி இந்த கோவிலில் புதிய ராஜகோபுரம், புஷ்கரணி, கொடிமரம் மற்றும் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தன.

    அதனைத்தொடர்ந்து இந்த கோவிலில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கிரக பிரீத்தி உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில், பிள்ளையார்பட்டி தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மாலை முதல்கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. இதில், துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இன்று (சனிக்கிழமை) 2 மற்றும் 3-ம் கால யாக பூஜையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4, 5-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 5-ந் தேதி காலை கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

    இதனையடுத்து 6-ம் கால யாக பூஜையும், மகா பூர்ணாகுதியும் நடக்கிறது. பின்னர் கடங்கள் புறப்பட்டு காலை 9.25 மணி முதல் 10.25 மணி வரை ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிவேதா முருகன் எம்.எல்.ஏ., ஞானவேலன், முத்து தேவேந்திரன், வீரசுந்தர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக உள்னேன்.
    • இதுகுறித்து அவரிடம் பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லை.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது, நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக உள்னேன். இந்த நிறுவனத்தில் கும்பகோணம் விவேகானந்தா நகரை சேர்ந்த ராஜ்மோகன்(வயது 51) என்பவர் பல ஆண்டுகளாக கணக்காளராக பணியாற்றினார்.இந்த நிலையில் நான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தேன். கடந்த ஆண்டு(2021) ஏப்ரல் மாதம் நிறுவனத்திற்கு தெரியாமல் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்தை கணக்கில் இருந்து ராஜ்மோகன் எடுத்துள்ளார். இந்த நிலையில் கணக்கில் முரண்பாடு இருந்ததால் சந்தேகத்தின் பேரில் வங்கி கணக்கு விவரங்களை எனது மகன் சரி பார்த்துள்ளார்.

    அதில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ.4 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரத்து 600-ஐ ராஜ்மோகன் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் பலமுறை கேட்டும் உரிய பதில் இல்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே ராஜ்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இவர் இன்று காலை இறைச்சி வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

    கும்பகோணம் :

    கும்பகோணம் ஆரோக்கியா சாமி நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர். இவருடைய மனைவி சந்திரா (வயது 68). இவர் இன்று காலை இறைச்சி வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .

    அப்போது கும்பகோணம் ஸ்ரீதர் காலனியில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் 2பேர் சந்திரா கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை அறுத்து சென்றனர்.

    இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.
    • கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பா.ம.க 34ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட ஊராட்சியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஒன்றிய சார்பில் பொதுக்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பொதுக்குழு கூட்டத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும், கும்பகோணம் மாநகராட்சியிலிருந்து வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் காவிரி ஆறு மற்றும் நாட்டாற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடுகிறது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதுஎன்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்ப ட்டன.

    இதில் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், முன்னாள் மாவட்டசெயலா ளர் ரவிச்சந்திரன்,மாவட்ட தலைவர் திருஞா னம்பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் கோதை கேசவன், மாவட்ட துணை செயலாளர் அரங்க நாகப்பன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் அமிர்த கண்ணன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் வினோத், உழவர் பேரி யக்கம் மாவட்ட செயலாளர் கருணாகரன் தேவர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணைத் தலைவர் பக்கிரி சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இதுகுறித்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
    • சாலை மறியல் போராட்டத்திற்கு வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களது ஏழ்மை நிலை கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2016-ம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறி வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கும்ப கோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் மொட்டை கோபுரம் வாசல் பகுதியில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு வாடகைக்கு குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். போக்குவரத்து பாதிப்பு இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உங்கள் கோரிக்கை குறித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுங்கள் என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆனால் இழப்பீடு தொகை குறைவாக வழங்குவதாக கூறி விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இழப்பீடு தொகை குறைவாக வழங்குவதாக கூறி விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.

    • உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.
    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    சுவாமிமலை:

    இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் உலக மிதிவண்டி தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.

    இந்த பேரணியை அன்பழகன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடக்கி வைத்தார். கும்பகோணம் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தார். விழாவிற்கு வி.ஏ. ரோசரியோ செஞ்சிலுவை சங்க துணை தலைவர் தலைமை தாங்கினார்.

    கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் விஜயபாலன், ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சிவக்குமார், பெஞ்சமின் கலந்து கொண்டனர். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாராமன் மகன் பிரவீன் (27). இவர் கடந்த 14-ந்தேதி வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த 14 ந்தேதி மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இதே போல் கும்பகோணம், செம்போடையை சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் வைரவேந்தன் (26), இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார் கடந்த 14 ந்தேதி இரவு மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இது குறித்து பிரவீன் மற்றும் வைரவேந்தன் ஆகியோர் மேற்கு போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, தாராசுரம், எலுமிச்சங்கா பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தீனதயாளன் (28), மாரி முத்து மகன் தாமோதரன் (24) மற்றும் மதுக்கூர், ராமானந்தபுரத்தை சேர்ந்த ரவி மகன் சிவபாரதி (20) ஆகியோரை கைது செய்தனர்.

    ×