search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KL Rahul"

    • ரோகித், கேஎல் ராகுல், சுனில் ஷெட்டி ஆகியோர் ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர்.
    • அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    ஐபிஎல் தொடர் 2024 இன்னும் 2 தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் வந்து விட்டால் பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த முறை ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அவரது மாமனார் சுனில் ஷெட்டி ஆகியோர் ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்களில் ஒருவரான ட்ரீம் 11 இன் விளம்பரங்களில் நடித்து உள்ளனர். அந்த விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அந்த விளம்பரத்தில் ரோகித் மற்றும் சுனில் ஒரு மேஜையில் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். அப்போது அங்கு வந்த கேஎல் ராகுல் மீதமுள்ள ஒரு நாற்காலியில் உட்கார முயல்வார். உடனே ரோகித், இது குடும்ப உணவு சாப்பிடுகிறோம் என கூறுவார். உடனே ராகுல் சோகத்துடன் சுனில் ஷெட்டியை பார்த்து அப்பா என்று கூற உடனே சுனில் ஷெட்டி நோ அப்பா. ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிவிட்டது. சர்மா தான் என் மகன். சர்மா ஆப்பிள் சாப்பிடு என அன்போடு ஊட்டிவிடுவார் ஷெட்டி. இதை பார்த்த ராகுல் கவலையுடன் அந்த இடத்தில் இருந்து நகர்வார்.

    இந்த விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்னும் நிறைய விளம்பரம் இது போன்று நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
    • காயம் காரணமாக கடைசி நான்கு போட்டிகளில் இருந்து விலகினார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அந்த அணியின் கேப்டன் ஆவார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் குறித்து வெளிநாட்டு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்வில்லை.

    பெங்களூருவில் உள்ள பிசிசிஐ கிரிக்கெட் அகாடமியில் உடற்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஐபிஎல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கும் நிலையில் நாளை லக்னோ அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 21 அல்லது 22-ந்தேதிதான் அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. இன்று பெங்களூருவில் இருந்து அவர் லக்கோ அணியில் இணைவதற்காக புறப்படமாட்டார் எனத் தெரிகிறது.

    நாளைமறுதினம் ஐபிஎல் அணி கேப்டன்கள் போட்டோ எடுப்பதற்கான ஒன்று கூடுவார்கள். எனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன்பின் லக்னோ அணியுடன் இணைவார் எனத் தெரிகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வருகிற 24-ந்தேதி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்குகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

    20.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
    • 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார்.

    லக்னோ:

    இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது கேப்டன் மற்றும் துணை கேப்டன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடர்வார். அவர் லக்னோ அணி ஆரம்பிக்கப்பட்ட சீசனிலிருந்தே அதன் கேப்டனாக செயல்படுகிறார்.

    கடந்த வருட ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக கேஎல் ராகுல் விலகிய நிலையில் துணை கேப்டனான குர்ணால் பாண்ட்யா அணியை வழிநடத்தினார். அவர் 6 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றினார். இந்நிலையில் இந்த ஆண்டில் லக்னோ அணியின் துணை கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரனும் செயல்படுவார்கள் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
    • ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.

    அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
    • முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

    பணிச்சுமை கருதி பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர்கள் இருவரும் விலகிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், கே.எஸ்.பாரத், படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அகாஷ் தீப்.

    • முதல் போட்டியின்போது கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.
    • 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில், கடைசி 3 போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பு.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது

    இதனால் இரண்டாவது போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயம் சரியாகி உடல் தகுதி பெற்றதால் அடுத்த மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தார்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் ராஜ்கோட்டில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் நூறு சதவீதம் உடல் தகுதி பெறவில்லை என்பதால் முழுமையாக குணமடைவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    23 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஆன தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் இடம் கிடைத்துள்ளது. தேவ்தத் படிக்கல் பஞ்சாப் அணிக்கெதிராக 193 ரன்களும், கோவா அணிக்கு எதிராக 103 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்சில் 105, 65, 21 என ரன்கள் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா ஒரு வலிமையான அணியாகும்.
    • மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆட வில்லை.

    இந்த நிலையில் கே.எல்.ராகுல், ஜடேஜா வருகையால் இந்திய அணி வலிமை பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா ஒரு வலிமையான அணியாகும். அவர்களுக்கு திறமையான கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். காயத்தில் இருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரும் இந்திய அணியை வலிமைப்படுத்துவார்கள்.

    ஆனால் விராட்கோலி எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்பது இந்திய அணிக்கு இழப்பே. தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் திறமையை மிகைப்படுத்தி மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறனை அதிகமாக மதிப்பிட கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
    • இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் விலகி உள்ளனர்.

    அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

    • ஜடேஜா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 4 விக்கெட் சாய்த்தார்.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் (80), கே.எல். ராகுல் (86) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது.

    ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் வெளியேறினார்.

    கடைசி விக்கெட்டுக்க அக்சர் பட்டேல் உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றபோதிலும் 44 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோடி ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
    • தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஐதராபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார். தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு மற்ற இரண்டு வீரர்களிடையே (கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல்) போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்கா அணி 2வது நாள் முடிவில் 11 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 5 ரன்னில் அவுட்டானார். சோர்சி 28 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு டீன் எலருடன் ஜோடி சேர்ந்த டேவட் பெடிங்காம் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சென்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார்.
    • கடந்த 2021-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 123 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கடுமையாக போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். -

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்தார்.

    அதை விட கடைசியாக இதே மைதானத்தில் கடந்த 2021-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் குவித்த அவர் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அந்த வரிசையில் தற்போது இப்போட்டியிலும் சதமடித்துள்ள அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சென்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அனைவரும் சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்சமாக தலா 1 டெஸ்ட் சதம் மட்டுமே அடித்துள்ளனர். தற்போது கேஎல் ராகுல் மட்டுமே 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரராக சாதனை படைத்துள்ளார்.

    ×