search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi birthday"

    • தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை 100 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மதுரை தெற்கு மாவட்டத்தில் 100 நாள்கள் தொடர்ந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மற்றும் தேனி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அல்லது கூட்டணி வேட்பா ளர்களின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட்டு அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் அவர்களை வெற்றி பெற செய்யவேண்டும். உறுப்பி னர் சேர்க்கையில் திருமங்க லம் தொகுதி தலைமை அறிவித்த இலக்கை தாண்டி சாதனை படைத்து உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்தவர் களும் இலக்கை தாண்டி புதிய உறுப்பி னர்களை சேர்க்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டி, துணை செயலாளர் லதாஅதியமான், திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, மதன்குமார் பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொருப்பாளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், நகர துணை செயலாளர் செல்வம், இளைஞரணி கௌதம், ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந்தேதி வருகிறது.

    இந்த ஆண்டு கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா என்பதால் தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.

    ஊர்கள் தோறும் தி.மு.க. எனும் தலைப்பில் கொடிக் கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குவது தி.மு.க. குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம் பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    3-ந்தேதி சென்னை புளியந்தோப்பில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    இதே போல் அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள் அரசு ஊழியர்கள் பயன் அடைந்த மக்கள் ஆகியோரை இணைத்து விழாக்களை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதன் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலட்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் தலைமைச்செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும்.
    • அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கட்சி சார்பில் ஒரு வருடம் கொண்டாட முடிவெடுத்து உள்ள நிலையில் அரசு சார்பிலும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். அதே நேரத்தில் அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழா என்பது கலைஞர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும்.

    நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். எனவே அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாவாக இந்த விழாவை நடத்த வேண்டும்.

    5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்தவர் தலைவர் கலைஞர். 13 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். தமிழக மேல்-சபை உறுப்பினராகவும் அமர்ந்து அரிய விவாதங்களை எடுத்து வைத்தவர்.

    அவர் தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாது இந்திய அரசியல் திசையை தீர்மானிப்பவராகவும் இருந்தவர். முதல் முறையாக அவர் ஆட்சிக்கு வந்த போது, கூறிய வார்த்தை நான் முதலமைச்சராக இருந்தாலும் அங்கிருந்தபடியே குடிசைகளை பற்றி சிந்திப்பேன் என்றார். தன்னுடைய ஆட்சிக்கு 3 இலக்கணம் இருப்பதாக கலைஞர் கூறுவார்.

    சமுதாய சீர்திருத்த தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு இவை மூன்றும்தான் ஆட்சியின் இலக்கணமாக இருந்தது.

    அந்த இலக்கணத்தின் அடிப்படையில் தான் ஆட்சி நடத்தினார். அதனால் அனைத்து துறைகளும் ஒரு சேர வளர்ந்தது.

    அன்னை தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி, ஒன்றிய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம், மகளிருக்கு சொத்தில் சமஉரிமை சட்டம், சமூகநீதி உரிமைகள், உழவர்களுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி கடன் ரத்து, சென்னை தரமணியில் டைடல் பார்க் என பல்வேறு சாதனை திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    மொத்தத்தில் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் என்று சொன்னால் அது மிகையாகாது.

    கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளதால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நூற்றாண்டு விழா, தலைமைக்குழு, விழாக்குழு, மலர்க்குழு, கண்காட்சி குழு போன்ற குழுக்கள் அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    கலைஞர் ஆற்றிய நலத்திட்டங்களை பட்டியலிட்டு நிகழ்ச்சிகள் அமைய வேண்டும்.

    ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும். எனவே அமைச்சர்கள் குழுக்களுடன் அடிக்கடி கலந்து பேசி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்து நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளதால் அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூன் 3-ந்தேதி வடசென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜூன் 3-ந்தேதி வடசென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    • ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
    • 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு இடத்தில் மூடினாலும் இன்னொரு இடத்தில் திறந்து விடுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.
    • தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.

    அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயின்ற தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம். பி. பர்வீன் சுல்தானா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேலு மற்றும் பகுதி கழக செயலாளர் எஸ். முரளி, எஸ்.ராஜசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார்,மண்டல தலைவர்கள் கூ.பி. ஜெயின் சோ வேலு, டி, எஸ்.பி ராஜகோபால், கவுன்சிலர்கள் வே. பரிமளம், பி.ஸ்ரீராமுலு, இசட். ஆசாத், ராஜெஷ் ஜெயின், கே.சரஸ்வதி பகுதி செயலாளர்கள் சுதாகர், முரளிதரன், ஏன், நாகராஜன், டிஎஸ்பி எம்.டி.ஆர் நாகராஜ், செ. தமிழ்வேந்தன், என். சாமி, வே.வாசு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் டி.வி செம்மொழி, எம், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் டீ. தம்பிதுரை, ஜி.பாலாஜி எஸ்.எம் ஹாஜி,எம்.எம். மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பார்த்திபன், கே. கவியரசு ஆகியோர் நன்றி கூறினர்.

    • சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் “குறளோவியரின் புகழரங்கம்” என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது.
    • பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்தநாள் விழா "வேருக்கு விழா" என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் "குறளோவியரின் புகழரங்கம்" என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. கே.ஜார்ஜ்குமார் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், சங்கரி நாராயணன், சரிதா மகேஷ்குமார், தேவஜவகர், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், எஸ்.பன்னீர் செல்வம், எம்.தாவுத்பீ, துரைகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ந.பொன்முடி நன்றி கூறினார்.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாள் விழா வருகிற 3-ந்தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.

    இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை தென்சென்னை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விழாவுக்காக 120 அடியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. அதை 3 மேடைகளாக வடிவமைக்கிறார்கள். நடுமேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்வார்கள்.

    இன்னொரு மேடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் அமர்வார்கள். மற்றொரு மேடையில் புதிதாக வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.

    மேடையின் முன்பு 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அதேபோல் 100 அடி உயரத்தில் தி.மு.க. தலைவரின் வண்ண மின்விளக்கு கட்-அவுட் அமைக்கப்படுகிறது.

    மேலும் 70 அடி உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் உதயசூரியன் வடிவ ஒளி விளக்குகள் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் மேடை அருகில் 70 அடி உயரத்தில் 12 கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இடம் பெறுகிறது. இந்த கம்பங்களில் ஏற்றுவதற்கான அனைத்து கட்சிகளின் கொடிகளும் பூனாவில் தயாராகி வருகிறது.

    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு உள்ளது. 45 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த வளைவையும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கின்றனர். அந்த பணிகளை மாவட்ட செயலாளரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அவருடன் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கூடலூர் மற்றும் கீரனூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    பெரம்லூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கூடலூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க செய லாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முத்துக்கண்ணு, கோகிலா சேகர், கோபால், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஊராட்சி செயலாளர் சாமி துரை வரவேற்றார். மாநில மாணவரணி இணைச் செயலாளர் கோவி.செழியன், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செய லாளர் துரைசாமி, மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் வல்லபன், மாவட்ட துணைச் செய லாளர்கள் ராஜ்குமார், பாஸ்கர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். முடிவில் ஒன்றிய  இளை ஞரணி அமைப்பாளர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.

    தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கிள்ளுக் கோட்டை மற்றும் கிள்ளனுர் தி.மு.க  சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  குன்றாண்டார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர்  சேட்டு தலைமை தாங்கினார். புதுக் கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தி.மு.க. கொடி ஏற்றி வைத்து பேசினார். 

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன், ஆரணிமாலா, மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், செல்வம், கீரனூர் நகர பொறுப்பாளர் வக்கீல் அண்ணாதுரை, குளத்தூர் மணிராஜன், பேராசிரியர் குறிஞ்சி வாணன் ஆகியோர் பேசினர். முடிவில் தி.மு.க தகவல் தொழில்நுட்பதுறை ஜெயராஜ் நன்றி கூறினார்.
    நாமக்கல் மேற்கு மாவட்டம் கபிலர் மலை ஒன்றியம் பொருங்குறிச்சி ஊராட்சியில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மேற்கு மாவட்டம் கபிலர் மலை ஒன்றியம் பொருங்குறிச்சி ஊராட்சியில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதநிதி மாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். 

    தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி. சரத்பாலா சிறப்புரையாற்றினார், கூட்டத்தில் பரமத்தி ஒன்றிய செயலாளர் பி.பி.தனராசு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் டி.விஜயகுமார், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சரவணகுமார், முன்னால் அன்பழகன், ஊராட்சி செயலாளர்கள் ராமசாமி, ராமலிங்கம், சுப்பிரமணி, கந்தசாமி, வேல்முருகன், ஒன்றிய இளைஞர் அணிஅமைப்பாளர் மோகன்ராஜ் கலந்து கொண்டனர். 

    முடிவில் எம்.துரைசாமி நன்றி கூறினார்.
    தி.மு.க. தலைவர் கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    சென்னை:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் மற்றும் கலையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று இரவு பெங்களூரு புறப்பட்டு சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலைஞருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, எப்பவும் தள்ளி நின்று வாழ்த்து சொல்லும் ரசிகன் நான். பலமுறை பிறந்தநாள் முடிந்தும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து கூறியுள்ளேன், இம்முறையும் அதேதான் என தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    தி.மு.க. தலைவர் கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் என குறிப்பிட்டுள்ளார். #Rajinikanth #karunanidhibirthday
    சென்னை:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் மற்றும் கலையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை சுமார் 6 மணியளவில் தனது டுவிட்டர் பக்கத்தில் கலைஞருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ‘நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #Rajinikanth #karunanidhibirthday
    ×