search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanipakam vinayaka Temple"

    • நாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்கள்.
    • பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும், இடையூறும் ஏற்படக்கூடாது.

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. அதையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி, கோவில் செயற்பொறியாளர் வெங்கட்நாராயணா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து கோவில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் பங்கேற்றுப் பேசுகையில், ஆங்கில புத்தாண்டையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும், இடையூறும் ஏற்படக்கூடாது. தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் மையங்கள், கவுண்ட்டர்கள், வி.ஐ.பி.களுக்கான வசதி ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.

    கூட்டத்தில் கோவில் துணை நிர்வாக அதிகாரிகள் எஸ்.வி. கிருஷ்ணாரெட்டி, ரவீந்திரபாபு, வித்தியாசாகர்ரெட்டி, மாதவரெட்டி, ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்யப்பட்டது.
    • சாமி படம், பிரசாதம் வழங்கினர்.

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் பங்கேற்று பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்த அவர்களை, காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சாமி படம், பிரசாதம் வழங்கினர். அப்போது காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கும்பாபிஷேகம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கியது.

    முதல் நாளான நேற்று வேத ஸ்வஸ்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், சத்துருவேத ஆவாஹனம், மந்திரபுஷ்பம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் செயற்பொறியாளர் வெங்கட் நாராயணா, கோவில் துணை ஆணையாளர் கஸ்தூரி, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

    21-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்கிறார்.

    ×