search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamaraj People Security Peramaippu"

    • சிறு மற்றும் குறுவியாபாரிகளை ஒழிப்பதற்கான ஒரு மறைமுக ஆயுதம் ஆகும்.
    • சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    திருப்பூர்:

    காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநிலத் தலைவர் எஸ் .வி .பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு சிறு மற்றும் குறுவியாபாரிகளை ஒழிப்பதற்கான ஒரு மறைமுக ஆயுதம் ஆகும். காரணம் அறிவிப்பில் 10 நபர்களுக்கு மேல் வேலை செய்யும் பெரிய கடைகள் மட்டுமே 24 மணி நேரமும் செயல்பட அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த அறிவிப்பினால் சிறிய அளவிலான தனது குடும்ப நபர்கள் அல்லது ஒருவரோ இருவரோ வேலை செய்யும் அளவிலான சிறிய மற்றும் நடுத்தர கடைக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படுவர்.

    ஏற்கனவே கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி அதிலிருந்து மீளமுடியாமல் பல்லாயிரக்கணக்கான சிறு வணிகர்கள் வாடகை கூட தர இயலாமல் தங்களது கடைகளை காலி செய்துவிட்டு வாழ்வாதாரமின்றி பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் 10 நபர்கள் வேலை செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி என்பது சிறு வணிகர்களின் குரல்வளையை நெரிக்கும் செயல் ஆகும்.

    ஆகவே தமிழக முதல்வர் இந்த அறிவிப்பினை திரும்பப் பெற்று பாரபட்சமின்றி பெரிய சிறிய மற்றும் நடுத்தரமான அனைத்து கடைகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என அறிவித்து சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×