என் மலர்

  நீங்கள் தேடியது "kamalavathy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • மாணவர்களுக்கான மனநல ஆலோசகரை நியமித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவது சிறந்த முன்னுதாரணமாகும்.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது.

  பொன்விழா

  சாகுபுரம் டி.சி.டபுள்யூ. தொழிற்சாலையின் நிறுவனரான சாகு சிரியான்ஸ் பிரசாத் ஜெயின் கிராமப்புற மாணவர்களும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துடன் கூடிய சிறந்த கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமது துணைவியார் கமலாவதி பெயரில் தொடங்கிய இந்த பள்ளியின் 50-வது ஆண்டுவிழா பொன்விழாவாக கொண்டாடப்பட்டது.

  விழாவிற்கு பள்ளியின் அறங்காவலரும், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவருமான ஜி.சீனிவாசன் தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் சுப்புரத்தினா வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் அனுராதா அறிக்கை வாசித்தார்.

  ஆலோசனைகள்

  தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் டி. கே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

  சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி இன்று பொன்விழா கொண்டாடும் இந்த தருணத்தில் 75-வது சுதந்திர தின விழாவும், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

  இங்கு கல்வியுடன் விளையாட்டு, கலை, இலக்கியம், ஒழுக்கம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

  மாணவர்களுக்கான மனநல ஆலோசகரை நியமித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவது சிறந்த முன்னுதாரணமாகும். இதனை அனைத்து பள்ளிகளும் கடைப்பிடித்தால் நன்மையாக இருக்கும்.மாணவர்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே கணினி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதனை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  பள்ளி டிரஸ்டியும், டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த பொது மேலாளருமான ராமச்சந்திரன், மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ் ஆகியோரும் பேசினர்.

  விழாவில் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மற்றும் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர். நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

  தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசிர் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி மதன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

  ×