search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamal Haasan"

    • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
    • எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

    நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.

    தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.

    ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.

    எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.
    • வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

    இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் - 2' படத்தை இயக்க தொடங்கினார்.

    இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.




    தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தற்போது 'இந்தியன்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    எனவே விரைவில் இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல்  முடிந்ததும் இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டது.

    இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் ஜெயம்ரவிக்கு பதிலாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது
    • இதனைத் தொடர்ந்து 'தக் லைப்' படத்தில் கமல்ஹாசனுடன் விரைவில் அவர் நடிக்கிறார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி கமல் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.




    இப்படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இதையொட்டி கமல் ரசிகர்கள் இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்

    இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்தி நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ,ஆகியோர் சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிப்பதற்கு படக்குழு வேறு நடிகர்களை தேடி வந்தது. அதை தொடர்ந்து சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசியது.

    இந்நிலையில் ஜெயம்ரவிக்கு பதிலாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அருண் விஜய் கையெழுத்திட உள்ளார்.

    தற்போது அருண்விஜய் பாலாவின் 'வணங்கான்' படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து 'தக் லைப்' படத்தில் கமல்ஹாசனுடன் விரைவில் அவர் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இளவயது மரணங்களின் வேதனை பெரிது.
    • பாலாஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை :

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.

    இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார்.
    • சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து கமல்ஹாசன் தங்கினார்.

    சேலம்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார்.

    இதே போல் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலை பிரசாரம் செய்தார். பின்னர் அவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ள அதே ஓட்டலுக்கு வந்து தங்கினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து பேசினார். பின்னர் கமல்ஹாசன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    • தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
    • கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா.

    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் வடகரா பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணி சார்பில் முன்னாள் மந்திரி கே.கே.சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இந்த முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த சமயத்தில் கே.கே.சைலஜா போன்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று நமது குரலை எதிரொலிப்பது அவசியம்.

    கொரோனா பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பரவியபோது, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா. மனம் தளராமல் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து மக்களை காப்பாற்றினார். தேர்தலில் கே.கே.சைலஜா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் பிரசாரம் தொடங்கினார்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பிரசாரம் தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், ஈரோட்டில் எனது பிரசாரத்தை தொடங்க பெரியார் ஒரு காரணம். ஈரோட்டில் இடைத்தேர்தலின் போது நான் இங்கே வந்தபோது நீங்கள் காட்டிய அன்பும் மற்றொரு காரணம். பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் தியாகம் என கூறுகிறார்கள். ஆனால் அது தியாகம் அல்ல, வியூகம். தமிழ்நாடு காக்கும் வியூகம் என தெரிவித்தார்.

    • தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,

    திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை கமல்ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில்,"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க" என்று பதிவிட்டுள்ளளார்.

    • 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

    அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 40 பேர் உள்ளனர். இதில் நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    த.மா.கா. பட்டியலில் ஜி.கே.வாசன், சுரேஷ், சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாஷா, ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    பாரதிய ஜனதா பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன், யோகி ஆதித்யாநாத் பெயர்களுடன் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தமிழருவி மணியன், எச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    காங்கிரஸ், பா.ம.க. கட்சிகள் இதுவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்கவில்லை.

    • போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது
    • இப்படத்தில் இடம் பெற்ற வலையோசை என்ற பாடல் கிளாசிக் பாடல்களின் வரிசையில் இணைந்தது

    உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1988ல் வெளிவந்த சத்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இளையராஜா இசையில், இப்படத்தில் இடம் பெற்ற வலையோசை என்ற பாடல் கிளாசிக் பாடல்களின் வரிசையில் இணைந்தது.

    அண்ணாமலை , பாட்சா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம் இந்த சத்யா தான். 1985-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த அர்ஜுன் என்ற திரைப்படத்தின் ரீமேக் படம் தான் இந்த சத்யா.

    கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் நாளை ( 28- ந் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
    • இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். கண்டிப்பாக விருது பெறும்"

    மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது. இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.

    படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.




    இந்நிலையில் இப்படம் நாளை ( 28- ந் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ' பிரபலங்களுக்கு போட்டு காட்டப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.

    அதன் பின் நடிகர் கமல் படம் பற்றி கூறியதாவது ;-

    ''தி கோட் லைப்' படம் பார்த்து மனம்குளிர்ந்து உள்ளேன். இந்த படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் வெகுசிறப்பாக அமைந்து உள்ளது. இதில் நடித்த நடிகர்கள் மிகுந்த 'சிரமம்' எடுத்து நடித்து உள்ளனர்.




    இப்படத்தில் நடித்துள்ள நடிகர்,நடிகைகளுக்கு எனது மனதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குரியது. இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். இந்த படம் கண்டிப்பாக விருது பெறும்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
    • தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

    இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.

    அதற்கேற்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்தார். இதனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூலமாக கமல் கட்சிக்கு குறிப்பிட்ட இடங்கள் கிடைக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.


    ஆனால் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தைகூட கமல்ஹாசனுக்கு கொடுக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் மற்ற கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டு கொடுக்கவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

    காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போதே கமல்ஹாசனுக்கும் சேர்த்து தொகுதிகளை பேசி இருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்பதே அரசியல் நிபுணர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

    இப்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியே காரணம் என்கிற எண்ணம் அக்கட்சியினர் மத்தியில் பரவலாகவே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட இழு பறிக்கு பிறகு கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளார்.

    இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனோ தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்து உள்ளார்.


    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசனின் சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

    வருகிற 29-ந்தேதி கமல்ஹாசன் தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அன்று பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் மறுநாள் (30-ந்தேதி) சேலத்திலும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஏப்ரல் 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் 3-ந்தேதி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் பிரசாரம் செய்கிறார். அன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பேசும் அவர் மறுநாளும் (7-ந் தேதி) சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலேயே பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து மதுரையில் 10-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல் 11-ந் தேதி தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    ஏப்ரல் 14-ந்தேதி திருப்பூரிலும், 15-ந்தேதி கோவையிலும் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்.

    இறுதி நாளான ஏப்ரல் 16-ந்தேதி பொள்ளாச்சியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல்ஹாசன் அத்துடன் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு முடிவடைந்த பிறகு தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்கள். தற்போது அவர்களது தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசன் தனது சுற்றுபயண திட்டத்தை வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 11 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்ய மறுத்திருப்பது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ×