search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallidaikurichi"

    • அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது
    • 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்ப ப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்புறம் புதிதாக வர உள்ள மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே இருக்கும் பழைய கடையை அகற்றவும் அம்பாசமுத்திரம் ரெயில்வே கேட் பஸ் நிலையம் அருகில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத்தொகுதி பா.ஜ.க. சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கடிதங்களை கலெக்டருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    நிகழ்ச்சியில் அம்பை நகர பா.ஜ.க. தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவி மங்கள சுந்திரி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வகனி,அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் தங்கேஷ்வரன்,சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவரும் அம்பை சட்டமன்ற பொறுப்பாளருமான வழக்கறிஞர் ராம்ராஜ் பாண்டியன் கலந்து கொண்டார். நகர பொதுச்செயலாளர்கள் சுகுமார், சுதன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராம கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவி வள்ளியம்மாள், நகர பிரபகாரி பால்பாண்டியன்,ஒன்றிய பிரபாகரி முத்து பாண்டி, மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு காவல் படையை சேர்ந்த தளவாய் கார்த்திகேயன் என்ற அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி தகவல் அனுப்பி, அதன் மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
    • தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர்.

    கல்லிடைக்குறிச்சி :

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல் படையை சேர்ந்த தளவாய் கார்த்திகேயன் என்ற அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி தகவல் அனுப்பி, அதன் மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

    இது சம்பந்தமாக நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கர்க், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஆகியோரது உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இந்த வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை இன்ஸ்பெக் டர்கள் சந்திரமோகன், ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆகஸ்டு 23-ந் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூரை சேர்ந்த முரளி(வயது 41), வினய்குமார்(35) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கிலும், இவ்வழக்கிலும் ஒரே மாதிரியாக மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து அவ்வழக்கில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தியதில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32), நைஜீரியாவை சேர்ந்த ஸ்டான்லி(40) ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து இம்மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று இருவ ரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்த னர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டு கள் மற்றும் ஏ.டி.எம். கார்டு கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அம்பாச முத்திரம் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் தனிப்படை போலீசாருக்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பாராட்டி பரிசு வழங்கினார்.

    • செல்லையா கடந்த 7-ந்தேதி இரவு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
    • சந்துரு, அருள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகன் செல்லையா(வயது 26). இவர் கடந்த 7-ந்தேதி இரவு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சந்துரு(22), அருள்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், வருகிற 6-ந்தேதி மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
    • காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை கடையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மின்பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற 6-ந்தேதி(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படும் பகுதிகளை கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஆழ்வான் துலுக்கப்பட்டி,ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழை யூத்து, பனையங் குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தபஞ்சான்,காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்திய ர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி,அயன் சிங்க ம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம் ஆகிய பகுதிகளில் காலை 9மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.

    கடையம்,பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்புரம், ரவண சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர்.மாதாபுரம், மயிலப்புரம், வெய்க்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 36)
    • வேல்முருகன் தேவநல்லூர் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்தார்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 36). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    வேல்முருகன் தேவநல்லூர் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், அதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது மனைவி உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • வளர் இளம்பெண்களான மாணவிகளுக்கு வரகு பாயாசம், சாமை புட்டு, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி மிட்டாய், சோள பணியாரம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் பால்ராஜ் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜாஸ்மின், யோகா மாஸ்டர் மாரியப்பன், கவுன்சிலர் பிரமாட்சி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தமிழாசிரியர் ஐசக் வெற்றி செல்வன் வரவேற்புரை ஆற்றினார். அம்பை தீயணைப்புப் படை நிலைய அலுவலர் பலவேசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆரோக்கியம், ஊட்டச்சத்து, உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்கள் காந்திமதி, ஜெஸி, சரஸ்வதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வளர் இளம்பெண்களான மாணவிகளுக்கு வரகு பாயாசம், சாமை புட்டு, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி மிட்டாய், சோள பணியாரம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்
    • நேற்று தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விளைவித்த அறுவடை செய்த நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக அருகாமையில் எங்கும் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று தெற்கு பாப்பான்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிமுத்து கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு இருதயகுளம் பங்குதந்தை பாக்கிய செல்வன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து 12 நாட்கள் திருப்பலி நிகழ்ச்சி புனித அந்தோனியார் ஆலய திருத்தலத்தில் நடைபெறுகிறது.

    வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் பாளை மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது.

    14-ந் தேதி பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோனி சாமி தலைமையில் திருப்பலி திருவிழா நடைபெறுகிறது.

    அந்தோனியார் திருத்தல கொடியேற்றத்திற்க்கு ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
    • காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், சில பகுதியில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதல் கூறியிருப்பதாவது:-

    நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்தடை ஏற்படும்.

    ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து,பனையங்குறிச்சி,நாலாங்கட்டளை,கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல்,சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர்,சாட்டுபத்து, அரிகேசவநல்லூர்,வெள்ளாங்குளி,ரெங்கசமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தி யர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி,வைராவிக்குளம்,பொன்மாநகர்,தெற்கு பாப்பான் குளம்,மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர்,ஏர்மாள்புரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், ஆவுடையனூர், மனல்காட்டலூர், பண்டாரகுளம், வள்ளி யம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை நடக்கிறது.
    • இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதியில் நெல்அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.

    சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வயல் வெளியில் கொட்டி வைத்துள்ளனர்.

    • கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது.
    • ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை மிளகாய் கிடைக்கும், 100 ஏக்கர் வரை விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் தற்போது மிளகாய் சாகுபடி கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்..

    ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் தற்போது மிளகாய் பயிர் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவு, உரம், ரசாயனம் உரம், தொழிலாளி கூலி என ஏக்கருக்கு 1½ லட்சம் வரை செலவு செய்துள்ளோம்.

    ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை மிளகாய் கிடைக்கும், 100 ஏக்கர் வரை விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.

    தற்போது கண்ணுக்கு தெரியாத வகையில் கருப்பு, வெள்ளை நிற செல்கள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

    இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து உள்ளோம்.வேளாண் துறையினர் போதிய மருந்துகள் வழங்கப் படவில்லை. பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்,

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல் நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 5வாலிபர்களை அழைத்து விசாரணை செய்தனர்.

    அப்போது ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர், இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர், இதில் அவர்கள் சட்டவிரோதமாக போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சங்கர் (20), இசக்கிப்பாண்டி (20), இசக்கி துரை(22), சந்துரு (22), கார்த்திக் (31) ஆகிய 5பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×