search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakkad"

    • களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் வகையில் சிறுவர், சிறுமியர் அனைத்து மாநில உடை அணிந்து சென்றது பொதுமக்களை கவர்வதாக இருந்தது.

    களக்காடு:

    களக்காடு சி.எஸ்.ஐ.கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டுக்கான ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.

    இதையொட்டி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் நடந்தது.

    சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை சேகர குரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார்.

    சபை ஊழியர் சுஜின் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி சென்றனர்.

    மேலும் அனைவரும் கைகளில் காவி, வெள்ளை பச்சை வண்ண கொடிகளையும் பிடித்து சென்றனர். அத்துடன் இந்தியாவின் ஒற்றுமையை விளக்கும் வகையில் சிறுவர், சிறுமியர் அனைத்து மாநில உடை அணிந்து சென்றது பொதுமக்களை கவர்வதாக இருந்தது. இதில் களக்காடு, தோப்பூர், சிதம்பரபுரம், புதூர், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்பட 8 சபைகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    அவர்கள் இந்தியாவை நேசிப்போம், இந்தியா மத சார்பற்ற, மத சுதந்திர நாடு போன்ற வாசகங்கள் அடங்கிய பாததைகளையும் ஏந்தி சென்றனர்.

    ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை அடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. ஸ்தோத்திர பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடக்கிறது.

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேவியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவஆசீர்வாதம் (62).
    • பணப்பிரச்சினை தொடர்பாக பாண்டியராஜ், தேவஆசீர்வாதம் மீது களக்காடு போலீசில் புகார் செய்துள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேவியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவஆசீர்வாதம் (62). கிறிஸ்தவ போதகர்.இவருக்கு சொந்தமான வயலில் களக்காடு பஸ் ஸ்டாண்ட் கீழத்தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (49) விவசாய வேலைகள் செய்தார்.

    இதற்கு தேவஆசீர்வாதம் தனது மகன் மூலம் போன் பேயில் ரூ.7 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அந்த பணம் போதாது என்று பாண்டியராஜ் கூறி வந்தார். இதுதொடர்பாக பாண்டியராஜ், தேவஆசீர்வாதம் மீது களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேவ ஆசீர்வாதம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு 2 பேருடன் வந்த பாண்டியராஜ், தேவஆசீர்வாதத்தை அவதூறாக பேசி, தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜை தேடி வருகிறார்.

    • களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் செல்போன் வெளிச்சத்தில், மத்திய அரசு விவசாய இடுபொருளான ரசாயன உரத்திற்கு மானியம் வழங்கிட வேண்டும்.
    • நெல்லுக்கு ஆதரவு விலையை ரூ.2,500 ஆக்கிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    களக்காடு:

    களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் செல்போன் வெளிச்சத்தில், மத்திய அரசு விவசாய இடுபொருளான ரசாயன உரத்திற்கு மானியம் வழங்கிட வேண்டும். மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திடவும், கலப்படமான உரங்களை கண்டுபிடித்து தடை செய்யவும், நெல்லுக்கு ஆதரவு விலையை ரூ.2,500 ஆக்கிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், துணைச் செயலாளர்கள் லெனின்முருகானந்தம் பாலன், பொருளாளர் அயூப்கான் நகர செயலாளர் முத்துவேல், இளைஞர் அமைப்புச் செயலாளர் திருமணி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகன், கோஷிமின் ஜவகர், ஸ்ரீதரன், கருணாகரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆவுடையம்மாள் கோவில்பத்து குண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இதில் ஆவுடையம்மாள் படுகாயமடைந்தார்.

    களக்காடு:

    களக்காடு கோவில்பத்தை சேர்ந்தவர் மாசானம். இவரது மனைவி ஆவுடையம்மாள் (வயது 60).

    சம்பவத்தன்று மதியம் ஆவுடையம்மாள் கோவில்பத்து குண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கோவில்பத்து குண்டுதெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுடலைமணி (34) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆவுடையம்மாள் மீது மோதியது.

    இதில் ஆவுடையம்மாள் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் களக்காடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் இதுதொடர்பாக சுடலைமணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தை சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (வயது 43). விவசாயி
    • 4 பேர் சேர்ந்து தனபாலகிருஷ்ணனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தை சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (வயது 43). விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினரான முத்துகிருஷ்ணனுக்கும் இடப்பிரச்சனை இருந்து வருகிறது. இதுகுறித்து தனபாலகிருஷ்ணன் நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று தனபால கிருஷ்ணன் வெளியூர் சென்று விட்டு பஸ்சில் வந்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துகிருஷ்ணன், கிசான், சங்கரன், செந்தில் முருகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தனபாலகிருஷ்ணனை வழிமறித்து நீ எப்படி எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கலாம் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் உள்பட 4 பேரும் சேர்ந்து தனபாலகிருஷ்ணனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துகிருஷ்ணன் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்.

    • நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி, கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38).
    • காந்திஜி மேலத்தெருவில் சென்ற போது, களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35), முரளிதரன் (27), ரமேஷ் (54) ஆகியோர், முருகனின் மனைவி பொன்மலரின் தம்பி சதிஷ் என்பவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டி, கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கும், களக்காடு காந்திஜி மேலத்தெருவை சேர்ந்த பொன்மலருக்கும் திருமணமாகியுள்ளது. தற்போது பொன்மலரும், அவரது குழந்தையும், தனது பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

    சம்பவத்தன்று முருகன், தனது மனைவி குழந்தையை பார்ப்பதற்காக மாமனார் வீட்டிற்கு வந்தார். களக்காடு புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாமனார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். காந்திஜி மேலத்தெருவில் சென்ற போது, களக்காடு கோட்டை யாதவர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35), முரளிதரன் (27), ரமேஷ் (54) ஆகியோர், முருகனின் மனைவி பொன்மலரின் தம்பி சதிஷ் என்பவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த முருகன் அங்கு சென்று என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், முரளிதரன், ரமேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, முருகனை கற்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயம் அடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வெங்கடேஷ் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக புத்தக பை வழங்கும் விழா நடைபெற்றது
    • தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான நலத்திட்ட உதவியில் வட்டார கல்வி அலுவலர் செ.டேவிட்தனபால், பா.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ஏர்வாடி:

    களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக புத்தக பை வழங்கும் விழா நடைபெற்றது. தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான நலத்திட்ட உதவியில் வட்டார கல்வி அலுவலர் செ.டேவிட்தனபால், பா.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் வக்கீல் ஆனந்த், வழக்கறிஞர் வெள்ளத்துரை, சேர்மத்துரை மற்றும் மண்டல மேலாளர் மனோகர் ராயன், பிராந்திய மேலாளர் லிங்கபூசன், மார்கெட்டிங் மேலாளர் ஜான் சார்லஸ், கிளை மேலாளர் வேல்முருகன், தலைமை ஆசிரியை வள்ளி, ஆசிரியர்கள் லுசியா, செல்வம், ஜமிலா பானு, சாந்தி, உஷாகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • களக்காடு நகராட்சியில் உடனடியாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
    • நகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க களக்காட்டில் நகராட்சி சார்பில் சந்தை அமைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளனர்.

    களக்காடு:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், களக்காடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன், லெனின் முருகானந்தம், அயூப்கான், திருமணி, ஸ்ரீதர், கோசிமின் மற்றும் நிர்வாகிகள் களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ், துணை தலைவர் ராஜன் ஆகியோரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாதவர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கோழிக்கால், தலையணை பகுதிகளில் நீரோட்டம் உள்ள இடத்தில் உறை கிணறு அமைத்து களக்காடு நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், நகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க களக்காட்டில் நகராட்சி சார்பில் சந்தை அமைக்க வேண்டும். நகராட்சி சந்தை அமைத்தால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நகராட்சிக்கும் வருமானம் அதிகரிக்கும்.

    களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் நாங்குநேரியான் கால்வாயில் உள்ள தரை பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவதால் உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. எனவே தரைபாலத்தை அகற்றி விட்டு புதிய உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பாலித்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
    • களக்காடு பகுதியில் பாலித்தீன் பைகள் இல்லாத ஆடி அமாவாசை விழா கொண்டாட வலியுறுத்தப்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகம், களக்காடு சூழல் திட்ட வனசரகம் சார்பில் களக்காடு பகுதியில் பாலித்தீன் பைகள் இல்லாத ஆடி அமாவாசை விழா கொண்டாட வலியுறுத்தி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதன் தொடக்க விழா களக்காடு புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.

    சூழல் திட்ட வனவர் சிவக்குமார் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் கொடி அசைத்து வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் உதவி வன பாதுகாவலர்கள் (பயிற்சி) வினோத்ராஜ், சதிஸ் குமார், அரும்புகள் அறக்கட்டளை இயக்குனர் மதிவாணன், லதா மதிவாணன், களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, வனசரகர் பிரபாகரன், வனவர் அப்துல்ரஹ்மான், கலுங்கடி கிராம வனக்குழு தலைவர் ஆனந்தராஜ், மிதார் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பாலித்தீன் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. முடிவில் வன காப்பாளர் அபர்ணா நன்றி கூறினார்.

    • களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது67). சலவைதொழிலாளியான இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் அயனிங் கடை நடத்தி வருகிறார்.
    • திருட்டு போன மொபட்டின் மதிப்பு ரூ 12 ஆயிரம் ஆகும்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது67). சலவைதொழிலாளியான இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் அயனிங் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மொபட்டில் களக்காடு புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பஸ் நிலையத்திற்கு வெளியே மொபட்டை நிறுத்தி விட்டு, பஸ் நிலையத்திற்குள் சென்று தனது நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. மர்ம நபர் அவரது மொபட்டை திருடி சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ 12 ஆயிரம் ஆகும்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் மொபட்டை திருடியது களக்காடு ஜவகர்வீதியை சேர்ந்த நெல்சன்ராஜா (46) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

    களக்காடு அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகில் உள்ள கீழதேவநல்லூரை சேர்ந்தவர் சுடலை (வயது 30). கட்டிட தொழிலாளி.

    நேற்று முன்தினம் சுடலை நாகன்குளம் விலக்கு அருகில் வந்த போது சிங்கிகுளத்தை சேர்ந்த நம்பிராஜன் (29) அவரை மிரட்டி ரூ 100 பணம் பறித்ததாக தெரிகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்கு பதிந்து நம்பிராஜனை கைது செய்தார்.

    களக்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மீனாட்சி அம்மாள் (வயது 69). இவரது மகள் இசக்கியம்மாள். முன்னீர்பள்ளத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இசக்கியம்மாள் தனது தாய் மீனாட்சி அம்மாளின் செல்போனுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர் நேரில் வந்து பார்த்த போது மீனாட்சி அம்மாள் வீட்டு பாத்ரூமில் எர்த் வயரை தொட்டப்படி இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×