search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Juvenile Justice Act"

    • ஒருவருக்கு பிடித்தமான நிறத்தை கொண்டு அவரது குணாதிசியங்களை கணிக்க முடியும்.
    • குழந்தைகளுக்கு என வகுத்துள்ள சட்டங்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர்:

    இளம் சிறார் நீதிச் சட்டம் மற்றும் உளவியல் குறித்த பயிற்சி கருத்தரங்கம் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த கோர்ட் டு வளாக கூட்டரங்கில் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி வரவேற்றார்.கோவை அரசு கலை கல்லூரி உளவியல் துறை தலைவர் செல்வராஜ் பேசியதாவது:-

    ஒருவருக்கு பிடித்தமான நிறத்தை கொண்டு அவரது குணாதிசியங்களை கணிக்க முடியும். இந்திய சட்ட அமைப்பில் குழந்தைகளுக்கு என வகுத்துள்ள சட்டங்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.இளம் சிறார்கள் என்றால் 12 வயதுக்கு மேற்பட்டோர். வளர் இளம் பருவமாக உள்ள நிலையில் அவர்களிடம் உடல் மற்றும் மனரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். அவர்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.இதில் சிறார் குற்றவாளிகள் என்னும் நிலையில் மிகுந்த கவனமாக கையாள வேண்டும். எதிர்கால சந்ததி என்ற நிலையில் அவர்களை சீர்திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பல்வேறு தரப்புக்கும் உள்ளது. இதில் நீதித் துறையின் பங்கு மிக அதிகம். இவ்வாறு அவர் பேசினார்.

    ×