search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewels"

    • பாளை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 56).
    • இவர் சமாதானபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    பாளை சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(வயது 56). இவர் சமாதானபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி தனது குடும்பத்தினருடன் அவர் மதுரைக்கு புறப்பட்டார். தொடர்ந்து வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். நேற்று மதியம் அவர்கள் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக அவர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
    • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கீழ்கோடி தெருவை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன்கள் திருவேங்கடம் (வயது 46), வினோத். விவசாயியான இவர்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    திருவேங்கடம் மற்றும் வினாத் இருவரும் நேற்று வயலில் வேலை பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டனர். விஜயா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபவர்களின் தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன.

    • பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன..அதில் இருந்த 2 கிராம் தங்க காசு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
    • சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், அன்னலெட்சுமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன்நகரை சேர்ந்தவர் சிவன்(வயது 68). பேட்டை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சிவன், கடந்த 2010-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

    திருட்டு

    இவர் தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில் வெளியூருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இன்று காலை வீடு திரும்பிய அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.அதில் இருந்த பித்தளை குத்து விளக்குகள், 2 கிராம் தங்க காசு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. அதிர்ச்சி அடைந்த சிவன் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது பின்புறத்தில் இருந்த ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்தது.

    கண்காணிப்பு

    இதனால் அந்த வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்திருப்பதை அவர் அறிந்தார். உடனே பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், அன்னலெட்சுமி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, பீரோவில் பதிந்திருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடீஸ்வரன்நகர் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவதாகவும், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • வீடு திரும்பிய லதா வீட்டில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மதுரை

    மதுரை வல்லானந்தபுரம் சிக்கந்தர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53). கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர் காலை வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது யாரோ மர்ம நபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த ரூ.2.43 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.

    வீடு திரும்பிய லதா வீட்டில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சுப்பிரமணி அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). சம்பவத்தன்று இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமார் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன், 4 கிராம் நகை, ரூ,1000 ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை கொள்ளை யடிப்பது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • திருமங்கலம் அருகே தம்பதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி 12 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளயைர்களை தேடிவருகின்றனர்.

    திருமங்கலம்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த ஏனாதியை சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது 42).

    கணவன்-மனைவி இருவரும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சி.பி.நத்தம் கிராமத்திலுள்ள தங்களது குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு சாமிகும்பிட்டு மதியம் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி ராய பாளையம் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது 2 பேரும் அரிவாளை காட்டி சேகரை மிரட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

    பின்னர் அவர்கள் பிரியா அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் சேகர் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளயைர்களை தேடிவருகின்றனர்.

    • பணகுடியை அடுத்த தெற்கு பெருங்குடியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
    • வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த அவர் பணகுடி போலீசில் புகார் அளித்தார்.

    பணகுடி:

    பணகுடியை அடுத்த தெற்கு பெருங்குடியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் முருகன். இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

    தற்போது விடுமுறைக்காக அவர் ெசாந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 7-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர்களை பார்ப்பதற்காக முருகன் சென்னை சென்றுள்ளார்.

    இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த அவர் பணகுடி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர்.

    மோப்பநாய் உதவியுடன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
    • வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் ( வயது 57) என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களை நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா, ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விடுவாராம்.

    அந்த சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து வரும் ஜூலை.13ந்தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற வங்கி மோசடியில் இழப்பீடு குறித்து இதுவரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. வங்கி நிர்வாகம் தொடர்ந்து இழப்பீடு குறித்து முறையான அறிவிப்புகளை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டி வங்கிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வருகிற 13 ந்தேதி காலை 10 மணிக்கு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இப்படிக்கு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சியில் நள்ளிரவில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்
    • இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்

    திருச்சி:

    திருச்சி சத்திரம் சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 40). இவர்களது மகன்கள் திருச்சியில் டிராவல்ஸ் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 6 பேர் இவர்கள் வீட்டிற்கு நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் வைத்திருந்த சுமார் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து கற்பகம் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரையில் வியாபாரி வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுரை சிந்தாமணி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆவார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி இந்திரா காலனிைய சேர்ந்தவர் மணீஸ்வரன் (வயது 32). இவர் அதே பகுதியில் வெல்டிங்பட்டறை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 11 பவுன் நகை திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளியை கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனையில் கீரைத்துறை இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் திருடுபோன பீரோவில் பதிவான கைரேகையை வைத்து விசா ரித்தபோது மணீஸ்வரன் வெட்டிங் பட்டறையில் வேலை பார்க்கும் இந்திரா நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் நல்லுசாமி (22) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செய்தனர். திருட்டு நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் குற்ற வாளியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்ணா நகரில் பிரபல நகை கடையில் வேலை பார்த்த கடை ஊழியர் 60 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    அம்பத்தூர்:

    அண்ணாநகர் ரவுண்டானா அருகே பிரபல நகை கடை உள்ளது. இங்கு பாண்டிச்சேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

    அவரிடம் நேற்று மாலை கடை மேலாளர் சீனிவாசன் நகை பட்டறையில் இருந்து 60 பவுன் நகையை எடுத்து வருமாறு கூறினார்.

    இதையடுத்து கடை ஊழியர் மோட்டார்சைக்கிளில் பட்டறைக்கு சென்று 60 பவுன் தங்க நகையை எடுத்துச் சென்றார்.

    ஆனால் அவர் கடைக்கு செல்லவில்லை. இரவு வெகுநேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த மேலாளர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    60 பவுன் நகையுடன் அவர் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியரை தேடி வருகிறார்கள்.

    ×