search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery"

    • கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
    • லாவண்யா நகைகளை வீட்டில் தானே மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் மகாலட்சுமி நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி லாவண்யா (வயது 35).

    இந்நிலையில் தனது மனைவி லாவன்யா, மகளுடன் கடந்த செப்டம்பர், 30 ம் தேதி செட்டி சத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 75 பவுன் திருட்டு போனது.

    இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரபாகரன், ராஜ்மோகன், முத்து ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் லாவண்யாவை நேரில் அழைத்து விசாரித்து எச்சரிக்கை செய்தனர்.

    பின்னர் தனது வீட்டில் மற்றொரு பேக்கில் 73 பவுன் நகை இருந்ததாக கூறி காவல் காவல் நிலையத்தில் லாவன்யா ஒப்படைத்தார்.

    அதனைத் தொடர்ந்து லாவண்யாவை தங்க நகையை வீட்டில் தானே மறைத்து வைத்துக் கொண்டு நாடகம் ஆடியதாகவும், பொய் புகார் அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் நேற்று இரவு லாவன்யாவை கைது செய்தனர்.

    • கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.
    • தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 27 சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி வயது 22 என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி சர்ச்சில் திருமணம் நடைபெற்றது, திருமணத்தின் போது 80 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்நிலையில் ஆர்த்தி தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர் விக்னேஷ் உடன் வாழ பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா.
    • வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவரது கணவர் ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மகள், மருமகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இன்று காலை வெண்ணிலாவின் மருமகன் வீரமுத்து மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரமுத்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் அருணாச்சலம். (வயது 48). இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளார். அருணாச்சலம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் செட்டிசத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயை பார்ப்பதற்காக வீட்டை பூட்டு விட்டு குடும்பத்துடன் சென்றுள்னார்.

    மீண்டும் இரவு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் மன்னார்குடி போலீசுக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவாரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நகை வடிவமைப்பில் புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன.
    • கலாசார ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பெண்களின் நகை வடிவமைப்பில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும், ஆடையை அணிகலன்களுடன் இணைத்து வடிவமைப்பது கலாசார ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் துணிகளில் போடப்படும் விதவிதமான பாரம்பரிய எம்பிராய்டரி தையலை பயன்படுத்தி 'எம்பிராய்டரி நகைகள்' வடிவமைக்கப்படுகின்றன.

    பாரம்பரிய தையல் கலையையும் புதுவித அணிகலள் தயாரிப்பையும் ஒருங்கிணைந்து எம்பிராய்டரி நகைகள் வடிவமைக்கப்பட்டாலும், இன்றைய இளசுகளை கவரும் வகையில் டிரெண்டில் உள்ள நகை அமைப்புகளை கொண்டு இருப்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.

    இந்த எம்பிராய்டரி நகைகள் பாரம்பரியம், மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பதோடு இலகுவான எடையுடன் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.

    • ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.
    • அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர்.

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). கணவன் - மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வந்தனர்.

    கொலை

    கடந்த 7-ந்தேதி அதிகாலை வீட்டின் முன்பு படுத்திருந்த அத்தாயம்மாளை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த கொடூர கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, மர்ம கும்பலை விரைந்து பிடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அத்தாயம்மாள் கணவர் ராமசாமி மற்றும் அக்கம், பக்கத்தில் குடியிருக்கும் மக்களிடம் இது கொலை பற்றி விசாரணை நடத்தினார்.

    50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

    இந்த கொலை குறித்து துப்பு துலக்க மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மரிய முத்து (மேட்டூர்), ராஜா (சங்ககிரி), சங்கீதா (ஓமலூர்), ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேட்டூர் சுப்பிரமணி, கொளத்தூர் தேவராஜ், மேச்சேரி சண்முகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கொலையை யார் செய்தார்கள்? என இதுவரையிலும் தெரியாமல் உள்ளது. இதனால் ஏழுபரணைகாடு பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் ெகாலை, கொள்ளையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள், காட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், ராமசாமிக்கு சொந்தமான ேதாட்டத்தில் வேலை செய்பவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலை நடந்த இடத்தில் அருகே உள்ள சாலைகளில் சென்று வந்த வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொத்து தகராறு

    இதனிடையே உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மகன் மற்றும் மகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுப்பதில் அத்தாயம்மாளுக்கும், அவருடைய கணவர் ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    இதனால் இந்த கொலையில் அவர்க ளுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் இந்த கொலைக்கு கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சைபர்கிரைம் உதவியையும் தனிப்படை போலீசார் நாடி உள்ளனர். செல்போனில் பதிவான அழைப்புகளை வைத்து சைபர் கிரைம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உளவுப்பிரிவு

    மேலும் எஸ்.பி.சி.ஐ.டி., ஓ.ஐ.சி.யூ, போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு உள்ளிட்ட உளவு பிரிவு போலீசாரும் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு வயதான தம்பதியிடம் பணம் இருப்பதை தெரிந்து யாராவது அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளை யடித்து செல்லும் நோக்கத்தில் கொலையை செய்துள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
    • ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே ஏழு பரனைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). விவசாயி.

    இவருடைய மனைவி அத்தாயம்மாள் (65). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கழுத்து அறுத்து கொலை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசாமி வீட்டுக்கு அருகே உள்ள சாலை கொட்டகையில் படுத்து தூங்கினார். அத்தா யம்மாள் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கினார். நேற்று காலை ராமசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அத்தாயம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    நகை, பணம் கொள்ளை

    மேலும் அத்தாயம்மாள் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கீதா, சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தினமும் இரவு அத்தாயம்மாள் வீட்டில் தனியாக தூங்கு வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

    3 தனிப்படைகள்

    இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப் பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை யாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார்.
    • வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் மதகனேரி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் மணி. இவரது மனைவி சுபாஷினி (வயது 34). இவரது தாயும் அவருடன் தங்கி உள்ளார்.

    நகை திருட்டு

    சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்தார். அவர் கதவை பூட்டாமல் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.

    இந்நிலையில் சுபாஷினி வீடு திரும்பினார். அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் சுபாஷினி அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.

    கைரேகை நிபுணர்கள்

    இதுகுறித்து அவர் பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.

    • அத்தைக்கு உதவி செய்வது போல் நடித்து தங்க நகைகளை சகோதரர்கள் திருடி விற்றனர்.
    • ஒருவர் கைது-மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வலையப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த வர் முத்துலட்சுமி (வயது 52). இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமண மாகி வெளியூர்களிலும், அதே ஊரிலும் தனிக்குடித்த னம் இருந்து வருகிறார்கள்.

    எனவே முத்துலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உதவி செய்வ தற்காக முத்துலட்சுமியின் அண்ணன் மகன் அஜித் குமார், தம்பி மகன் முத்துச் செல்வம் ஆகியோர் அவ்வப் போது அத்தையின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடைக்கு செல்வது, மருத்து வமனைக்கு அழைத்து செல் வது போன்ற பணிக ளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள் ளனர்.

    மருமகன்கள் மீது அதிக நம்பிக்கையில் முத்துலட்சுமி இருந்து வந்தார். இதனால் அவர்களின் நடவடிக்கை களில் முத்துலட்சுமிக்கு எப்போதுமே சந்தேகம் வந்த தில்லை. இதற்கிடையே சம்பவத்தன்று முத்துச்செல் வம் பக்கத்து வீட்டின் திண் ணையில் அமர்ந்திருந்தார்.

    அவரது கையில் தங்கச் சங்கிலி ஒன்று இருந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக வந்த முத்துலட்சுமி யின் மகள் கலைகுமாரி, இந்த செயின் யாருடையது என்று கேட்டவாறு அதை கையில் வாங்கி பார்த்தார். அப்போது அது 8 பவுன் எடை கொண்ட தன்னுடைய தாய் முத்துலட்சுமிக்கு சொந் தமானது என்பது தெரிந்தது.

    உடனே தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்ட கலைகுமாரி, உன்னுடைய தங்க சங்கிலி, உனது தம்பி மகன் வைத்தி ருப்பதாகவும், வீட்டில் வேறு ஏதாவது தங்க நகை கள் மாயமாகி இருக்கிறதா என்று கேட்டார். பின்னர் சிறிது நேரத்தில் தங்க கம்மல்களையும் காண வில்லை என்று முத்துலட்சுமி தெரிவித்தார்.

    இதுபற்றி முத்துச்செல்வத் திடம் கேட்டபோது, அத்தை வீட்டில் இருந்து திருடியதை ஒப்புக்ெகாண்டார். மேலும் திருடிய கம்மலை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதாக வும், அதை அஜித்குமார் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து அவர்கள் மீது முத்துலட்சுமி ஆலங்கு ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துசெல் வத்தை கைது செய்தனர். தலைமறைவான அஜித்கு மாரை தீவிரமாக தேடி வரு கிறார்கள். உதவி செய்வது போல் நடித்து அத்தை வீட்டில் நகை திருடிய சம்ப வம் அப்பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது.

    • கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.
    • கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.

    இவர் கோட்ட மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தார் சாலையில் ஓரமாக கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அந்தப் பையில் 3 பவுன் தங்கச் செயின் மற்றும் கவரிங் நகைகள் பட்டுப் புடவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது இதுகுறித்து பாலு கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தார்.

    கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் இருந்து நகை இருந்த பை கீழே விழுந்தது தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து பாலு மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சாலையில் கண்டெடுத்த பையை ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் (23) என்ற வாலிபர் வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டு வரும்பொழுது வேகத்தடையில் இருந்து பை கீழே விழுந்து தொலைந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கண்டுபிடித்து தொலைந்து போன நகை பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர் கீழே கிடந்த நகை உள்ளிட்ட பொருட்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பாலு, ராஜ்குமார் ஆகியோரை போலீசார் வெகுவாக பாராட்டினர். தொடர்ந்து உரியவரிடம் உரிய ஆவணங்களை பெற்று 3 பவுன் நகை கவரிங் நகை பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர்.

    • இன்று காலை ஜோதி வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் 7-வது தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜோதி (வயது 64). இவர்களது மகள் பகவதி, ஜோதிநகரில் வசித்து வருகிறார். நேற்று இரவு ஜோதி அவர் மகள் வீட்டில் தங்கி உள்ளார்.

    நகை-பணம் கொள்ளை

    இந்நிலையில் இன்று காலை ஜோதி வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோவில் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்கநகை, 180 கிராம் வெள்ளி மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    சேலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாரசிராம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு சேலம் டவுன் தாதுபாய்குட்டை அருகே உள்ள ஒரு ஓட்டலில் தன் நண்பர்கள் அண்ணாதுரை, சுரேஷூடன் சாப்பிட சென்றார்.

    அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    பூ வியாபாரி

    இதேபோல், சேலம் பொன்னம்மாபேட்ைட வாசக சாலை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). பூ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் பழைய நிலையம் அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்கள், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி மெயின்ரோடு காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரவிக்குமார் என்கிற போலீஸ் ரவி (32), கோவிந்த சாமி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரசாத் (25) ஆகியோரை கைது செய்து பணம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

    ×