என் மலர்

  நீங்கள் தேடியது "jewel money thief"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மர்ம நபர் வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே சென்று நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.
  • துறையூர் மார்க்கெட் பகுதியை சுற்றியுள்ள 5 கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கடைக்குள் இருந்த சில்லறைகளையும் மர்ம நபர்கள்அள்ளிச் சென்றுள்ளனர்.

  திருச்சி :

  திருச்சி மாவட்டம் துறையூர் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள செளண்டீஸ்வரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவீந்திர குமார் (41). இவர் அதே பகுதியில் மூன்று மாடி உள்ள கட்டிடத்தில் தரைதளத்தில் மொத்த மளிகை வியாபாரம் மற்றும் குளிர்பானங்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

  முதல் மாடியில் ரவீந்திரகுமாரின் பெற்றோரும், இரண்டாவது மாடியில் ரவீந்திரகுமார் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

  இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் பக்கத்து வீட்டின் ஜன்னல் கம்பியை பிடித்து இரண்டாவது மாடிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ஐந்து பவுன் எடையுள்ள நகை, தோடு ஆகியவற்றை திருடியதோடு, கீழே இருந்த கடைக்குள் சென்று அங்கிருந்த பணம் சுமார் 50,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.

  இச்சம்பவம் தொடர்பாக ரவீந்திரகுமார் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் துறையூர் மார்க்கெட் பகுதியை சுற்றியுள்ள ஐந்து கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கடைக்குள் இருந்த சில்லறைகளையும் மர்ம நபர்கள்அள்ளிச் சென்றுள்ளனர்.

  இச்சம்பவங்கள் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு துறையூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் பகுதியில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் மார்க்கெட் பகுதியிலேயே திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு துறையூர் வீட்டு வசதி வாரிய பகுதியில் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஒருவரின் வீட்டில் 22 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இது போன்று துறையூர் பகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  ×