என் மலர்

  நீங்கள் தேடியது "Jayam Ravi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்ஜிகே படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #JayamRavi #Selvaraghavan
  செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்களின் வேலைகள் முடிந்தும் தயாரிப்பு தரப்பின் பிரச்சனையால் ரிலீசாகாமல் உள்ளது.

  இந்த நிலையில், செல்வராகவன் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி குரு சோமசுந்தரம், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.  இந்த நிலையில், செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். #JayamRavi #Selvaraghavan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
  அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

  சோழ வம்சம் தலைதூக்கியதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்படுகின்றனர். இந்த பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.  60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், ராஜராஜ சோழனின் அன்புக்கு பாத்திரமான வீரம் மிக்க ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

  பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிப்பதாக கூறப்பட்டது.  செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னமின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
  இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

  படத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.  ‘பொன்னியின் செல்வன்’ பெரிய கதை என்பதால் ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவது சாத்தியமில்லை. இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்க வேண்டும். படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குவது குறித்து மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும்.

  இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.800 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் கதையில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Karthi
  மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

  கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், பட்ஜெட் ஒத்து வராததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளை விஜய் சேதுபதியால் கொடுக்க முடியவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறார். புகழ் பெற்ற கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. #PonniyinSelvan #Karthi #Maniratnam #Vanthiyathevan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஜெயம் ரவிக்கு அந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியிருக்கிறாராம். #JayamRavi
  ஜெயம் ரவி ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

  குறிப்பிட்டஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜெயம்ரவி நடிக்க ஒப்புக்கொள்ள காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி திரையுலகில் அனைவரிடமும் எழுந்தது. சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக போயஸ் கார்டன் பகுதி இருந்து வருகிறது. இப்பகுதியில் வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்பது ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு என்கின்றனர்.


  நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் சுமார் 20 கோடி மதிப்பில் ஒரு தனிவீடு இருக்கிறதாம். அந்த வீட்டை ஜெயம்ரவி வாங்க முயற்சித்த போது பணத்திற்கு பதிலாக தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தால் வீட்டை தருவதாக கூறியதால் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். #JayamRavi #ScreenSceneMediaEntertainment 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த மூன்று படங்களை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். #JayamRavi
  ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அடங்க மறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டேவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

  இந்த நிலையில், சண்டக்கோழி 2, தடம், நீயா 2 உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய, ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கிறார்.  இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது,

  "நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். அவர்களின் நீண்ட பயணத்தில் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

  தற்போது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஜெயம் ரவி கூறினார். #JayamRavi #ScreenSceneMediaEntertainment 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தனிஒருவன் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். #JR24 #JayamRavi #HiphopTamizha
  அடங்கமறு படத்திற்கு பிறகு ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக முதலில் பேச்சு அடிபட்டது.


  இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஆதி முன்னதாக ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் ரங்கநாதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.  மேலும் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை ஜிவி பிலிம்ஸ் வெளியிடுகிறது. #JR24 #JayamRavi #KajalAggarwal #HiphopTamizha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கிறார்களாம். #Maniratnam
  மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார்.

  படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. அடுத்து மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்து இருக்கிறார்.  கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா என்ற முடிவில் இருக்கிறார்.

  இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லிவிட்டாராம் மணிரத்னம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். #Maniratnam #PonniyinSelvan #AmitabhBachchan #Vikram #JayamRavi #VijaySethupathi #STR #AishwaryaRai

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயம் ரவி நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் `அடங்க மறு' படத்தின் வெற்றி சந்திப்பில் பேசிய ஜெயம்ரவி, இந்த படத்தில் நடிக்கும் போது, எனது மனைவி எனக்கு அடங்கி இருந்ததாக கூறினார். #AdangaMaru #JayamRavi
  ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான படம் அடங்க மறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி சந்திப்பில் ஜெயம் ரவி பேசும்போது,

  ‘இந்த படத்தை என் மாமியார் சுஜாதா தயாரித்து இருந்தார். என் மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி இருந்தது என்பது இந்த படத்தில் நான் நடித்த சமயத்தில் மட்டும்தான்.

  ஆர்த்தி ஏதாவது சண்டை போட்டால் படப்பிடிப்புக்கு செல்லமாட்டேன் என்று பிளாக்மெயில் செய்ய தொடங்கினேன். என்னுடன் சண்டை போடுவதற்காகவே படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்த முடியுமா? என்று அம்மாவிடம் ஆர்த்தி கேட்பார்.  அந்த அளவுக்கு அவரை அதட்டி வைத்து இருந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் அவர் அடங்கியே இருந்தார்’ என்று கூறினார். இதை கேட்டு மேடையில் இருந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும், மாமியார் சுஜாதாவும் சிரித்தனர். #AdangaMaru #JayamRavi #AdangaMaruSuccessMeet

  ஜெயம் ரவி பேசிய வீடியோவை பார்க்க:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி இயக்கும் முதல் படத்தில் யோகி பாபுவை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். #JayamRavi #YogiBabu
  2001-ல் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ஆளவந்தான். இதில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜெயம் ரவி. தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர் படம் இயக்க வேண்டும் என்பதை தனது நீண்ட நாள் கனவாக வைத்திருக்கிறார். 

  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்போது அல்ல. இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன். என் முதல் கதையை எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், காமெடி படமாக இயக்க ஆசை. அந்த கதைக்கு யோகி பாபு பொருத்தமாக இருந்தால் அவரை இயக்குவேன்’ என்று கூறியுள்ளார். #JayamRavi #YogiBabu

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் `அடங்க மறு' படத்தின் விமர்சனம். #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna
  சென்னையில் மைம் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்ரடராக பணிக்கு சேர்கிறார் ஜெயம் ரவி. அதே காவல்நிலையத்தில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்ரடராக இருக்கிறார் அழகம் பெருமாள். 

  ஜெயம் ரவி தனது அப்பா பொண்வண்ணன், அம்மா ஸ்ரீரஞ்சினி, அண்ணன் சுப்பு பஞ்சு, அண்ணனின் மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவரது சொந்தக்கார பெண்ணான ராஷி கண்ணாவும், இவரும் காதலிக்கிறார்கள்.  நேர்மையான போலீஸான ஜெயம் ரவி தனது வேலையை சரியாக செய்ய வேண்டும், யாருக்கும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இந்த நிலையில், ஜெயம் ரவி விசாரிக்கும் வழக்குகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு சம்பந்தம் இருப்பதை ஜெயம் ரவி கண்டுபிடிக்க, அந்த வழக்குகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு ஜெயம் ரவிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறார்கள்.

  இந்த நிலையில், மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் ஜெயம் ரவி அந்த பெண் தற்கொலை செய்யவில்லை, இளைஞர்கள் சிலர் இணைந்து அந்த பெண்ணை தள்ளிவிட்டதை ஜெயம் ரவி கண்டுபிடிக்கிறார். மேலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனால் அவர்கள் அனைவரும் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.  ஜெயிலில் தனது மகனை அடித்ததற்காக ஜெயம் ரவியை பழிவாங்க, அவரது குடும்பத்தினரை கொன்று விடுகிறார்கள். மேலும் இந்த வழக்கை விபத்து என்றும் மாற்றிவிடுகின்றனர்.

  இதனால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதற்கு காரணமானவர்களை அவர்களது தந்தையின் மூலமே பழிவாங்குவதாக சபதம் செய்கிறார்.

  கடைசியில், ஜெயம் ரவி தனது சபதத்தை நிறைவேற்றினாரா? ராஷி கண்ணாவுடன் இணைந்தாரா? அடங்க மறுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  நேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தனி ஒருவனாக படத்தை தனது தோள்மேல் தூக்கி செல்கிறார். காதல், பாசம், சண்டை என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஷி கண்ணாவுக்கு இந்த படம் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறார். திரையில், அழகாக வந்து ரசிகர்களை கவர்கிறார்.

  பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சினி, சுப்பு பஞ்சு, மீரா வாசுதேவன் என அனைவரும் குடும்ப கதாபாத்திரத்தை ஏற்று கதையை நகர்த்துகின்றனர். குறிப்பாக சுப்பு பஞ்சுவின் இரு குழந்தைகளும் கவரும்படியாக நடித்துள்ளார்கள். மைம் கோபி, சம்பத் ராஜ், முனிஸ்காந்த், அழகம்பெருமாள் போலீஸாக கலக்கியிருக்கிறார்கள்.  என்னதான் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் உயர் அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். என்ன நடந்தாலும் அதனை மீற முடியாது என்பதை மையப்படுத்தி படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் தங்கவேல். நேர்மையான போலீஸ் ஒருவரை என்ன தான் அடக்க நினைத்தாலும், ஒருநாள் அவரது உணர்ச்சி வெடித்து, அடங்க மறுப்பதையும், சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றத்தையும் படமாக உருவாக்கி இருக்கிறார். வசனங்கள் சிறப்பாக உள்ளது.

  சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `அடங்க மறு' அத்து மீறு. #AdangaMaruReview #AdangaMaru #JayamRavi #RaashiKhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo