search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ishwar Chandra Vidyasagar statue"

    கொல்கத்தாவில் அமித் ஷா பேரணியின்போது ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல், மா.கம்யூனிஸ்ட் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கொல்கத்தா:

    வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதி மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்த இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக போற்றி, மதித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொல்கத்தா நகரில் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது அக்கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.



    இந்த மோதலின்போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் மாணவர் அணி அமைப்பினர் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×