என் மலர்

  நீங்கள் தேடியது "Iron sheet"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழனிச்சாமி கட்டிட பணிகளுக்காக 270 கிலோ இரும்பு சீட்டுகள் அங்காளம்மன் கோவில் அருகே வைத்திருந்தார்.
  • இருவரையும் கைது செய்து இரும்பு சீட்டுகளை கைப்பற்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  வெள்ளகோவில்.ஜூலை.4-

  முத்தூர் அருகே உள்ள முத்துமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது48) . கட்டிட மேஸ்திரி . இவர் கட்டிட பணிகளுக்காக 270 கிலோ இரும்பு சீட்டுகள் காங்கேயம்கொடுமுடி ரோட்டில் கடந்த மாதம் 24 ந்தேதி முத்தூர் அங்காளம்மன் கோவில் அருகே வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும்போது இறக்கி வைத்திருந்த சீட்டுகள் காணாமல் போயிருந்தது.

  இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள குருக்கத்தி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேரை மடக்கி விசாரித்தபோது, அவர்கள் முத்தூரில் இரும்பு சீட்டுகளை திருடிய திருப்பூர், செட்டிபாளையம், முத்தமிழ் செல்வன் (வயது25,) திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ரங்கநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது22) என்பது தெரிய வந்தது. உடனே இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த இரும்பு சீட்டுகளை கைப்பற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

  நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும் தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  ×