search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL 2019 final"

    வயதான வீரர்களை கொண்ட அணி என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களை மாற்றியமைப்பது அவசியம் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டோடு 12 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 10 வருடங்கள் முடிந்து கடந்த வருடம் 11-வது சீசனின்போது வீரர்கள் அனைவரும் பொது ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். நான்கு வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரையும் 8 அணிகள் ஏலம் மூலமே எடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் அனுபவ வீரர்களை தேர்வு செய்தது. இதனால் ‘Daddy Army’ என்றும் ‘Ageing Squad’ என்றும் அழைத்தனர். ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை சந்தித்தது.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தழுவவிட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரியே 34 ரன்கள்தான். இதனால் அணியில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி தோல்வி குறித்த காயம் குறைய சற்று நேரம் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளோம். 2-வது முறை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளோம். இரண்டு வருடங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. சிஎஸ்கே ஒரு ‘Ageing Team’ என்பதை நாஙகள் புரிந்துகொள்ள வேண்டும்.

    மீண்டும் சிறந்த அணியை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். டோனியும் இதே எண்ணத்தில் உள்ளார். டோனி உலகக்கோப்பை தொடரில் விளையாட செல்கிறார். உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னர் அடுத்த சீசன் குறித்து திட்டமிடப்படும்’’ என்றார்.
    ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - தல எம்எஸ் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று கோப்பை 4-வது முறையாக கைப்பற்றியது. இந்த நான்கு முறையும் மும்பை இந்தியன்ஸ்  கேப்டனாக ஹிட்மேன் ரோகித் சர்மாவே இருந்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    மேலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009-ம் ஆண்டு கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

    இதன்மூலம் ஐந்து முறை கோப்பையை முத்தமிட்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற எம்எஸ் டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என சச்சின் தெரிவித்தார்.
    ஐதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 ரன்கள் அடித்து 1 ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற டோனியின் ‘ரன்அவுட்’தான் திருப்புமுனை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரும், கிரிக்கெட் சகாப்தமுமான சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘டோனியின் ‘ரன்அவுட்’தான் ஆட்டத்தின் திருப்புமுனை. அதுவே முக்கியமான தருணம். பும்ராவின் பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது. மலிங்கா ஒரு மோசமான ஓவரை வீசினார். ஆனால், கடைசி ஓவரை சிறப்பாக வீசினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு 124 ரன்களை வதை்து கோப்பையை வென்றோம். இதனால் எனக்கு நம்பிக்கை இருந்தது’’ என்றார்.
    ×