என் மலர்

  நீங்கள் தேடியது "intercity"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை-நாகர்கோவில் இடையே சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.
  • நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் அதிவிரைவு ரெயில்(22658) இன்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லையில் இருந்து புறப்படுகிறது.

  நெல்லை:

  தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்களில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.

  இரட்டை ரெயில்பாதை பணி

  இதன் காரணமாக இந்த வழித்தடங்களை ரெயில் பாதைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை-நெல்லை இடையே பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. தற்போது நாகர்கோவில்-நெல்லை இடையே இரட்டை ரெயில்பாதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

  இதன் காரணமாக அவ்வப்போது இந்த 2 ரெயில்நிலையங்களுக்கும் இடையே அவ்வப்போது ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மற்றும் வருகிற 24-ந்தேதி நெல்லை-செங்குளம், வடக்கு பணகுடி மற்றும் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலைய பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுகிறது.

  இதனால் நெல்லை-நாகர்கோவில் இடையே சில ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தினமும் இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரெயில்(22627) காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 11.30 மணி அளவில் நெல்லைக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு செல்லும்.

  மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி இடையே இன்டர்சிட்டி அதிவிரைவு ரெயில்(22628) புறப்பட்டு நெல்லைக்கு மதியம் 2.15 மணிக்கு வந்தடையும். தற்போது பணி காரணமாக இந்த 2 ரெயில்களும் திருச்சி-நெல்லை இடையே மட்டும் இன்று மற்றும் 24-ந்தேதி இயக்கப்பட உள்ளது.

  அந்தியோதயா ரெயில்

  இதேபோல் நேற்று தாம்பரம்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட அந்தியோதயா அதிவிரைவு ரெயில்(20691) இன்று நெல்லையுடன் நிறுத்தப்பட்டது. அது நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில்(20692) இன்று மாலை நாகர்கோவிலுக்கு பதிலாக நெல்லையில் இருந்து புறப்படுகிறது.

  இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் அதிவிரைவு ரெயில்(22658) இன்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லையில் இருந்து புறப்படுகிறது.

  ×