என் மலர்

  நீங்கள் தேடியது "INDvSL"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார்.
  • 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள்.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

  20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள். கடைசி நேரத்தில் உடல் தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார்.

  இந்நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பகல்- இரவு போட்டியாக இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.

  இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

  இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.

  இலங்கை: குசல் மென்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷன்கா, துனித் வெல்லலகே.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது.
  • அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மும்பை:

  இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா.

  30 டெஸ்டில் 128 விக்கெட்டும், 72 ஒருநாள் ஆட்டத்தில் 121 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 70 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.

  29 வயதான பும்ரா காயத்தால் சர்வதேச போட்டியில் தொடர்ந்து ஆட முடியாத நிலையில் உள்ளார். அவர் கடைசியாக டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் ஜூலை மாதமும், 20 ஓவரில் செப்டம்பர் மாதமும் விளையாடி இருந்தார்.

  காயத்தில் இருந்து முழு குணம் அடைந்ததால் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.

  இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தியாவுக்கு இந்த தொடர் முக்கியமானது. பும்ரா இல்லாமல் போனால் பாதிப்பு இருக்கும்.

  இதனால் அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் 9-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதி டெஸ்ட் தொடர் முடிகிறது. அதன்பிறகு ஒருநாள் தொடர் மார்ச் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரு அணிகளும் நாளை மோதுவது 162-வது ஒருநாள் போட்டியாகும்.
  • இந்தியா 93-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 11 போட்டி முடிவு இல்லை.

  கவுகாத்தி:

  இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

  இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் 2 ரன்னிலும், ராஜ்கோட்டில் நடந்த கடைசி ஆட்டத்தில் 91 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

  புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை 16 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

  அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

  கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை.

  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதே போல முன்னாள் கேப்டன் விராட் கோலியும் அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கும் 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. லோகேஷ் ராகுலும் திரும்பி உள்ளார்.

  இந்திய அணி கடைசியாக வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை அந்நாட்டில் 1-2 என்ற கணக்கில் இழந்தது.

  20 ஓவர் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி வீரர்கள் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடைசியாக ஆப்கானிஸ்தானுடன் மோதிய 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

  இரு அணிகளும் நாளை மோதுவது 162-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 162 ஆட்டத்தில் இந்தியா 93-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 11 போட்டி முடிவு இல்லை.

  கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி மோதிய போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பயணத்தில் இந்தியா முதல் 2 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.

  நாளைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

  இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷான் கிஷன், சுப்மன் கில், வீராட் கோலி, லோகேஷ் ராகுல், சூர்ய குமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், அர்ஷ்தீப்சிங், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், முகமது ஷமி

  இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), குஷால் மெண்டீஸ் (துணை கேப்டன்), அசலென்கா, பண்டாரா, தனஞ்செய டி சில்வா, ஹசரங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, நுவன் பெர்னாண்டோ, கருணாரத்னே, லகிரு குமாரா, மதுஷனகா, நிஷங்கா, பிரமோத் மதுஷான், கசுன் ரஜிதா, சமர விக்ரமா, தீக்சனா, வான்டர்சே, துனித்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.
  • கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை.

  கவுகாத்தி:

  இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

  இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது.

  கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை.

  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.

  இந்நிலையில் உடற்தகுதி காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பும்ரா நீக்கப்பட்டாரா என்பதை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.
  • நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

  இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசாம் தலைநகர் கவுகாத்தி நகரில் நடைபெற உள்ளது.

  இந்த நிலையில் கவுகாத்தியில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மதியம் ஒரு மணிக்கு மேல் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்பட பலர் விளையாடுவார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
  • 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி உள்ளது

  ராஜ்கோட்:

  இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் விளாசினார். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

  இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 137 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ், தசுன் சனகா தலா 23 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் ௩ விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

  3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
  • சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  ராஜ்கோட்:

  இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  துவக்க வீரர் இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் ஷூப்மான் கில், ராகுல் திரிபாதி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல் திரிபாதி 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷூப்மான் கல்லுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

  163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. ஷூப்மான் கில் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா (4), தீபக் ஹூடா (4) நிலைக்கவில்லை. மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.

  20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

  இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன
  • இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

  ராஜ்கோட்:

  தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

  இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பனுகா ராஜபக்சேவுக்கு பதில் அவிஷ்கா பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.

  இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். தொடரை கைப்பற்றப்போவது இந்தியாவா? இலங்கையா? என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

  இந்திய அணி சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இழந்து நீண்ட காலம் ஆகிறது. இதனால் அதை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி கடுமையாக போராடும். அதே நேரத்தில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் வேட்கையில் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது.
  • இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.

  ராஜ்கோட்:

  இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

  மும்பையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரே ஆட்டத்தில் அதிக நோ பால் வீசிய அணியாக இருந்த அயர்லாந்தை பின்னுக்கு தள்ளியது இந்திய அணி.
  • நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசியுள்ளது.

  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

  நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.

  பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

  இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.

  இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 நோ பால்களை வீசி அதிக நோ பால் வீசிய அணியாக அயர்லாந்து முதலிடத்தில் இருந்தது.

  ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 நோ பால்களை வீசி ஒரே போட்டியில் அதிக நோ பால்களை வீசிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

  புனே:

  இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

  அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

  இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 2 விக்கெட் போல்ட் முறையில் எடுக்கப்பட்டது. அதில் ஒரு போல்ட் விக்கெட்டின் போது பெய்ல்ஸ் கீப்பரை தாண்டி விழுந்தது. இந்த விக்கெட்டின் வீடியோவை ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin