என் மலர்

  நீங்கள் தேடியது "Independence Day MK Stalin"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

  சென்னை:

  நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

  இதற்கான வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போர் நினைவு சின்னத்தில் இருந்து போலீசார் மோட்டார் சைக்கிள் புடைசூழ அழைத்து வந்தனர்.

  கோட்டை கொத்தளத்தின் முன்பாக காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

  போலீசார் பேண்ட் வாத்திய இசையுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

  2வது ஆண்டாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

  ×