search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In the temple"

    • நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது.
    • சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் நேரடியாக சாய்பாபாவுக்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இன்று பிறந்த நாள்.
    • கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் குமரகிரி பே ட்டையை சேர்ந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சார்பில் நாமமலை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி முதல் சனிக்கி ழமை யொட்டி பூஜை நடைபெறும்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் பிறந்த நாள் என்பதால் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரகிரி பேட்டை சேர்ந்த நாகராஜ், சின்னத்துரை, சந்திரசேகர், வைரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதில் பனங்காட்டு மக்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் மோகனவேல், லட்சுமணன், திருப்பதி ஸ்டீல் கோபி மற்றும் நாடார் சமுதாய பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அன்ன தானமும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அன்ன தானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செங்குந்தர் மாரியம்மன் மகா அபிஷேக குழு தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர அவை தலைவர் முருகன், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன், செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில் விழா குழு தலைவர்அரிபுத்திரன், 35-வது கோட்ட கவுன்சிலர் பச்சையம்மாள், 37-வது வார்டு உறுப்பினர் திருஞானம், 35-வது கோட்ட செயலாளர் சம்பத், 38-வது கோட்ட செயலாளர் ஜீவா என்கிற சிவகுமார்,ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    இதனால் சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.


     



    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த ராகி கூழ், கம்மங்கூழ், மோர், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், லெமன் சாதம், புளி சாதம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.

    ஆடித் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 11, 12ந் தேதி ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் கோவிலுக்கு விடிய, விடிய அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கும் இடமான கோவில் பின்புறம் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், அடுப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 16ந் தேதி காலை 10.30 மணிக்கு பால்குட விழாவும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது. 

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரத்தில் உள்ள நாமக்கல் சாலையில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு ஆடி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர் உள்பட 11 பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து 21 ஆயிரம் வெற்றிலைகளைக் கொண்டு, மாரியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது.

    இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே மாலை நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் கோவில் வளாகம் இருண்டு காணப்பட்டது.

    அதனால் பக்தர்கள் இருட்டில் நின்றபடி சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். அதை தவிர்க்க விஷேச நாட்களில் மின்தடை ஏற்பட்டாலும், கோவிலில் ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் எரிய இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் பகுதிகளில் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    ஆனி மாத சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வல்லப விநா யகருக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் ஹேரம்ப பஞ்சமுக விநாயகர் கோவில், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், மகாமாரியம்மன் கோவில் உள்ள விநா யகர், பொத்தனூர், பாண்ட மங்கலம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், வடகரையா த்தூர், ஜேடர்பாளையம், மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    ×