search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horse Gram Recipes"

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொளளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளுவில் குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - அரை கப்,
    புழுங்கல் அரிசி - 1 கப்,
    பச்சரிசி - கால் கப்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 2,
    வெள்ளை எள் - சிறிது,
    கொத்தமல்லி - தேவையான அளவு,
    உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெள்ளை எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

    கொள்ளு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

    அனைத்தும் நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு, வறுத்த எள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து புளிக் விடவும்.

    சற்று புளித்தவுடன் அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து  பரிமாறவும்..

    சூப்பரான கொள்ளு குழிப்பணியாரம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள அதிகப்படியாக கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது கொள்ளு. இன்று கொள்ளுவை வைத்து சத்தான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    கொள்ளு - அரை கப்,
    உப்பு - தேவைக்கு.


    செய்முறை :

    கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரைப் போட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.

    குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் அதை குக்கரில் போட்டு அதனுடன் கொள்ளுவை போட்டு மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.

    நன்கு குழைய வெந்ததும் அதில் கடைந்து அடுப்பில் வைத்து மேலும் நீர் சேர்த்து கிளறிவிட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    சூப்பரான குதிரைவாலி கொள்ளு கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கொழுப்பு, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி சிறுதானிய கொள்ளு சோறுவை சமைத்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி / சாமை அரிசி / குதிரைவாலி அரிசி - 100 கிராம்
    கொள்ளு - 50 கிராம்
    பூண்டு - 6 பல்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து பொடி செய்து கொள்ள :

    கடலை பருப்பு - 20 கிராம்
    மிளகு - 5 கிராம்
    சீரகம் - 5 கிராம்
    வெந்தயம் - 5 கிராம்
    கொத்துமல்லி - 30 கிராம்
    காய்ந்த மிளகாய் - 3

    தாளிக்க :

    கடுகு - 5 கிராம்
    கறிவேப்பிலை - 5 கிராம்
    பெருங்காய தூள் - சிறிதளவு



    செய்முறை :

    கொள்ளு, வரகரிசி / சாமை அரிசி / குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரிந்த பூண்டு நன்கு வதக்கி, வேக வைத்த கொள்ளுவை சேர்த்து பொடியை சேர்த்து வேக விடவும்.

    அடுத்து உதிரியாக உள்ள சோற்றுடன், வேக வைத்ததை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிக உடல் எடை உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - 1 கப்,
    புளி - 1 நெல்லியளவு,
    சீரகம், மிளகு - 1 தேக்கரண்டி,
    எண்ணெய் - 1 தேக்கரண்டி,
    கடுகு - 1 தேக்கரண்டி, தூள்
    பெருங்காயம் - 2 கிராம்,
    பூண்டு - 6 பல்.



    செய்முறை :

    கொள்ளுவை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை பொடித்து வைக்கவும்.

    பூண்டை தட்டி வைக்கவும்.

    நன்கு வெந்ததும், மேலும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். தண்ணீரில் கொள்ளு கரைந்து கெட்டியான கொள்ளுத்தண்ணீர் கிடைக்கும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் கரைத்த புளி கரைசலை சேர்க்கவும்.

    அடுத்து அதில் பொடித்த மிளகு, சீரகம், தட்டி வைத்த பூண்டை போடவும்.

    புளியின் பச்சை வாடை போனவுடன், கொள்ளுத் தண்ணீரை ஊற்றி கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    நுரைத்து வரும் போது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளுரசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×