search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HomeMade Snacks"

    அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கெட்டியான அவல் - 500 கிராம்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    இரண்டாக உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன்,
    காய்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிது, உப்பு,
    எண்ணெய் - தேவைக்கு,
    வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்



    செய்முறை :

    கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து சுத்தம் செய்த அவலை பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

    அதே போல் கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த திராட்சையை தனித்தனியே எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.

    பொரித்த அவலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும்.

    பொரித்த முந்திரி, காய்ந்த திராட்சை, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குக்கீஸை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நட்சத்திர குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 100 கிராம்
    வெண்ணெய் - 50 கிராம்
    பட்டைத்தூள் - அரைடீஸ்பூன்
    தூளாக்கிய சர்க்கரை - தேவைக்கு
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன்
    பட்டர் பேப்பர் - தேவைக்கு
    உப்பு - சிறிதளவு



    செய்முறை:

    வெண்ணெயுடன் மைதா மாவு, சர்க்கரை, கிராம்புத்தூள், பட்டைத்தூள், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    பின்னர் சப்பாத்தி தயார் செய்வது போல் மெலிதாக உருட்டிக்கொள்ளுங்கள்.

    அதனை நட்சத்திர வடிவங்களில் வெட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வையுங்கள்.

    பின்னர் வெளியே எடுத்து ஓவனில் உள்ள பேக்கிங் டிரேவில் பட்டர் பேப்பர்களை விரித்து அதில் நட்சத்திர வடிவ குக்கீஸ்களை வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கால் மணி நேரம் வையுங்கள்.

    குக்கீஸ்களின் விளிம்பு பகுதி பிரவுன் நிறத்திற்கு மாறியதும் வெளியே எடுத்து ஆறவைத்து ருசிக்கலாம்.

    சூப்பரான நட்சத்திர குக்கீஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் புளிப்பும் காரமும் சேர்ந்த வடை, போண்டாவை பிரியப்பட்டு சுவைப்போர் ஏராளம்..இவைகளை நீங்கள் வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - கால் கப்
    துவரம்பருப்பு - கால் கப்
    உளுத்தம்பருப்பு - கால் கப்
    பச்சரிசி - 1 கைப்பிடி
    காய்ந்த மிளகாய் - 3
    புளி - சிறிதளவு
    பெருங்காயம் சிறிதளவு
    தேங்காய் துருவல் - கால் கப்
    உப்பு - ருசிக்கேற்ப
    கடுகு - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரித்தெடுக்க



    செய்முறை:


    பருப்பு, அரிசி வகைகளை நன்றாக கழுவி ஒன்றாக ஊறப் போடுங்கள்.

    அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள்.

    2 மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் கொட்டி கலந்து கொள்ளுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுக்கவும்

    புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று எள்ளுத்தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - கால்கிலோ
    உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
    வெள்ளை எள் - 100 கிராம்
    நல்லெண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.

    இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.

    சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.

    இந்த தட்டையை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவைமிகுந்த மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று அரிசி தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அ‌ரி‌சி - 2 கப்
    ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3
    பெரு‌ங்காய‌த்தூள் - ‌ சி‌றிதளவு
    எ‌ள் - 1 டீஸ்பூன்
    தே‌ங்கா‌ய் துருவ‌ல் - கா‌ல் க‌ப்
    வெ‌ண்ணெ‌ய் - சிறிதளவு
    உ‌ப்பு, எ‌ண்ணெ‌ய் - தேவைக்கு



    செய்முறை:

    அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் மாவை கொட்டி லேசாக வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் பெருங்காயத்தூள், எள், தேங்காய் துருவல், வெண்ணெய், பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்பு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்தில் பிசைந்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.

    துணியில் தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான அரிசி தட்டை ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்தில் மாலையில் டீ, காபியுடன் சாப்பிட முந்திரி பக்கோடா அருமையாக இருக்கும். இன்று முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முந்திரி பருப்பு - 30
    மிளகாய் வற்றல் - 4
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை
    அரிசிமாவு - கால் கப்
    கடலை மாவு - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை :


    முந்திரிபருப்பை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, பாலக்கீரை சேர்த்து கட்லெட் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு,
    உருளைக்கிழங்கு - 2,
    பிரெட் ஸ்லைஸ்கள் - 4,
    பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    மைதா மாவு - அரை கப்,
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆலு பாலக் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் மொறு மொறு பக்கோடா சாப்பிட அருமையாக இருக்கும். இன்று பசலைக்கீரை சேர்த்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக் கீரை - 1 கட்டு
    கடலை மாவு- 1 கப்
    பெ.வெங்காயம்- 2 (நறுக்கவும்)
    மிளகாய் தூள் - சிறிதளவு
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு



    செய்முறை:


    கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்தூள், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை கொட்டி தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்கு உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    அதனுடன் கடைசியாக கீரையை கலந்துகொள்ளவும்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கலந்து வைத்துள்ள மாவு கலவையை உதிர்த்து போட்டு பக்கோடா தயாரிக்கவும்.

    சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு பிடித்தமாதிரி இந்த பன்னீர் உருண்டை செய்து கொடுத்து அசத்துங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 1 கப்
    பிரட்தூள் - 1/2கப்
    உருளைக்கிழங்கு - 1 சிறியது
    பெரிய வெங்காயம்  - 1 சிறியது
    புதினா இலை  - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள்  - 3/4 தேக்கரண்டி
    சாட் மசாலா  - 1/4 தேக்கரண்டி
    மாங்காய் தூள்  - 1/4 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு  - 2 தேக்கரண்டி
    சோள  மாவு  - 1மேஜைக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம். ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.

    அதனுடன் துருவிய பன்னீர், கொத்துமல்லி, புதினா, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகாய் தூள், சாட் மசாலா, பிரட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுற்றிலும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொரித்து எடுக்கவும்.

    சுவையான பன்னீர் உருண்டை தயார்.

    குறிப்பு : உருளைக்கிழங்கை நிறைய வேண்டாம், அது சுவையை மாற்றிவிடும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு காபி அல்லது டீயுடன் பிரெட், உருளைக்கிழங்கு சேர்த்து வடை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 10
    வறுத்த ரவை - அரை கப்
    அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 2
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது
    உருளைக் கிழங்கு - 2



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.

    இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

    சூப்பரான பிரெட் - உருளைக்கிழங்கு வடை ரெடி.

    விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி, மல்லி சட்னியுடன் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளி பலகாரங்களில் இனிப்பு கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு சாமை அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி மாவு - 3 கப்
    துருவிய வெல்லம் - 3 கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை:

    சாமை அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வடிகட்டி நிழலில் உலறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சாமை அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும்.

    ஏலக்காய் தூளும் சேர்த்துக்கொள்ளவும்.

    இந்த மாவு கலவையை 2 நாட்கள் அப்படியே வைத்துவிடுங்கள்.

    பின்பு அந்த மாவை அதிரசமாக தட்டி வைக்கவும்.

    தட்டி வைத்த மாவை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து நன்றாக எண்ணெயை வடித்து ருசிக்கவும்.

    சூப்பரான சாமை அதிரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    தீபாவளி என்றதும் இனிப்புகளும் பலகாரங்களும்தான் அனைவருக்கும் பிடித்தமானது. இன்று நாவிற்கினிய இனிப்பு பூந்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்,
    தண்ணீர் - கால் கப்,
    எண்ணெய் - பொரிக்க,
    உலர்ந்த திராட்சை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி - தேவையான அளவு.



    செய்முறை  :

    முதலில் கடலை மாவை சிறிது ஆப்ப சோடா கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    நிறம் வர சிறிது வண்ண எசன்ஸ் கலந்து கொள்ளவும். வண்ணம் தேவையில்லையெனில் அது வெள்ளை கலர் பூந்தியாகவும் செய்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு திராட்சை, முந்திரி, ஏலக்காய் போன்றவைகளை பொரித்து வைத்து கொள்ளவும்.

    வேறு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கரைத்த கடலை மாவை ஜல்லி கரண்டியில் விட்டு முத்து முத்தாய் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். அதாவது கம்பி பதத்தில் சர்க்கரை பாகு வரவேண்டும்.

    இதில் பொரித்த பூந்திகளை போட்டு கிளறி உதிரியாக செய்து அதனுடன் பொரித்த முந்திரி, திராட்சைகளை கலந்து பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பூந்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×