search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "homam"

    • 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
    • ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவட்டாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கோவில் புனரமைப்பு மற்றும் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி நேற்று காலை குழந்தைகள் நலனுக்காகவும், ஆன்மிகத்தில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளவும் ஆஞ்சநேய சனீஸ்வர ஹோமம் நடந்தது. ஆஞ்சநேய சாமி அறக்கட்டளை மற்றும் ஆஞ்சநேய சாமி கோவில் நிறுவனர் ஆஞ்சநேய சித்தர் ஹோமத்தை நடத்தினார். இதில் பங்கேற்றவர்களுக்கு பூஜை செய்யப்பட்ட நெய், அபிஷேக விபூதி, கவச மந்திரம் வழங்கப்பட்டது.

    மாலையில் திருவட்டார் சந்திப்பில் இருந்து பஞ்சவாத்தியம் முழங்க, முத்துக்குடைகளுடன் 108 சன்னியாசிகள் மாலை மரியாதைகளுடன் ஆஞ்சநேய சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஆஞ்சநேய சித்தர், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் 48-வது மடாதிபதி மூப்பில் சாமியார் ஸ்ரீபுஷ்பாஞ்சலி சுவாமிகள் மற்றும் திருவண்ணாமலை அகில இந்திய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீராமானந்தா சுவாமிகள் முன் சென்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஆஞ்சநேயர் சன்னதியில் சன்னியாசிகளின் மகா சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாழும் முறை, வாழ்க்கையில் மேன்மையடைய செய்ய வேண்டியவை, கடவுள் பக்தியின் சிறப்பு ஆகியவை குறித்து சன்னியாசிகள் சிறப்புரையாற்றினர். இதில் திரளானவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் டாக்டர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

    • 108 சன்னியாசிகள் சங்கமம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
    • இந்த ஆலயத்தில் ஆகம வீதிகளின் படி பூஜைகள் செய்து வருகிறார்.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலின் அருகில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சாமியின் தரிசனம் பெற்ற ஆஞ்சநேய சித்தரான சந்தோஷ் சாமிகள் இந்த ஆலயத்தில் ஆகம வீதிகளின் படி பூஜைகள் செய்து வருகிறார். ஆலயத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், சாமுண்டி தேவி, பத்ரகாளியம்மன், சிவன், நந்திதேவர், மகாவிஷ்ணு, கிருஷ்ணர், சரஸ்வதி, சாஸ்தா, முருகன் உள்ளிட்ட சாமிகள் சன்னிதிகள் குருதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இங்கு நடைபெறும் அற்புதங்களையும், அதிசயங்களையும் கேட்டறிந்து நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த சன்னியாசிகள் குழுவினர் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இன்று(சனிக்கிழமை) நடைபெறும் சனீஸ்வர ஹோமம், 108 சன்னியாசிகள் சங்கமம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் பத்பநாபசாமி கோவிலின் 48-வது மாடதிபதி மூப்பில் சாமியார் புஷ்பாஞ்சலி சாமிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் ராமநாத சாமிகளும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர். அதன்படி இன்று காலை 8 மணிக்கு குழந்தைகளுக்கான சனீஷ்வர ஹோமம், மாலை 4 மணி அளவில் சன்னியாசிகள் சங்கமமும், குழந்தைகளுக்கும், பக்தர்களுக்கும் ஆசி வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    இந்த சனீஸ்வர ஹோமத்தில் பங்கேற்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வியில் ஆர்வம் ஏற்படுதல், தன்னம்பிக்கை அதிகரிப்பது மற்றும் பல தோஷங்கள் மாறி நல்வாழ்வு அமையும். ஹோமத்தில் பங்கேற்போருக்கு பூஜை செய்யப்பட்ட நெய், அபிஷேக விபூதி, தினமும் பூஜை செய்வதற்கான கவச மந்திரமும் வழங்கப்படும். பக்தர்களின் வேண்டுகோளின் படி ஆலயத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த புனித ஹோமத்தில் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.

    • இந்த யாகம் இன்று முதல் 4 நாட்கள் நடக்கிறது.
    • உக்ரமூர்த்தியை மகிழ்விக்க இந்த மகாகாலேஸ்வர யாகம் நடத்தப்படுகிறது.

    திருவனந்தபுரம் பட்டம் மாங்குளத்தில் ஸ்ரீபராசக்தி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ந் தேதி முதல் மகாகாலேஸ்வர யாகம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சதுர்சனி தோஷ நிவாரணத்திற்கான அஹோர மகா சனீஸ்வர யாகம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இந்த யாகத்திற்கு, சனீஸ்வர பாபா என்றழைக்கப்படும், மகாமண்டேஸ்வரர் தேவேந்திரர் சுவாமிகள் தலைமை தாங்குகிறார்.

    இதன் தொடர்ச்சியாக நாளை 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும் மகாகாளீஸ்வரி யாகத்திற்கு, கொல்லூர் முகாம்பிகை கோவில் தலைமை தந்திரி ராமச்சந்திர அடிகள் தலைமை தாங்குகிறார். பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவன் கோவில்கள் மற்றும் பல்வேறு ஆசிரமங்களின் ஆச்சார்யர்களின் சங்கம பூமியாக பராசக்தி தேவி கோவில் தற்போது மாறியுள்ளது. மகாகாலேஷ்வர யாகம் 56,008 ருத்ர யாகங்களுக்கும் 11,000 ஏகாதச ருத்ர யாகங்கள் மற்றும் 81,000 மிருதயுஞ்சய யாகங்களுக்கும் சமமானதாக கருதப்படுகிறது. உக்ரமூர்த்தியை மகிழ்விக்க இந்த மகாகாலேஸ்வர யாகம் நடத்தப்படுகிறது.

    ஆச்சார்ய ஸ்ரீ யாக பிரம்மன் ஆனந்த் நாயர் அனைத்து யாக நாட்களிலும் மாலையில் விபூதி அபிஷேகம் நடத்தி வருகிறார்.

    அனந்தபுரியின் முகாம்பிகை என்று அழைக்கப்படும் பட்டம் மாங்குளம் ஸ்ரீபராசக்தி கோவிலில் நடைபெறும் யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகிறார்கள். அஹோர மஹா சனீஸ்வர யாகம் இன்று தொடங்குகிறது. 16-ந்தேதி வரை நடைபெறும் சனிதோஷ நிவாரணம் வேண்டி மந்திரங்கள் ஒதப்படும். யாகத்திற்கு வரும் பக்தர்கள் தெளிந்த மனதுடனும் உயர்ந்த எண்ணங்களுடனும் வீடு திரும்ப இந்த யாகம் பயன் அளிக்கிறது.

    மேலும் யாக நாட்களில் சகல தோஷங்களும் நீங்க மஹாகாலேஷ்வர திரவ்ய சமர்ப்பணம் நடைபெறும்.

    மகாகாலேஸ்வரரையும், சனீஸ்வரரையும் மகிழ்விப் பதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    ஸ்ரீ பராசக்தி கோவிலில் நடைபெற்று வரும் மகா காலேஸ்வரயாகம் தலைமை புரவலர் அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, யாக ஒருங்கிணைப்பு தலைவர் ஆனந்த் நாயர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சி. சுரேந்திரன் நாயர், டாக்டர். ஜே.ராஜ் மோகன் பிள்ளை, அரவிந்த் மோகன், ஆர்.விஸ்வநாதன், எஸ். கவுதமன், டி.சஜீவ், சி.கே.ஜெயமோகன், பொருளாளர் சுஜித் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

    • இந்த வழிபாடு மிக சிறப்பு வாய்ந்த வழிபாடாக பக்தர்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
    • மகா கலேஸ்வர யாக பூஜைகள் 16-ந்தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த வசீகரம் நிறைந்த ஆதிபராசக்தி கோவிலான மாங்குளம் பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இந்த கோவிலில், தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் நடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த வழிபாடு மிக சிறப்பு வாய்ந்த வழிபாடாக பக்தர்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

    நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய், நொடிகளில் இருந்து விடுதலை பெறவும், சூனியம் அகலவும் இங்கு பரிகாரம் சொல்லி கொடுக்கப்படுவதால் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து தேவியை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஆதிபராசக்தி தேவியையும், பத்ரகாளி தேவியையும், சமமாக வழிபடும் இந்த கோவிலில் திருவிழா நாட்களில் நடத்தப்படும் அஷ்டலட்சுமி பூஜை, படைப்பு, பூப்படை ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாகும்.

    ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இந்த கோவிலில் மகா காலேஸ்வரயாகம் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) முதல் நடந்து வருகிறது. இந்த யாகமானது தொடர்ந்து 16-ந் தேதி வரை 11 நாட்கள் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு புன்னியாக பூஜைக்கு பின் ஆழிமலை மகாதேவர் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட அரணியில் இருந்து எடுத்த அக்கினி பகர்ந்து மகா காலேஸ்வர யாகம் தொடங்கியது. தொடர்ந்து பரசுராம அனுமதி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், 9 மணிக்கு 11 மடங்களின் சன்னியாசிகள் முன்னிலையில் மகாயதி பூஜை நடந்தது. நேற்று நடைபெற்ற பஸ்மாரதி பூஜைக்கு கிருஷ்ணானந்த காளிதாஸ் சுவாமிகள் தலைமை தாங்கினார்

    நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க சிவன் கோவில்களின் முக்கிய பூசாரிகள், முகேஸ்வர சிவன் கோவில் யாக பண்டிதர்கள், பைரவர் கோவிலின் முக்கிய புரோகிதர்கள், மூகாம்பிகை கோவிலின் முதன்மை தந்திரி ஆகியோர் இந்த மகா காலேஸ்வர யாகம் யாகத்தை நடத்துகிறார்கள்.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை யாக பூஜைகள், பல்வேறு பூஜைகள், மாலை 6.45 மணி முதல் மகா காலேஸ்வர திருநீற்று பூஜை நடைபெறுகிறது.

    யாகத்தின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை வேதிகா பூஜை, வேதிகார்ச்சனை உள்பட பல்வேறு பூஜைகள், பிற்பகல் 3 மணி முதல் 6.30 வரை இளநீர் அபிஷேம், பால் அபிஷேகம், லிங்காபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 13-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் அகோர மகா சனீஸ்வர யாகம், மகா மண்டலேஸ்வர் தேவேந்தர் தலைமையில் நடக்கிறது.

    விழாவில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் திருநீற்று சிறப்பு பூஜையில் நேபாளத்தை சேர்ந்த புத்தமத உலக அமைதிக்கான தலைமை அதிகாரி லாமா கியாச்சோ ரிம்போச்சே கலந்து கொள்கிறார். மகா கலேஸ்வர யாக பூஜைகள் 16-ந்தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    மகா காலேஸ்வர யாக பூஜைகளுக்கான ஏற்பாடுகளை யாக பிரம்மன் ஆனந்த் நாயர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறர்கள்.

    • இந்த யாகம் சனிக்கிழமை தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த ஆதிபராசக்தி கோவிலான பிரசித்தி பெற்ற மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இக்கோவிலில், தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருநடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இக்கோவிலில் இம்மாதம் நாளைமறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 11 நாட்கள் மகாகாலேஸ்வர யாகம் நடக்கிறது.

    நாட்டிலுள்ள 12 ஜோதிர்லிங்க சிவன் கோவில்களின் முக்கிய பூசாரிகள், முகேஸ்வர சிவன் கோவில் யாக பண்டிதர்கள், பைரவர் கோவிலின் முக்கிய புரோகிதர்கள், மூகாம்பிகை கோவிலின் முதன்மை தந்திரி ஆகியோர் இந்த யாகத்தினை நடத்துகிறார்கள். 13-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் அகோர மகா சனீஸ்வர யாகம், மகாமண்டலேஸ்வர் தேவேந்தர் சாமிகள் தலைமையில் நடக்கிறது.

    நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு புன்னியாக பூஜைக்கு பின், ஆழி மலை மகாதேவர் கோவிலில் இருந்து எடுத்து வரப்படும் அரணியில் இருந்து எடுக்கப்படும் அக்கினி பகர்ந்து மகாகாலேஸ்வர யாகம் தொடங்கும். அதைத்தொடர்ந்து, பரசுராம அனுமதி பூஜை உள்பட பூஜைகள் நடைபெறும். 9 மணிக்கு 11 மடங்களின் சன்னியாசிகள் முன்னிலையில் மகாயதி பூஜை நடக்கிறது.

    7-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான நாட்களில் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரை யாக பூஜைகளின் தொடர்ச்சியாக பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் மாலை 6.45 மணி முதல் மகாகாலேஸ்வர திருநீற்றுப் பூஜை நடக்கிறது. 7-ந் தேதி நடைபெறும் பஸ்மாரதி பூஜைக்கு கிருஷ்ணானந்த காளிதாஸ் சுவாமிகள் தலைமை தாங்குகிறார். 14-ந் தேதி நடைபெறும் திருநீற்று சிறப்பு பூஜையில் நேபாளத்தை சேர்ந்த புத்தமத உலக அமைதிக்கான தலைமை அதிகாரி லாமா கியாச்சோ ரிம்போச்சே கலந்து கொள்கிறார். மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    • ஸ்ரீசுதர்சன ஹோமம் மற்றும் விசேஷ கோ பூஜை நடக்கிறது.
    • இங்கு பக்தர்களின் நவக்கிரக தோஷங்கள் நீங்கவும் பரிகாரம் செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டு அருகே உள்ள குமார வாடியில் புகழ்வாய்ந்த கோ ஆலயம் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு அன்று மக்கள் வாழ்வில் செல்வம் கொழிக்கவும், உடல் ஆரோக்கியம், நோயற்ற வாழ்வு மற்றும் மன நிம்மதி பெற ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டில் மக்களின் வாழ்வு வளம் பெறவும், அளவில்லாத செல்வம் பெருகவும் ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது.

    மக்கள் உடல் பிணியில் இருந்து விடுபட்டு சுகாதாரமான, ஆரோக்கியமான, மன நிம்மதியான வாழ்வு பெற தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. இங்கு பக்தர்களின் நவக்கிரக தோஷங்கள் நீங்கவும் பரிகாரம் செய்யப்படுகிறது.

    இதற்காக ஸ்ரீசுதர்சன ஹோமம் மற்றும் விசேஷ கோ பூஜை நடக்கிறது. அனைத்து ஹோமங்களும் 15 -ந்தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

    ஹோமத்தில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • இந்த யாகம் வருகிற 6-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
    • பவுர்ணமி அன்று கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    வெங்கானூர், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவிலில் பிரபஞ்சயாக பூஜை நேற்று தொடங்கியது. நூற்றுக்கணக்கான பூசாரிகள் பங்கேற்ற இந்த யாகம் வருகிற 6-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 12 ஆயிரத்து 6 செங்கற்களை கொண்டு 6 யாக சாலைகள் அமைத்து 1008 அதி விசேஷமான மூலிகை மருந்துகள், பழவகைகள், தானியங்கள், நெய், தேன், சுகந்த திரவியங்கள், பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி முதலான பொருட்களை பயன்படுத்தி யாக பூஜை நடக்கிறது

    இதையொட்டி தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8-30 மணி வரையிலும் பிரதம பூஜை, கலச ஸ்தாபனம் தேவதை அனுமதி பூஜை, விக்னேஷ்வரா பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, வாஜி பூஜை, கஜ பூஜை, கங்கா பூஜை உள்பட ஏராளமான பூஜைகள் நடைபெறுகிறது. நேற்று கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தினர். மேலும் தினமும் மாலை 6 மணிக்கு மேல் சங்கீத கச்சேரி நடைபெறுகிறது. இந்த ஆண்டு பவுர்ணமிக்காவு தேவி கோவில் நடை பிரபஞ்ச யாகத்தை முன்னிட்டு நேற்று முதல் 6-ந்தேதி வரைதிறந்து இருக்கும். இதுதவிர பவுர்ணமியை முன்னிட்டு மே மாதம் 5-ந்தேதி, ஜூன் 4-ந்தேதி, ஜூலை 3-ந் தேதி, ஆகஸ்டு 1 மற்றும் 31 , அக்டோபர் 28, நவம்பர் 27, டிசம்பர் 26 ஆகிய தேதிகளிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    • உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம் நடந்தது.
    • சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடியில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லநாயகி அம்மன் பொறையான் திருக்கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியாகும்.

    இந்த உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் மஹா சண்டி ஹோமம் இதில் தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆலோசணைபடி சுந்தரேச சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேச குருக்கள் ஆகியோர் மஹா சண்டிஹோமம் பூஜைகள் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவர்களுக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் குமரக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், மணக்குடி ஊரா ட்சி மன்ற தலைவர் வீரமணி, முன்னாள் தலைவர் வடிவேலு, ஆலவேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித், வள்ளலார் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், மற்றும் வெங்க ட்ராமன், குமார், ரவி, சீனிவாசன், மற்றும் குல தெய்வ குடும்பத்தார்கள், மனக்குடி கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொ ண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்
    • இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்கான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு ஏகாம்பரேஸ்வரர் சிற்பம் கல் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி மகா குபேரனுக்கு சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது. சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது குபேர ஹோமமும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    • இன்று சுப்ரமணிய சாமி ஹோமம் நடைபெறுகிறது.
    • யாகசாலையில் பக்தி சொற்பொழிவு நடந்தது.

    திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் மகாஉற்சவத்தின் ஒரு பகுதியாக நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. யாகசாலையில் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தி சொற்பொழிவு நடந்தது.

    கலச ஸ்தாபன பூஜை, நவக்கிரக ஆவாஹனம், அக்னி பிரதிஷ்டை, ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி ஆகியவையும் நடந்தது. இன்று (புதன்கிழமை) சுப்ரமணிய சாமி ஹோமம் நடைபெறுகிறது.

    • 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது.
    • இன்று சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உத்தரவின்பேரில் உலக நல்லிணக்கத்துக்காக திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது. ஹோம மஹோற்சவத்தின் தொடக்க நாளான நேற்று கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்பிரமணியசாமி ஹோமம், நாளை (புதன்கிழமை) துர்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி ஹோமம், 19-ந்தேதி நவக்கிரக ஹோமம், 20-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 21-ந்தேதி ருத்ர மற்றும் மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.

    • 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
    • ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரம் நடைபெற்றது.

    இதில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.

    பின்னர், சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுடன் கொடி மரம் மற்றும் கோயிலை வலம் வந்து, அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    இதில் தருமபுர ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரம்மச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

    இதில் கோவில் குருக்கள்கள் கணேசன், ரவி, மகேஷ், ஆடிட்டர் குருசம்பத், கோவில் கண்காணிப்பாளர் மணி, காசாளர் களியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×