search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himanta Biswa Sarma"

    • அதிக குழந்தைகளை பெற்றெடுப்பது ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதிக்கும்.
    • பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை கிடையாது.

    கவுகாத்தி:

    மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை பற்றி அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்துக்களும், முஸ்லீம்களின் பார்முலாவை பின்பற்றி தங்களது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆண்களுக்கு 20-22 வயதில், பெண்களுக்கு 18-20 வயதில் திருமணம் செய்து வைத்தால் நிறைய குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில் அளித்துள்ளார். பொங்காய்காவன் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது: பத்ருதீன் பேச்சில் கவனம் செலுத்த வேண்டாம். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரிகளிடம் கூறி கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு பெண் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தால், அது அந்த பெண்ணை உடல்ரீதியாக பாதிக்கும். நம்முடைய சமூகத்திற்கும் அது பாதிப்பு ஏற்படுத்தும். பெண் ஒன்றும் குழந்தை பெற்று தரும் தொழிற்சாலை அல்ல. வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவை திருப்திப் படுத்துவதற்காக இதுபோன்ற சில பேச்சுகளை பத்ருதீன் வெளியிடுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அசாம் முதலமைச்சருக்கு நிகழ்ந்த அவமரியாதை மாநில அரசின் தோல்வியை காட்டுகிறது.
    • தெலுங்கானா முதலமைச்சர், அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஐதராபாத்:

    பாஜகவைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் மோடியை தீவிரமாக எதிர்த்து வரும் கே.சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றார்.

    ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பொதுக் கூட்ட மேடையில் அவர் பாஜக நிர்வாகிகளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த மேடையில் திடீரென ஏறிய ஒரு நபர்,அங்கிருந்து மைக்கை பிடித்து வளைத்து திருப்பியதுடன் அசாம் முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை பாஜக நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர். 


    பின்னர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    முதலமைச்சர் கேசிஆர் பாஜக இல்லாத அரசியல் பற்றி பேசுகிறார், ஆனால் நாங்கள் வாரிசு இல்லாத அரசியல் பற்றி பேசுகிறோம். ஐதராபாத்தில் கேசிஆர் மகன் மற்றும் மகளின் படங்களை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். நாடு வாரிசு அரசியலில் இருந்து விடுபட வேண்டும். ஒரு அரசு, நாட்டுக்காக, மக்களுக்காக இருக்க வேண்டும், ஆனால் ஒரு குடும்பத்திற்காக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அசாம் முதலமைச்சருக்கு நிகழ்ந்த அவமரியாதை மாநில அரசின் முழு தோல்வியை காட்டுவதாகவும், இந்த சம்பவத்திற்காக தெலுங்கானா முதலமைச்சர் கேசிஆர், அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அசாம் சட்டசபை துணை சபாநாயகர் நுமல் மோமின் வலியுறுத்தி உள்ளார். மேடையில் அசாம் முதலமைச்சருடன் மர்மநபர் வாக்குவாதம் செய்தது குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 

    • 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் பலன் இல்லை.
    • தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்று பட்டுள்ளது.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கிய ராகுல்காந்தி முதல் நாளே, மத்தியில் ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் நடத்த விரும்பினால் பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இந்தியா பிளவுபட்டது. அதனால் எந்த பலனும் இல்லை. தற்போது இந்தியா இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒன்றுபட்டுள்ளது. இதனால் (இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்கும் வகையில்) இந்திய ஒற்றுமை பயணத்தை பாகிஸ்தானில் நடத்துங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


    ராகுல் காந்தியின் பாத யாத்திரை குடும்பத்தைக் காப்பாற்றும் பிரச்சாரம் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது குடும்பம் மற்றும் கட்சியின் நிலை ஆட்டம் காண்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானுக்குள் புகுந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது ஆதாரங்களை கேட்டு, நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்திய ராகுல்காந்தி, தற்போது நாட்டை ஒற்றுமைப் படுத்த பயணம் தொடங்குவது எவ்வளவு போலித்தனமானது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் காங்கிரசார் எதிர்க்கிறார்கள்.
    • ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடும் காங்கிரசார், கட்சித் தலைவரைகூட தேர்ந்தெடுக்கவில்லை.

    ஐதராபாத்:

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    அப்போது அவர் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வரும் பாஜக தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 


    பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த அமித்ஷா வாரிசு அரசியல், சாதி வெறி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் ஆகிய பெரும் பாவங்களே, பல ஆண்டுகளாக நாடு அனுபவித்த துன்பங்களுக்கு காரணம் என்று கூறினார்.

    குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளும் உச்சநீதிமன்றத்தால் தவறானவை என்று அறிவிக்கப்பட்டதாகவும், இது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அமித்ஷா தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் இன்று பிளவுபட்டுள்ளது என்றும், கட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் போராடுகிறார்கள், ஆனால் கட்சித் தலைவரை அவரகள் தேர்ந்தெடுக்கவில்லை என்று அமித்ஷா கூறினார்.

    காங்கிரசுக்கு மோடி குறித்த பயம் (ஃபோபியா) உள்ளதாகவும், தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும் உள்துறை மந்திரி குறிப்பிட்டார்.

    அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பாஜகவின் சகாப்தமாக இருக்கும் என்றும், இந்தியா உலகிற்கே தலைமை தாங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்துறை மந்திரி அழைப்பு விடுத்ததாகவும், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

    பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி தென்னிந்தியாவில் இருந்து வரும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    குஜராத் கலவரம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளும் போது மோடி அமைதியாக இருந்ததாகவும், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆனால் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் வன்முறையை பரப்பியதாகவும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்தார்.

    ×