search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hearing"

    ஓரினச் சேர்க்கையை குற்றமாக குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் 377-வது சட்டப்பிரிவு விவாகரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முடிவை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. #wisdomofSC #validityofSection377 #Section377
    புதுடெல்லி:

    ஓரின சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அம்மனுக்களை விசாரித்து வருகிறது.

    377-வது சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிப்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் முடிவுக்கே விட்டு விடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது பிரமாண மனுவில் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு எங்கள் முடிவுக்கு விட்டு விட்டாலும், 377-வது சட்டப்பிரிவின் செல்லும்தன்மையை அனைத்து கோணங்களிலும் விரிவாக ஆய்வு செய்வோம் என்று நீதிபதிகள் கூறினர்.

    மேலும், 377-வது பிரிவை நீக்கும்போது, ஓரின சேர்க்கையாளர்கள் மீதான சமூக களங்கமும், பாரபட்சமும் அகலும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். அடுத்தகட்ட விசாரணையை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #wisdomofSC #validityofSection377 #Section377 
    இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று தொடங்கியது. #TwoLeavesSymbol #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    டி.டி.வி.தினகரன் தரப்பில் கோர்ட்டில் நேற்று ஆஜரான அவருடைய வக்கீல் மீனாட்சி அரோரா தன்னுடைய வாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற வழக்கு தேர்தல் கமிஷனில் நடைபெற்று வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களில் பல போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள் மீது தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் கமிஷனின் இந்த அணுகுமுறை சட்டவிரோதமானது என்றார். 7 நாட்கள் நடந்த இவர்களின் வாதம் நிறைவடைந்தது.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தை தொடங்கினார். வாதம் தொடங்கிய சிறிது நேரத்தில், இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து வாதம் நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    வழக்கு விசாரணையின் போது அமைச்சர் சி.வி.சண்முகம் கோர்ட்டில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்து கொண்டிருந்தார்.

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருடைய ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு கோரியதை ஏற்று, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பதிவு மீதான இறுதி வாதம் ஜூலை 17-ந் தேதி என்று அறிவித்த நீதிபதி, அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.  #TwoLeavesSymbol #DelhiHighCourt
    ×