என் மலர்

  நீங்கள் தேடியது "Healthy Eating"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
  • சாப்பிட்டு முடித்துவிட்டு வெந்நீர் பருகியதும் சிறிது தூரம் நடப்பதும் நல்லது.
  • எண்ணெய் உணவுகளை சாப்பிட்டதும் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ கூடாது.

  எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளை நிறைய பேர் விரும்பி சுவைப்பார்கள். அவை உடல் நலனுக்கு கேடுதரும் என்பதை அறிந்திருந்தாலும் அதன் ருசிக்கு அடிமையாகிவிடுவார்கள். எண்ணெய் கலந்த கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எண்ணெய் வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கமுடியாத பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு சில விஷயங்களை பின்பற்றுவது அவசியம். அவை குறித்து பார்ப்போம்.

  * எண்ணெய் வகை உணவுகளை சாப்பிட்டு முடித்ததும் அவை விரைவாக ஜீரணமாகுவதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். நிறைய பேர் சாப்பிட்டு முடித்ததும் பால், டீ போன்றவற்றை சூடாக பருகுவார்கள். அதற்கு பதிலாக வெந்நீர் குடிப்பதே சிறந்தது. ஏனெனில் செரிமான அமைப்பை விரைவாக செயல்பட தூண்டுவதோடு உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு வெந்நீர் உதவும். மேலும் வெந்நீர் குடிப்பது சாப்பிடும் உணவில் உள்ள எண்ணெய் தன்மையை வெளியேற்றவும் உதவும்.

  * வெறுமனே வெந்நீர் பருகாமல் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். அது உடலில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பை விரைவாக அகற்ற துணைபுரியும். உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றுவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும் உதவும்.

  * சாப்பிட்டு முடித்துவிட்டு வெந்நீர் பருகியதும் சிறிது தூரம் நடப்பதும் நல்லது. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் வயிற்றை விரைவாக நிரப்பிவிடும். நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும். உடலும் விரைவாக உணவை ஜீரணிக்க வைப்பதற்கு இசைந்து கொடுக்கும். சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தால் உடல் இலகுவாகுவதை உணர்வீர்கள்.

  * ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு சாப்பிட்ட பிறகு நடைப் பயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வயிற்றில் இருந்து சிறு குடலுக்கு உணவை எடுத்து செல்லும் நேரத்தை விரைவுபடுத்தவும் நடைப்பயிற்சி உதவும்.

  * எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடுவது நல்லது. அது குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் எண்ணெய் மற்றும் கொழுப்பை விரைவாக ஜீரணிக்க வைக்கவும் உதவும்.

  * மதிய வேளையில் எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால், சிறிது நேரம் கழித்து பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் ஏற்படுத்தும் வயிற்று தொந்தரவுகளைத் தடுப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதில் நிறைந்திருக்கும்.

  * எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த உணவு பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் என குளிர்ச்சியான எதையும் சாப்பிடக்கூடாது. ஏற்கனவே எண்ணெய் உணவுகள் ஜீரணமாவதற்கு குடல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டால் ஜீரணமாவது மேலும் தாமதமாகும்.

  * எண்ணெய் உணவுகளை சாப்பிட்டதும் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் ஜீரணத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். உணவு ஜீரணமான பிறகுதான் ஓய்வெடுக்கவேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு தேக்கரண்டி தூய பசு நெய்யில் 7.9 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது
  • எருமை நெய்யில் 100 சதவீதம் கொழுப்பு கலந்திருக்கும்.

  தினமும் நெய்யை சரியான அளவில் உட்கொண்டால், ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதனால் தான் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளவும், வெறும் வயிற்றில் சாப்பிடவும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சந்தையில் பல வகையான நெய்கள் கிடைக்கும் நிலையில், பசு நெய்யும், எருமை மாட்டு நெய்யும்தான் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.

  இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னென்ன?

  நிறம்: பசுவின் நெய் மஞ்சள் நிறத்தில் காணப்படும். எருமை நெய் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். பசு உட்கொள்ளும் உணவில் கலந்திருக்கும் பீட்டா கரோட்டின் காரணமாக பசுவின் நெய் மஞ்சள் நிறம் கொண்டிருக்கிறது.

  ஊட்டச்சத்து உள்ளடக்கம்: பசு நெய் மற்றும் எருமை நெய் இரண்டின் ஊட்டச்சத்தும் வேறுபட்டது. பசு நெய்யில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிரம்பி இருக்கும். முக்கியமாக நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவு காணப்படும். அது உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கக்கூடியது. ஒரு தேக்கரண்டி தூய பசு நெய்யில் 7.9 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது தவிர ஆன்டி வைரல், ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் பசு நெய்யில் உள்ளடங்கி இருக்கும். ஆனால் எருமை நெய்யில் 100 சதவீதம் கொழுப்பு கலந்திருக்கும்.

  செரிமானம்: எருமை நெய்யுடன் ஒப்பிடும்போது பசு நெய் ஜீரணிக்க எளிதானது. குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். பசும் பாலில் கொழுப்புகள் குறைவாகவும், கரையக்கூடிய அமிலங்களின் சதவீதம் அதிகமாகவும் இருக்கும். அதனால்தான் எருமை நெய்யுடன் ஒப்பிடும்போது எளிதில் ஜீரணமாகும் தன்மையை கொண்டிருக்கிறது.

  எடையை குறைக்கும்: பசு நெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் அனைத்து வயதினரும் உட்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட பசு நெய்யை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம். ஏனெனில் பசு நெய்யில் உள்ள வைட்டமின் டி இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம் படுத்த உதவும். உடல் எடையை குறைக்கவும் உதவும்.

  உடல் பருமன்: எருமை நெய்யில் கொழுப்பு அதிகம் உள்ளதால் எடையை கடுமையாக அதிகரிக்க வழிவகுத்து விடும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்பினால் எருமை நெய்யை தாராளமாக உட்கொள்ளலாம். பசு நெய்யை பொறுத்தவரை குறைந்த கொழுப்பையே கொண்டிருப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

  ஆயுர்வேத சிகிச்சை: பசு நெய் அனைத்து ஆயுர்வேத சிகிச்சைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒற்றைத் தலைவலி, டென்ஷன், தலைவலி, பார்வை திறன், செவித்திறன் மற்றும் நினைவாற்றல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி எருமை நெய்யை விட பசு நெய் அதிக மருத்துவ குணம் கொண்டது.

  குழந்தைகளுக்கு நல்லது: பசு நெய்யை எல்லா வயதினரும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அதிக நன்மை பயக்கும். குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் பிரச்சினையை குறைப்பதில் பசு நெய்க்கு முக்கிய பங்குண்டு. பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கும். எருமை நெய்யை உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் சாப்பிடுவதுதான் சரியானது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.
  • பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.

  அதில் அமிலத்தன்மையும் இருப்பதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறுமனே வாழைப்பழம் சாப்பிடாமல் ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறப்பானது.

  வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் வீரியம் குறையும்.

  வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.

  ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.

  ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. அவை உடலுக்கு நன்மை தந்தாலும், எந்த நேரத்தில் எப்பொழுது எவற்றுடன் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம் பழம் காட்சியளிக்கும்.
  • விளாம் பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கி இருக்கிறது.

  விளாம்பழங்கள் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். இதன் காய், பழம், மரப்பட்டை, இலை ஆகியவற்றை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். விளாம் காயை தயிருடன் சேர்த்து பச்சடிபோல் சாப்பிடலாம். வெல்லத்துடன் பிசைந்து உண்ணலாம். பனங்கற்கண்டுடன் சேர்த்தும் சுவைக்கலாம்.

  கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம் பழம் காட்சியளிக்கும். ஓடு போல இருக்கும் இதன் மேல் பகுதியை உடைத்துதான், உள்ளிருக்கும் சதைப் பகுதியை சாப்பிட முடியும். மற்ற பழங்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக காட்சிதரும் இந்த விளாம் பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கி இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..?

  விளாம் பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுத்துகிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெறவும் செய்கிறது.

  விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும். புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின்-ஏ உள்ளிட்ட சத்துக்களும், இதில் நிறைந்துள்ளன. பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி-2 உயிர்சத்தும் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.
  • சமையல் அறையில் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது.

  ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பை குறைப்பது 2030-ம் ஆண்டளவில் 90 லட்சம் இதய நோய் பாதிப்புகளை குறைக்கும். 40 லட்சம் உயிர்களை காப்பாற்றும் என்கிறது, புதிய ஆய்வு. அதற்கேற்ப உப்பின் பயன்பாடு உலகளவில் பரவலாக இருக்கிறது.

  ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் தவறாமல் இடம் பிடிக்கும் பொருளாக உப்பு உள்ளது. சமையலில் உப்பை அதிகம் உபயோகிப்பது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.

  ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, நரம்புகளை தூண்டுவதற்கும், தசைகளை சுருக்குவதற்கும், தளர் வடைய செய்வதற்கும், தண்ணீர் மற்றும் தாதுக்களின் சம நிலையை பராமரிப்பதற்கும் மனித உடலுக்கு சிறிதளவு சோடியம் (உப்பு) தேவைப்படுகிறது.

  சீனாவில் நிகழும் கிட்டத்தட்ட 40 சதவீதம் இறப்புகளுக்கு இதய நோய்களே காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, சீனர்கள் தினமும் 11 கிராம் உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

  இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பை குறைப்பதன் மூலம் தமனிகளின் சீரற்ற செயல்பாடுகளால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை 4 சதவீதம் குறைக்க முடியும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6 சதவீதம் குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெளிவுபடுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில நேரங்களில் உணவு மந்தமாகி. உடலில் தங்கி இருக்கும்.
  • குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவை சாப்பிட வேண்டும்.

  முன்பெல்லாம் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு நொறுக்குத்தீனிகள் பெருகிவிட்டன.

  பொதுவாகவே எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம், 'மாத்ராதீசியம்' என்ற பெயரில் விளக்குகிறது. ஒருவரின் செரிக்கும் சக்தியாகிய அக்னியின் பலத்தை பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவு உணவு இயற்கையாக உடலை கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்குத் தேவையான உணவாகும்.

  உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும் பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். சுவை காரணமாக பலரும் இனிப்பு, காரம், பலகார வகைகளை அதிகம் உண்பதால், வாத, பித்த, கபம் அதிகமாகி உடல் செரிமான பக்குவத்தை இழக்கிறது. இதனால் அஜீரண நோய்கள், வாந்திபேதி, வயிற்று வலி போன்றவை வருகின்றன. சில நேரங்களில் உணவு மந்தமாகி. உடலில் தங்கி இருக்கும். வயிற்றை ஊசியால் குத்துவதுபோன்று உணரப்படலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல், தலைவலி, கழிச்சல், தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்' என்று பெயர்.

  இவ்வாறு தகாத உணவை, கூடாத உணவை, அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும், இதை `ஆமவிஷம்' என்பார்கள். பழங்காலத்தில் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றை கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். அரிசி கஞ்சியை கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்க மாட்டார்கள், பட்டினியாக இருக்க வைத்து செரிக்க விடுவார்கள். பிறகு மருந்துகளை கொடுப்பார்கள்.

  எனவே எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவை சாப்பிட வேண்டும். அறுசுவையில், இனிப்புள்ள உணவை முதலில் உண்ண வேண்டும், புளிப்பு, உப்பு நடுவில் வர வேண்டும், துவர்ப்பு கடைசியில் வர வேண்டும்.

  இரைப்பையின் பாதி பாகத்தை திட உணவாலும், கால் பாகத்தை திரவ உணவாலும் நிரப்ப வேண்டும். எஞ்சியுள்ள கால் பாகத்தை வாயுவின் சஞ்சாரத்துக்கு விட்டுவிட வேண்டும், என்கிறது பாரம்பரிய மருத்துவ முறை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
  • ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

  கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. முன்கள பணியாளர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது. இது உடலில் கொரோனா நோய்க்கு எதிரான ஆற்றலை பெருக்குகிறது.

  அதே நேரத்தில் நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதுவும் இயற்கையான தடுப்பூசி போன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

  புரதங்கள்: இது ஆன்டிபாடி பண்புகளை கொண்டது. நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தக்கூடியது. பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் அதிகளவு உள்ளடங்கி இருக்கிறது. சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில் தரமான புரதங்கள் காணப்படுகின்றன.

  வைட்டமின் ஏ: இந்த சத்து நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் செல்களை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பால், முட்டை, கேரட், குடைமிளகாய், ஆரஞ்சு, தக்காளி மற்றும் அடர் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: பாக்டீரியாவை அழிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியது. நொய்த்தொற்றுகளால் ஏற்படும் அழற்சியிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. மீன்,மீன் எண்ணெய், ஆளி விதை, ஆளி விதை எண்ணெய், அக்ரூட், சோயா எண்ணெய், எள், பாதாம் போன்றவற்றில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

  வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின்களுள் இது முக்கியமானது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைரஸ் உடலுக்குள் நுழைவதை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய், பசலை கீரை, அடர் பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படும்.

  துத்தநாகம்: உடலில் துத்தநாகம் குறைந்தால் நோய் எதிர்ப்பு செல் களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். எள், பருப்பு வகைகளில் துத்தநாகம் அதிகம் இருக்கிறது.

  புரோபயாடிக்குகள்: புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை துரிதப்படுத்தலாம். சில வகை நோய்த்தொற்று களின் அபாயத்தையும் குறைக்கலாம். தயிர், பாலாடைக்கட்டியில் புரோபயாடிக் அதிகம் காணப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிறைய பேர் இரவு உணவை தாமதமாகத்தான் உட்கொள்கிறார்கள்.
  • கடினமாக இருந்தாலும் சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.

  இரவு எட்டு மணிக்குள் சாப்பிடுபவர்களின் உடல் நலம் சீரான ஆரோக்கியத்திற்குள் இருப்பதாகவும், செரிமானமும் சீராக நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிறைய பேர் இரவு உணவை தாமதமாகத்தான் உட்கொள்கிறார்கள். நள்ளிரவில் எழுந்து பசியை போக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.

  மாமிசம்: இரவு நேரத்தில் மாமிச உணவுகளை சாப்பிட்டால் செரிமானம் மெதுவாகத்தான் நடைபெறும். உடலின் வளர்சிதை மாற்றத்தையும் குறைத்துவிடும். மேலும் உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தும். இரவில் தூங்குவதற்கும் சிரமப்பட நேரிடும். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக் கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதனால் இரவில் இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

  ஐஸ்கிரீம்: இரவு விருந்துக்கு செல்பவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமை விரும்பி ருசிக்கும் வழக்கம் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அதில் அதிக அளவு கொழுப்பும், சர்க்கரையும் கலந்திருக்கிறது. இவை இரவு நேரத்தில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.

  பாஸ்தா: பசியுடன் இருக்கும் சமயத்தில் பாஸ்தா சாப்பிடலாம். அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை சேர்க்கும். ஆனால் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

  சாக்லேட்: இதில் இருக்கும் காபினும், ஊட்டச்சத்துக்களும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.

  மதுபானம்: இரவு நேரத்தில் மது அருந்துவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது கட்டுக்கதை. உண்மை என்னவென்றால், மதுபானம் தூக்க முறையை முற்றிலுமாக மாற்றிவிடும். உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துவிடும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழ முடியாது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தைராய்டு நோய்க்கு ப்ராக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும்.
  • ப்ராக்கோலியில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

  ப்ராக்கோலி குளிர்காலப்பயிர். முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரிடப்படும் இந்த ப்ராக்கோலியில் எண்ணற்ற சத்துப்பொருட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய்க்கு சிறந்த எதிர்ப்பு மருந்து.

  இரண்டு முதல் மூன்று கப் ப்ராக்கோலி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள். அதேபோல ப்ராக்கோலியில் உள்ள பி காம்ப்ளக்சும், வைட்டமின் ஏ, சி, ஈ ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயில் இருந்தும் இதயத்தை காக்கிறது. உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறது.

  தைராய்டு நோய்க்கும், ப்ராக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும். இதனை பச்சையாக உண்பதினால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கட்டுக்குள் இருக்கும். கண் விழிகளின் பாதுகாப்புக்கு தேவையான வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியை பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறது. முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த ப்ராக்கோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு. ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்யும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மழை காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்தும் என பலரும் நம்புகிறார்கள்.
  • குழந்தைகளை தயிர் சாப்பிட ஊக்குவிக்க வேண்டும்.

  மற்ற பருவ காலங்களை விட மழை காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலின்போது தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். மேலும் மழைக்காலத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, காரமான உணவுகளின் மீது இயல்பாகவே நாட்டம் உண்டாகிவிடும். அதனால் பக்கோடோ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிடுவார்கள். தயிர் விஷயத்தில் அறிவியல் ரீதியான உண்மைகளை ஆராயாமல் அதனை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள்.

  கட்டுக்கதை 1: மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவது சளியை உண்டாக்கும். உண்மை: தயிரை அதிக குளிர்ச்சிக்கு ஆளாக்காமல் அறையின் வெப்ப நிலையில் வைத்திருப்பது நல்லது. அப்படி அறை வெப்பநிலையில் வைக்கப்படும் தயிரை உணவில் கலந்து சாப்பிடுவது சரியானது. அதிலிருக்கும் புரோபயாடிக் பண்புகள், இரைப்பை குடல் நோய்களை தடுக்க உதவும்.

  கட்டுக்கதை 2: மழைக்காலத்தில் தயிர் உட்கொண்டால் செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும். உண்மை: பாலை விட தயிரில் இருக்கும் புரதம் எளிதில் செரிமானம் ஆவதற்கு துணை புரியும். மேலும் தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் செரிமான செயல்முறையை எளிதாக்கும்.

  கட்டுக்கதை 3: இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. உண்மை: இரவிலோ அல்லது தூங்கச் செல்லும் முன்பாகவோ தயிர் சாப்பிடும்போது அதிலிருக்கும் டிரிப்டோபான் எனப்படும் சேர்மம் உடலுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. இது தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

  கட்டுக்கதை 4: பாலூட்டும் தாய்மார்கள் தயிரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் சளியை ஏற்படுத்தும். உண்மை: தயிரில் உள்ளடங்கி இருக்கும் பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிமைப்படுத்தும். மேலும் தயிரில் உள்ள புரோபயாடிக் பண்புகள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை தடுக்க உதவும். தாய்க்கோ அல்லது குழந்தைகோ, சளி, இருமலை ஏற்படுத்தாது.

  கட்டுக்கதை 5: கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தயிரை தவிர்க்க வேண்டும். உண்மை: கர்ப்பிணி தாய்மார்கள் அடிக்கடி செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். சிறுகுடலில் நடைபெறும் செரிமானத்திற்கு அதன் முக்கிய பாக்டீரியாக் கூறுகளான லாக்டோபாகிலஸ், அமிலோபிலஸ் காரணமாக இருப்பதால் தயிர் சாப்பிடுவது நல்லது. குறைந்தபட்சம் மதிய உணவின்போதாவது தயிர் உட்கொள்ள வேண்டும்.

  கட்டுக்கதை 6: தயிர் சாப்பிட்டால் அது கொழுப்பாக மாறும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. உண்மை: கொழுப்பின் தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் டோன்ட் மற்றும் ஸ்கிம்டு மில்க் தயிர் கடைகளில் விற்கப்படுகிறது. கொழுப்பைத் தவிர, கால்சியம், வைட்டமின் டி, பொட்டாசியம் மற்றும் புரதம் ஆகியவையும் தயிரில் நிரம்பியுள்ளது. மேலும் உடலில் கால்சியம் உறிஞ்சுதலுக்கும் தயிர் உதவுகிறது.

  கட்டுக்கதை 7: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கக் கூடாது. உண்மை: தயிர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது. எனவே, குழந்தைகளை தயிர் சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவது சிறப்பானது. எனவே, வருடத்தின் எந்த பருவமாக இருந்தாலும் தயக்கமின்றி தினமும் தயிர் சாப்பிடுங்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது நல்லதல்ல.
  • டீ ஏற்படுத்தும் சில பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.

  காலையில் எழுந்ததும் முதல் வேலையாக டீ பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதா என்று எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரோகினி பாட்டீல், தேநீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பானம்தான் என்றாலும் அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லதல்ல என்கிறார்.

  தேநீரில் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியையும், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச்செய்யும். என்றாலும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் வயிற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றில் இருக்கும் அமிலங்களை தூண்டி செரிமானத்தை சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காலையில் வெறும் வயிற்றில் டீ பருகும்போது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் குடலுக்கு கடத்தப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

  வெறும் வயிற்றில் பருகப்படும் டீ ஏற்படுத்தும் மேலும் சில பக்கவிளைவுகள் குறித்து பார்ப்போம்.

  தலைவலி:

  தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுப்படுத்த டீ பருகி இருக்கலாம். ஆனால் டீயில் காபின் இருப்பதால் எதிர்பார்க்கும் பலனை தராது. டீக்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருகுவது தலைவலியின் வீரியத்தை குறைக்க உதவும்.

  அஜீரணம் - நீரிழப்பு:

  வெறும் வயிற்றில் தேநீர் பருகுவது செரிமான அமைப்புக்கு இடையூறை ஏற்படுத்தும். வாயு தொந்தரவையும் உண்டாக்கும். தேநீரில் இருக்கும் டையூரிடிக் சேர்மம், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுத்துவிடும். அப்படி சிறுநீர் கழிப்பது உடலில் நீரிழப்பை உண்டாகிவிடும்.

  இரவில் பல மணி நேர தூக்கம் காரணமாக ஏற்கனவே உடல் நீரிழப்புடன் காணப்படும். காலையில் எழுந்தவுடன் டீ குடித்தால், நீரிழப்பை அதிகப்படுத்திவிடும். தேநீரில் உள்ள தியோபிலின் என்ற ரசாயனப் பொருளும் நீரிழப்பை அதிகப் படுத்திவிடும். மலச்சிக்கலுக்கும் வழிவகுத்துவிடும் என்கிறார், ரோகினி பாட்டீல்.

  ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கும்:

  தேநீரில் டானின் என்ற சேர்மம் உள்ளது. இது சாப்பிடும் உணவில் இருந்து உடலுக்கு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதை தடுத்துவிடும். மேலும் தேநீரில் உள்ள காபினும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் அளவை குறைத்துவிடும்.

  அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்

  வயிற்றில் இருக்கும் திரவங்களின் செயல்பாடுகளுக்கு தேநீர் தொந்தரவு ஏற்படுத்தும்.

  அமில, கார சம நிலையையும் சீர்குலைக்கும். அசிடிட்டி பிரச்சினை தலைதூக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படும். கீழ் மார்பில் வலியை உணரக்கூடும்.

  வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதற்கு பதிலாக ஏதேனும் சிற்றுண்டி உட்கொள்ளலாம். குறிப்பாக சிறிதளவு நட்ஸ் வகைகளை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்துவது சிறப்பானது. தேநீரில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம். வெல்லத்தில் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எளிதில் செரிமானம் நடைபெறுவதற்கும் வித்திடும்.

  ''தேநீர் அருந்துவதற்கு சிறந்த நேரம் மாலை 3 மணிதான். அது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கும்'' என்கிறார், டாக்டர் ரோகினி பாட்டீல்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin