என் மலர்

  நீங்கள் தேடியது "Health official information"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை மாவட்டத்தில் ஒரு சதவீதத்துக்கும்கீழ் இருந்த ெகாரோனா நோய்த் தொற்று பரவல் 10 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.
  • முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களும், 2 மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவா்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும்.

  கோவை:

  கோவை மாவட்டத்தில் ெகாரோனா நோய்த் தொற்றின் 4-வது அலை மெல்ல அதிகரித்து வருகிறது. தினசரி நோய்த் தொற்று பாதிப்பு 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

  இதனைத் தொடா்ந்து ெகாரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துதல், ெகாரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

  இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ெகாரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களில் 80 சதவீதம் பேருக்கு மிதமான பாதிப்புகள் மட்டுமே காணப்படுவதாக சுகாதாரத் துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனா்.

  இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-கோவை மாவட்டத்தில் ஒரு சதவீதத்துக்கும்கீழ் இருந்த ெகாரோனா நோய்த் தொற்று பரவல் 10 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. தினசரி 100-க்கும் மேற்பட்டவா்கள் ெகாரோனா நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்படுகின்றனா்.

  இவா்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. 80 சதவீதம் பேருக்கு மிதமான பாதிப்புகளும், 10 சதவீதம் பேருக்கு அறிகுறிகளற்ற ெகாரோனா நோய்த் தொற்று பாதிப்பு மட்டுமே காணப்படுகிறது.

  இதனால் மக்கள் பெரிய அளவில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ெகாரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.முழுமையாக ெகாரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களுக்கு ெகாரோனா நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்களும், 2 மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவா்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  ×