search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health disorder"

    • அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை....
    • நோய் பரவும் அபாயம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணான் ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர் வாராததால் முட்புதர்கள் மண்டி கிடக்கின்றது. இந்நிலையில் ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது பன்றிகள் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. பன்றிகள் அதிக அளவில் இறந்து கிடப்பதால் நோய் ஏற்பட்டு பன்றிகள் இறந்து இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த பன்றிகளால் துர்நாற்றம் வீசுவதாலும், நாய் மற்றும் பறவைகள் இதை உண்பதாலும் நோய் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஏரியில் உள்ள நீரை பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்து பன்றியை தண்ணீரில் வீசி உள்ளதால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.மேலும் கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இறக்கும் பன்றிகளை புதைக்காமல் தூக்கி எறியும் சம்பவம் சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இறந்த பன்றிகளை அப்புற படுத்தி தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம்.
    • தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்களில், வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
    • ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ளது கொடுவாய். இங்கு சுமார் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் திருப்பூர் - ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகிறது. எனவே கொடுவாய் பஸ் நிறுத்தம் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

    இதன் அருகே ஏராளமான பேக்கரிகள், உணவகங்கள், பள்ளிக்கூடம், மின்மயானம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் மின்மயானத்தின் அருகே ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரில் இந்த குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. இந்த வழியாக செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மின்மயானத்திற்கு வருபவர்கள் அங்கு சிறிது நேரம் கூட உள்ளே நிற்க முடியாத அளவிற்கு மின்மயானத்தை சுற்றிலும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி சார்பில் எடுக்கப்படாததால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி ஒரு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Add Comments

    • நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.
    • பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் உடுமலை சாலையில் உள்ளது தினசரி காய்கறி மார்க்கெட். இந்த சந்தை முன்பு பழைய பஸ் நிலையமாக இருந்தது. 1986-ம் ஆண்டு முதல் காய்கறி சந்தையாக செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்கு தினசரி ஆயிரம் கிலோவிற்கு மேல் காய்கறி குப்பைகள் தேங்கி விடுகின்றன. இந்த சூழ்நிலையில் அருகிலேயே நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தம் மற்றும் நகராட்சியின் குடிநீர் தொட்டி ஆகியவை அமைந்துள்ளது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் அருகிலேயே தான் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் இங்கு குப்பைகளை வாரத்திற்கு ஒரு முறை இரண்டு முறை அள்ளுவதால்குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் குப்பைகள் ரோட்டில் அடித்துச் செல்லப்பட்டு மார்க்கெட் முழுவதும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகின்றன. இதனை உடனடியாக தீர்க்க வேண்டும் நகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட் கடைக்காரர்கள் கூறி வந்த நிலையில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த தாராபுரம் தி.மு.க. நகர செயலாளர் பொறியாளர் முருகானந்தம் சாலை மறியல் செய்ய வேண்டாம் .உங்களுக்கு உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கும் சாக்கடை வசதி மழைநீர் தண்ணீர் வெளியே செல்வதற்கு உண்டான வசதி அனைத்தும் செய்து தரப்படும் எனக் கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது .இது குறித்து மார்க்கெட் தினசரி மார்க்கெட் கடைக்காரர் டேவிட் கூறிய போது, இங்கு மழை நீர் தேங்கி விடுகின்றது .மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து வருகிறது .இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் .பொதுமக்கள் தங்கு தடை இன்றி வந்து செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கூடங்குளம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக ஊரின் நடுப்பகுதியில் கால்வாய் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது அந்த பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்டும் நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    போராட்டம் அறிவிப்பு

    அந்த கால்வாயை பார்வையிட்ட பின்னர், பா.ஜனதா ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் நிதியில் கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணி நடந்தது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வேலை தெரியாதவர்களை வைத்து பணிகளை செய்தனர்.

    தற்போது கழிவு நீர், மழை நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார சீர்கேட்டை வருகிற 22-ந்தேதிக்குள் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால் பா.ஜனதா சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • அதிகாரிகளுடன் ஆலோசனை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி 2-வது வார்டு 4-வது புது ஆலியார் தெருவில் மழைக்காலங்களில் ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் மழைநீரும், கழிவுநீரும் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கழிவு நீரும், மழை நீரும் தேங்கி வெளியேற பல நாட்கள் ஆகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று மாலை குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கடராமன், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் மழை நீரும், கழிவு நீரும் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்த கழிவு நீரும் மழை நீரும் செல்ல தேவையான வழிகளை ஏற்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், நகர மன்ற உறுப்பினர் அன்வர், கள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணை தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
    • மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் போடிப்பட்டி ,மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ஒரு பகுதியின் விவசாய மேம்பாட்டுக்கு மழை வளம் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி பல்லுயிர் பெருக்கத்துக்கும் துணை புரிகிறது.இவ்வாறு பலவகைகளில் வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்கும் தடுப்பணைகள் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.இந்த கழிவுகள் மழைநீரில் அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் சென்று தேங்குகிறது. இதனால் தண்ணீர் மாசு படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதற்கும் காரணமாகி விடுகிறது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது.மேலும் தண்ணீர் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த தண்ணீரால் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    • சாக்கடை கால்வாயை சீரமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
    • மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை தாராபுரம் மெயின் ரோட்டில் யு .எஸ் .எஸ் .காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் சாக்கடை கால்வாய் கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

    மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பாம்புகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது .மேலும் கால்வாய் பகுதியில் காட்டுச் செடிகள் புதர் போல் வளர்ந்து உள்ளதால் சாக்கடை நீர் வழிந்தோட வழியில்லாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சீரமைத்து சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை பஸ் நிலையம் அருகே உடுமலை வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். தவிர மேலும் வாரச்சந்தை நாளான திங்கட்கிழமை பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளையும் வாரச் சந்தையில் வியாபாரம் செய்து செய்கின்றனர்.

    அப்போது மீதமாகும் காய்கறி கழிவுகள் அழுகிய நிலையில் கொட்டப்பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால் தற்போது பெய்து வரும் மழையால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் அந்த பகுதியில் வழியாக நடந்து செல்ல செல்வதற்கு மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அவ்வப்போது கழிவுகளை அகற்றி சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை ரெயில் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரெயில்கள் பராமரிப்பின்றியும், சுகாதார மின்றியும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.

    இது குறித்து பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இது குறித்து ரெயில்வே பணியாளர்களிடம் கேட்ட போது, மதுரை ரெயில் நிலையத்தில் ராமேசுவரம், திண்டுக்கல் ரெயில்கள் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் கதவுகள் பூட்டப்படுவதில்லை.

    எனவே காதல் ஜோடிகள் மற்றும் ‘குடி’மகன்கள் ரெயில் பெட்டிக்குள் ஏறி கழிவறைகளை அசுத்தம் செய்கின்றனர். தட்டிக் கேட்டால் மிரட்டுகின்றனர். இதனால் எங்களால் துப்புரவு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை.

    போதிய அளவு போலீஸ்காரர்கள் இல்லாததால் பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

    குடிமகன்கள் மது பாட்டில்களை கழிப்பறைகளில் வீசிச் செல்வதால் தற்போதுள்ள பயோ டாய்லெட்டுகளில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

    எனவே பிளாட்பாரங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படும் ராமேசுவரம், திண்டுக்கல் ரெயில்களின் கதவை உடனே மூடி விடவேண்டும். ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கதவை திறக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.

    குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பல இடங்களில் கால்வாய்களை சுத்தம் செய்யாததாலும், பிளாஸ்டிக் பொருட்களின் தேக்கத்தினாலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி வீதிகளில் தேங்கி நிற்கின்றன. குறிப்பாக அச்சுக்கட்டு பகுதியில் அபுபக்கர் நகர், காளியம்மன் கோவில் தெரு, கண்மணிபாக்கம், உசேன் அம்பலம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கின்றன.

    இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முறையான வாய்க்கால் அமைத்து கழிவுநீர் செல்ல பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×