search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health center"

    • ராமநாதபுரம் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • பயன்பாட்டுக்கு வராததால் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    புதிய கட்டிடத்திற்கான பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதனால் இந்த பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழக்கரை அல்லது ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரையமும், மன உளைச்சலும் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாததால் பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் சென்று வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் பணத்தை செலவழிக்க வேண்டிய உள்ளதால் வேதனை அடைந்து வருகின்றனர்.

    பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
    • கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.

    செட்டிபாளையம் :

    கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். கோவை மதுக்கரையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ஏ.சி.சி. டிரஸ்ட் சார்பில் மதுக்கரை அடுத்த குரும்பபாளையத்தில், ரூ25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையமும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களையும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில், மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை பார்வையிட்ட அமைச்சர், வரும் முன் காப்போம், மக்களை தேடி மருத்துவத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை இயக்குநர் அருணா, பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், ஏசிசி நிர்வாக இயக்குநர் எஸ்ஆர்.டிரிக்கி, கோவை புறநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.இதில் அமைச்சர் மா.சுப்பி ரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்க ளை வழங்குகிறார். இதில் டீன் ரவீந்திரன், கண்கா ணிப்பாளர் ரவிக்குமார் உள்பட பலர்

    பங்கேற்கின்றனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    இதேப்தபோல் செட்டிபுலம், பிராந்தியங்கரை, கத்திரிபுலம், கருப்பம்புலம் ஊராட்சிகளில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். மிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது.

    கோடியக்கரை ஊராட்சியில் ரூ. 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், வாய்மேடு ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறக்கபட்டது.

    நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். சுகாதாரத்தை பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    சுகாதாரத்தை பேண தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். டெங்கு உற்பத்தி அறிகுறிகளை அழிக்கவும் உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டருடன் சுகாதார அதிகாரிகள் சென்றனர்.

    சுகாதார மையத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. #ChennaiCorporation #HealthCenter

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

    சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்ப கால விவரங்களை நேரடியாக பொது சுகாதாரத்துறையின் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்ற மென் பொருள் மூலமாக பதிவு செய்யலாம்.

    மேலும், 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், அரசு இ/சேவை மையத்தின் மூலமும், தாங்களாகவே https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பதிவு எண்ணைப் பெறலாம். அதனைத் தொடர்ந்து நகர சுகாதார செவிலியர் ஒருவார காலத்திற்குள் கர்ப்பிணிகள் பதிவு செய்த விவரங்களைக் கொண்டு, பதிவு செய்து அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

    குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு பதிவு எண் மிகவும் அவசியம்.

    நகர சுகாதார செவிலியரிடம் கர்ப்ப விவரங்களை பதிவு செய்தால், கர்ப்பக் கால, பிரசவகால மற்றும் தடுப்பூசி சேவைகள் குறித்த நினைவூட்டல் குறுஞ்செய்திகள் பெற முடியும்.

    டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். மேலும், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் எளிதாக இணையதளத்திலிருந்து பெற, பதிவு செய்த அடையாள அட்டை மிகவும் அவசியம்.

    இதனை பற்றிய மேலும் விவரங்களுக்கு

    picmehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். #ChennaiCorporation #HealthCenter

    ×