search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hawala money"

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.75 லட்சம் ஹவாலா பணத்தை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக பாலக்காடு மாவட்ட எஸ்.பி. தேபேஷ்குமார் பெகராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் பாலக்காடு வடக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையிலான போலீசார் கோவை- பாலக்காடு ரோடு கல்மண்டபம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் ரூ.75 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தியபோது அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் அந்த பணம் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது.

    பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது கார் டிரைவர் மற்றும் திரூரங்காடியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 73) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது கோவையில் இருந்து மலப்புரத்திற்கு பணம் கடத்தியதாக கூறினர்.

    கோவையில் இது தொடர்பான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.
    காரைக்குடியில் கொள்ளையடிக்கப்பட்ட ஹவாலா பணத்தை மீட்ட போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சுப்பிரமணி (வயது 47).

    காரைக்குடி பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ள இவர், வடக்கு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், உறவினர் சிட்டாள் ஆச்சி என்பவரிடம் ரூ.40 லட்சம் கொடுத்து வைத்திருந்தேன். அதனை எனது கார் டிரைவர் நாராயணன் (51) ஏமாற்றி திருடிச் சென்று விட்டார் எனக்குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாராயணன், பணப்பையை தனது உறவினர் செல்வராஜிடம் கொடுத்ததும் அவர் அதனை தனது நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகரிடம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து 3 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த பணப்பையை மீட்டனர். அந்தப்பையில் ரூ.2 கோடியே 25 லட்சம் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பது தெரியவந்தது. ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக சுப்பிரமணி கூறிய நிலையில், ரூ.2¼ கோடி இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போது, அது ஹவாலா பணம் என தெரியவந்தது.

    வெளிநாட்டு பொருட்களை விற்று வந்த சுப்பிரமணி, அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தையும் மாற்றிக்கொடுத்து வந்துள்ளார். அந்த பணத்தை தான் அவர் உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருந்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    சுப்பிரமணி ஹவாலா மோசடியில் ஈடுபட்டதால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை குறைத்து கூறினாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney

    சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடித்தபோது அவர்களிடம் இருந்து, ரூ.95 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பிராட்வே:

    சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செசங் சாங் தலைமையிலான தனிப்படையினர், அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 40), என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து அவர் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனையிட்டனர். அதற்குள் ஏராளமான ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளும், ரூ.3 லட்சத்து 80 ஆயிரமும் இருந்தது. போலீசார், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கொத்தவால் சாவடி, நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நரேஷ்(40) என்பவருக்கு, அந்த பணத்தை கொடுக்க இருந்ததாக சங்கரலிங்கம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நரேஷ் வீட்டுக்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

    மேலும் போலீசார் சோதனையிட்டதில் அந்த வீட்டில் ரூ.95 லட்சம் ஹவாலா பணமும் சிக்கியது. அதை பறிமுதல் செய்த போலீசார் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தனர். நரேசும் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஒரு நம்பர் லாட்டரி விற்ற வழக்கை, வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    ×