search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanuma Vihari"

    லண்டன் ஓவல் டெஸ்டில் இந்தியா பேட்டிங் செய்கிறது. 292-வது வீரராக ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். ஹர்திக் பாண்டியா இல்லை #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார்.



    ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் அஸ்வின் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து முரளி விஜய் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியடைந்தது. இதனால் வீரர்கள் மீது கடும் விமர்சனம் எழும்பியது.


    பிரித்வி ஷா

    குறிப்பாக பேட்ஸ்மேன்கள் மீது முன்னாள் வீரர்கள் சாடினார்கள். இதனால் கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முடிந்த டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாப் 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


    ஹனுமா விஹாரி

    இந்நிலையில் இன்று கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரர் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி மயாங்க் அகர்வால் சதத்தால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இங்கிலாந்தில் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தயா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த மயாங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 104 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 72 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.2 ஓவரில் 165 ரன்கள் சேர்த்தது.


    ஹனுமா விஹாரி

    அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 69 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.

    பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களம் இறங்கிறது. சர்துல் தாகூர் (3), கலீல் அஹமது (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து லயன்ஸ் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ஏ அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
    ×