search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Bhagavan"

    • தியானத்தில் இருந்து இதைச்சொல்வது நல்லது.
    • 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது.

    தேவனாம்ச ரிஷனாம்ச

    குரும் காஞ்சன ஸந்திபம்!

    புத்தி, பூதம் த்ரிலோகேஸம்

    தம் நமாமி ப்ரஹஸ்பதிம்!

    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப் பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச்சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர் செல்வர்) படத்தின் முன்னால் வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. திருமணத் தம்பதியர் ஜோடி விளக்கு ஏற்றுவது நல்லது.

    • ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும்.
    • குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.

    புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடலைப் பாருங்கள்....

    ஜென்ம ராமல் வனத்திலே

    சீதையைச் சிறை வைத்ததும்,

    தீதிலா தொரு மூன்றிலே

    துரியோதனன் படை மாண்டதும்

    இன்மை எட்டினில் வாலி

    பட்டமிழந்து போம் படியானதும்

    ஈசனார் ஒரு பத்திலே

    தலையோட்டிலே யிரந்துண்டதும்

    தருமபுத்திரர் நாலிலே

    வனவாசம் அப்படிப் போனதும்

    சத்திய மாமுனி ஆறிலே

    இரு காலிலே தளை பூண்டதும்

    வன்மை யற்றிட ராவணம் முடி

    பனிரெண்டினில் வீழ்ந்ததும்

    மன்னும் மாகுரு சாரி

    மாமனை வாழ்விலா துறமென்பவே!

    இந்தப்பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கின்றது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம்.

    ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். ஆதிபத்யம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும். இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என்று மனக்குழப்பம் அடைய வேண்டாம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்கவும். நேர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குரு வழிபாட்டின் மூலம் குதூகலமான வாழ்க்கை அமையும்.

    • சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.
    • தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்குகிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்கும் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு யாகம் நாளை மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடும், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    இரவு 11.27 மணிக்கு குருப்பெயர்ச்சி மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • குருப்பெயர்ச்சி நாளை மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக இந்த கோவிலில் வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி நாளை(சனிக்கிழமை) இரவு 11.24 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடம் பெயருவதால் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10.45 மணிக்கு மேல் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபபட்டர், ஸ்ரீபாலாஜிபட்டர், ராஜாபட்டர், கோபால்பட்டர் உள்பட 12 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்கியது.

    நேற்று வியாழக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர். விழாவையொட்டி சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி லட்சார்ச்சனை நடைபெறும். அதன்பிறகு இரவு 9 மணிக்கு பரிகார மகாயாகம் நடைபெறுகிறது. இரவு 11.24 மணி அளவில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குரு ப்பெயர்ச்சி ஆவதால் குரு பகவானுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும்.

    இதையொட்டி காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை குருப்பெயர்ச்சிவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
    • நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

    சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.

    குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம் நமக்கு அதிகப்பலன்கள் கிடைக்கும். மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும்.

    குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு.

    குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும்.

    மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது.

    ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும்.

    இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.

    நோய் தொற்று ஆபத்து

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நோய்த் தொற்றுகள் கொஞ்சம் தீவிரமாகப் பரவும் சூழல் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால் சனி மீண்டும் 24.8.2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும் வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

    சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

    விலை உயரும்

    குருப்பெயர்ச்சியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள், காய்கறிகள், வெள்ளை நிறப் பொருட்களின் விலைகளும் உயரலாம். தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரக்கூடிய வாய்ப்பே உண்டு.

    குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங்களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும்.

    மேஷ குருவின் சஞ்சாரம்

    (22.4.2023 முதல் 1.5.2024 வரை)

    22.4.2023 முதல் 22.6.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    23.6.2023 முதல் 11.9.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் (சுக்ர சாரம்)

    12.9.2023 முதல் 21.11.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் வக்ர இயக்கத்தில் குரு பகவான் ( சுக்ர சாரம்)

    22.11.2023 முதல் 20.12.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் (கேது சாரம்)

    21.12.2023 முதல் 5.2.2024 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    6.2.2023 முதல் 16.4.2024 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பவான் (சுக்ர சாரம்)

    17.4.2024 முதல் 1.5.2024 வரை கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் (சூரிய சாரம்)

    12.9.2023 முதல் 20.12.2023 வரை குரு பகவான் வக்ரம் பெறுகின்றார். (அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்கால்களில்)

    1.5.2024-ல் ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan

    • 22-ந் தேதி முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.
    • கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சி அன்றும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக 3 நாட்கள் நடைபெறும்.

    இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி வியாழக்கிழமை காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது. 22-ந் தேதி சனிக்கிழமை மதியம் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 9 மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகா யாகம், மகாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • காலகாலேஸ்வரர் கோவில் குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
    • இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 22-ந்தேதி குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அருண் பிரசாத் பிரகாஷ் கூறியதாவது:-

    குரு பகவான் வருகிற 22-ந் தேதி இரவு 11.26 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பெயர்ச்சியையொட்டி இரவு 9 மணிக்கு சிறப்பு யாக பூஜை தொடங்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு கலச அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் இரவு 11.26 மணிக்கு குரு மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் குரு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யலாம். விழாவில் ரூ.400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம்.விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் மற்றும் லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது.
    • முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    சோழ வளநாட்டில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

    சர்வ தோஷங்களையும் போக்கும் இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பூளைச்செடி ஆகும்.

    இக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராக சென்று சாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசிக்க வேண்டும்.

    பின்னர் குரு தெட்சிணாமூர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை போன்றவற்றை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி ஆகியோரை வழிபட்டு ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    தொடர்ந்து குருபரிகாரமாகிய 24 நெய் தீபங்களை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி கோவிலை 3 முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    ஆலங்குடி குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம்-மன்னார்குடி பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளையும் கொண்டது.
    • சர்வ தோஷங்களையும் போக்கும்

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய இடம் வகிப்பது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் ஆகும்.

    சோழ வளநாட்டில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

    சர்வ தோஷங்களையும் போக்கும் இந்த கோவிலுக்கு வந்து முறையாக வழிபடுபவர்களுக்கு முற்பிறவியில் செய்த பாவத்தின் தீய விளைவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகார தலமான ஆலங்குடி குருபகவான் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளையும் கொண்டது.

    தல வரலாறு

    இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. பார்க்கடலை கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காத்ததால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இந்த கோவில் இறைவனுக்கு ஏற்பட்டது. இந்த ஊருக்கும் ஆலங்குடி என்ற பெயர் உண்டானது.

    அசுரர்களால், தேவருக்கு நேர்ந்த இடையூறுகளை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் ஏற்பட்டது. இந்த தலம் அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பையும், திருவிடைமருதூர் மகாலிங்கபெருமானுக்கு பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும் பஞ்ச ஆரண்ய தலங்களில் 4-வதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாகவும் விளங்குகிறது.

    தோஷ நிவர்த்தி

    முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சரான சிவ பக்தர் அமுதோகர் என்பவரால் இந்த கோவில் நிர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியை மன்னருக்கு தரும்படி மன்னர் கேட்க அதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அமைச்சர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றதாக வரலாறு கூறுகிறது.

    இந்த கோவிலில் கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், ஏலவார்குழலி அம்மை, உமையம்மை, குருதெட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களின் சன்னதி உள்ளது. நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பூளைச்செடி ஆகும்.

    சுயம்பு மூர்த்தி

    இத்தலத்து இறைவன்(சிவன்) சுயம்பு மூர்த்தியாக உள்ளார். எனவே இந்த கோவிலின் காலத்தை கணிக்க இயலவில்லை. இந்த கோவிலில் உள்ள இறைவனை விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்துள்ளனர்.

    மேலும் அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், அய்யனார், வீரபத்திரர் ஆகியோர் தங்கள் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்ட தலமாகவும் இந்த கோவில் உள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு உள்ளனா். திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார்.

    தீர்த்தங்கள்

    இத்திருத்தலத்தை சுற்றி 15 தீர்த்தங்கள் உள்ளன. முக்கியமாக திருக்கோவிலை சுற்றி அகழியாக அமைந்துள்ள அமிர்த புஷ்கரணி என்ற தீர்த்தம் மிகவும் சிறப்புடையதாகும்.

    பிரம்ம தீர்த்தம், லக்குமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிர்த புஷ்கரணி, ஞான கூபம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.

    வழிபடும் முறை

    இக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும். முதலில் கலங்காமற் காத்த விநாயகரை வணங்கி பின்னர் கொடி மரம் சென்று அங்குள்ள துவஜ கணபதியை வணங்கி நேராக சென்று சாமியை (ஆபத்சகாயேஸ்வரர்) தரிசிக்க வேண்டும்.

    பின்னர் குரு தெட்சிணாமூர்த்தியை வணங்கி சங்கல்பம் செய்து அர்ச்சனை போன்றவற்றை முடித்து பிரகாரத்தில் உள்ள சோமாஸ்கந்தர், முருகன், மகாலெட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், உற்சவர் குருமூர்த்தி ஆகியோரை வழிபட்டு ஏலவார் குழலி அம்மை மற்றும் சனிபகவானை தொழுது கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    தொடர்ந்து குருபரிகாரமாகிய 24 நெய் தீபங்களை தீபம் ஏற்றும் இடத்தில் ஏற்றி கோவிலை 3 முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    பிரசித்தி பெற்ற குருப்பெயர்ச்சி விழா

    ஆலங்குடி குருபகவான் கோவிலில் தினசரி 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. முதலில் காலசந்தி காலை 8 மணி முதல் 8.30 மணி வரையும், 2-வதாக உச்சிக்காலம் நண்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரையும், 3-வது சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6 மணி வரையும், 4-வதாக அர்த்தசாமம் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரையும் நடக்கிறது.

    ஆலங்குடி குருபகவான் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    ஆலங்குடி குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணம்-மன்னார்குடி பஸ் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

    இந்த கோவிலுக்கு எர்ணாகுளம், கோவை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ெரயில் மார்க்கமாக வர வசதி உள்ளது. குறிப்பாக எர்ணாகுளம் விரைவு ரெயில் மூலம் நீடாமங்கலம் வந்து பின்னர் கும்பகோணம் செல்லும் பஸ் மூலம் 7-வது கிலோ மீட்டரில் உள்ள ஆலங்குடி குருபகவான் கோவிலை அடையலாம்.

    பஸ் மூலம் வருபவர்கள் தஞ்சாவூர், நீடாமங்கலம் வழியாக ஆலங்குடிக்கு வரலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் மதுரையில் இருந்து தஞ்சாவூர் வந்து அங்கிருந்து நீடாமங்கலம் வழியாக பஸ் மூலம் ஆலங்குடிக்கு செல்ல வேண்டும்.

    • குரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையைச் செய்கிறார்.
    • குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும்.

    1.குரு-ஆண்

    2.உருவம்-நீள் சதுரம்

    3.அதிதேவதை- தட்சிணாமூர்த்தி

    4.ஆலயம்-(சுவாமிமலை-தந்தைக்கு உபதேசம் செய்த குமரன்.

    5.ஆட்சி வீடு-மீனம்

    6.உச்ச வீடு-கடகம்

    7.நீச்சவீடு-மகரம்

    8.மூலத்திரி கோணவீடு-தனுசு

    9.பகைவீடுகள்-ரிஷபம்,மிதுனம்,துலாம்.

    10.காரகன்-புத்திரர், தனம் ஆகியவற்றிற்கு முக்கியமானவர்.

    11.திசை-வடக்கு

    12.தானியம்-பச்சைக் கொத்துக்கடலை.

    13.உலோகம்-தங்கம், மஞ்சள் நிற உலோகங்கள்

    14.மலர்-முல்லை.

    15.நவரத்தினம்-புஷ்பராகம்.

    16.சமித்து-அரசு.

    17.விலங்கு-யானை.

    18.குலம்-அந்தணன்.

    19.மனைவி-தாரை.

    20.சாரம்-புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி.

    21.கிழமை-வியாழன்.

    22.நட்பு-சூரியன்,சந்திரன்,செவ்வாய்.

    23.பகை-புதன், சந்திரன்.

    24.சமம்-சனி,ராகு, கேது.

    25.தசைகாலம்-குருதசை பதினாறு ஆண்டுகள்.

    குரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையைச் செய்கிறார். ராசிச் சக்கரத்தைக் கடக்க பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதையே மகாமகம் அல்லது மாமாங்கம் என்று கூறுகிறார்கள். கோசாரத்தில் 1,3,4,8,10,12, இல்லங்களில் குரு சஞ்சரித்தால் அது தேவதையாகும்.

    யோகம் தரும் பார்வை

    குரு இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும்.

    சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர் பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான். எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12-ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதி களுடன் சேராமல் இருக்க வேண்டும்.

    மாசி அபிஷேகம் சிறப்பானது

    நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்கவும் இங்குள்ள விநாயகரையும், திருமணத் தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். ஆலங்குடி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

    ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட மாசியில் மாற்றி விடுவார்களாம் பெண்கள். குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பு. குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

    • குரு பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது.
    • குருஹோரை எனப்படுவது எல்லாக் காரியங்களும் ஏற்றது.

    குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும்.

    அந்த நாளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு நடக்கும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டக்கடலை சுண்டல் வழங்கலாம்.

    குரு இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும்.

    • அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் குருபகவான். 
    • குரு பகவானுக்கு உகந்த ஸ்லோகங்கள், மந்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது.

    குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

    குரு பகவானுக்கு வியாழக்கிழமை வழிபாட்டிற்கு உரியத் தினமாகும். அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் என்ற பட்டத்திற்குச் சொந்தமானவர் குருபகவான். 

    இது போன்ற குரு பகவானின் பலன்களைப் பெறுவதற்கு சில விரதங்களை கடைப்பிடித்தால் குறிப்பாக வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் சில சிறப்பான மூலிகை கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

    வியாழக்கிழமை விரதம் இருந்தால் குரு பகவானின் முழு நன்மைகளையும் பெற முடியும். அதன் மூலம் பல நன்மைகளும், சிறப்பான நன்மைகளும் உண்டாகும். ஒரு ஆண்டிற்கு 16 வளர்பிறை வியாழக்கிழமை விரதம் இருந்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். 

    இந்த விரதத்தை 3 ஆண்டுகள் கடைப்பிடித்தால் குரு பகவானின் முழு அருளையும் பெற்று வாழ்க்கை முழுவதும் சிறப்பான செல்வங்களைப் பெறலாம்.

    குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு நீர் எதையும் அருந்தாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் மேலும் சிறப்பாகும். குங்குமப்பூ கலந்த மாலை குரு பகவானுக்கு அபிஷேகம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். விரதம் இருக்கும் நாட்கள் முழுவதும் உணவருந்த அமைந்திருந்தால் நல்ல பலன்களைப் பெற முடியும். குரு பகவானுக்கு உகந்த ஸ்லோகங்கள், மந்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது.

    இரவு நேரத்தில் விரதத்தை முடித்துக் கொள்ள உப்பு சேர்க்காத உணவு குரு பகவானுக்குப் படைத்துவிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 

    இவ்வாறு விரதத்தை வியாழக்கிழமை என்று முழுமையாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல யோகங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண சிக்கல், குழந்தை இல்லாமை, தொழில், வியாபாரம் போன்ற சிக்கல்கள் நிவர்த்தியாகும். வாழ்வில் வளம் பெருகும்.

    ×