search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance Day"

    • கள்ளக்குறிச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டது.
    • அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பானமனுக்கள் உட்பட பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய 407மனுக்களை பெற்று க்கொண்ட மாவட்ட வருவாய் அலு வலர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்த ப்பட்ட அலுவல ர்களிடம் கேட்ட றிந்து, மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவ லர்களுக்கு அறிவுறு த்தினார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில், தமிழ்நாடு தூய்மை பணி புரிவோர் நலவா ரியத்தின் நலவாரிய அட்டையினை தூய்மை பணிபுரியும் பணியா ளர்களுக்கு வழங்க ப்பட்டது.முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட மாற்று த்திறனாளிக ள்நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்தி றனாளிக்கு ரூ.7,000 மதிப்பீட்டிலான சிறப்பு நாற்காலியும், பார்வை குறைபாடுடைய மாற்று த்திறனாளி ஒருவருக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலான எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கியும், பார்வையற்ற மற்றும் காதுகேளா தோர்க ளுக்கான ரூ.12,000 மதிப்பீட்டிலான பிர த்யேக செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு அலைபேசி 3 மாற்று த்திறனாளிகளுக்கும் வழ ங்கினார்.

    அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயரா கவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் இதில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.
    • விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வருகிற 25-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வருகிற 25-ந்தேதி( சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இதில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம். மேலும்விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண் உதவி மையமும் குறைதீா் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்களும், ஆலோசனைகளும் தெரிவிக்கப்படும்.

    தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
    • அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வருகிற 21-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி ( செவ்வாய்க்கிழமை )மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எரிவாயு முகவா்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா் புகாா்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது
    • மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.


    திருப்பூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அவினாசி மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது. மின் நுகர்வோர்கள் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்படடுள்ளது.

    ×