search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt engineering college"

    • பேரிடர் மீட்பு பயிற்சி குழு சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் கடந்த 14-ந்தேதி முதல் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
    • 12 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மின்பாதுகாப்பு மற்றும் பேரிடர்கால முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது

    நெல்லை:

    பேரிடர் மீட்பு பயிற்சி குழு சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் கடந்த 14-ந்தேதி முதல் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

    25-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மின்பாதுகாப்பு மற்றும் பேரிடர்கால முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    இதில் நெல்லை மண்டல மின்பாதுகாப்பு அதிகாரி பேச்சிமுத்து, பாதுகாப்பு முறைகள் மற்றும் பேரிடர் கால முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து கருத்துரை வழங்கினார்.

    மேலும் விநியோகத்தில் உள்ள மின்பாதைகள் பற்றியும், மின்மாற்றிகளின் செயல்பாடுகள் பற்றியும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் கருத்துரை வழங்கியதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதில் சரியான விளக்கத்தை கூறிய 5 தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்வுகளை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஹெச்.எம்.எஸ். டிரஸ்ட் சார்பில் செய்திருந்தனர்.

    ×