search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor Tamilisai"

    • கவர்னர் தமிழிசை அறிவிப்பு
    • மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னேன்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்த மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ஐதராபாத் மீன் வளத்துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆராய்ச்சி விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களோடும் இணைந்து சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற பேரிடர்கள் நிகழ்வதை முன்கூட்டியே தெரிந்து மீனவர்களுக்கு 'ஸ்மார்ட் மொபைல் போன்' மூலம் தெரியப்படுத்த ஆலோசனை சொன்னார்கள்.

    மீனவர்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா?" என்று நான் கேட்டேன். அவர்கள் "தெரியாது" என பதிலளிக்க, "இந்த தொழில்நுட்பத்தை நீங்கள் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தால் புதுவையில் மீனவர்களின் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் போன் தருவதற்கான அத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னேன். ஏனென்றால், இது மீனவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் உகந்தது.

    மீனவர்களுக்கு மீன்பிடிப்பது மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளை படிக்க வைப்பது அவர்களின் தொழிலை தொழில் நுட்பங்கள் மூலம் மேம்படுத்த இது போன்ற உதவிகளை அரசு செய்ய வேண்டும். மீனவர்கள் தொழில் நுட்பத்தோடு அவர்களின் தொழில் வளர திறன் மேம்படுத்தப்பட வேண்டும்,

    மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள். விருந்தி னர்களை சிறப்பு செய்ய பொன்னாடை களுக்கு பதிலாக கைத்தறி ஆடைகளை கொடுத்தால் நெசவாளர்கள் வாழ்க்கை மேம்படும். இதனை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம் மீன் பிடிப்பதில் இருப்பதைப் போல கைத்தறி ஆடைகளை நெய்வதிலும் பொருளா தாரம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவிழா அக்டோபர் மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி 10 நாள் புரட்டாசி திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு பால்ப ணிவிடை, உகப்படியும் காலை 6.30 மணிக்கு திருநாமக்கொடியும் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

    வருகிற 7-ந்தேதி இரவு அன்னவாகனத்தில் அய்யா பதிவலம் நடக்கிறது. 8-ந்தேதி மாலை 6 மணிக்கு செண்டை மேளத்துடன் கருடவாகனத்தில் மணலி புதுநகருக்குள் அய்யா நகர்வலம் வருகிறார்.

    9-ந்தேதி இரவு மயில் வாகனத்திலும், 10-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 11-ந்தேதி சர்ப்ப வாகனத்திலும்,12-ந்தேதி மலர்முக சிம்மாசன வாகனத்திலும் அய்யா பதிவலம் வருகிறார். விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 9 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. இதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு குதிரை வாகனத்திலும், 14-ந்தேதி காமதேனு வாகனத்திலும் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார். தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக் குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி.அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 மணிக்கு அய்யா பூம் பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட சோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொருளாளர். பி. ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணைப் பொது செயலாளர் கே. ராம மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள் விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு பாது காப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு
    • புதுவையில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    புதுச்சேரி:

    விஸ்வகர்மா தினத்தை யொட்டி ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழிலாளர் நலத்துறை செயலர் முத்தம்மா, தொழில்துறை இயக்குநர் ருத்ர கவுடு மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் குமரன் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், விஷ்வகர்மா திட்டத்தை புதுவையில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர், கவர்னர் தமிழிசை வழங்கிய ஆலோசனை வருமாறு:-

    புதுவையில் விஸ்வகர்மா தொழில்களை அடையாளம் கண்டு அதன் தொழிலா ளர்கள் குறித்த முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விஷ்வகர்மா தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை விரைவில் நடத்த வேண்டும். விஷ்வகர்மா தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்வ தற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

    விஸ்வகர்மா திட்டத்தைப் புதுவையில் விரைவாக செயல்படுத்த வேண்டும். விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விஸ்வகர்மா தொழில் மேளா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூலப்பொருள் செலவினத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுகுறித்து கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    புதுவையில் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான இடு ெபாருள் மானியத் திட்டத்தின்கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 500 லிருந்து ரூ.8 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

    மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக தொழிற்பயிற்சி நிறுவனங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவோருக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூலப்பொருள் செலவினத்திற்கான இழப்பீடு ஆகியவற்றை உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதன்படி தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற, எஸ்.எஸ்.எல்.சி, ஐ.டி.ஐ, மேல்நிலைக் கல்வி முடித்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 லிருந்து ரூ.4, 500 ஆகவும், பட்டம், தொழில் நுட்பத்தில் பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 லிருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், தொழில்நுட்பத்தில் பட்டம்,முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

    சிறப்பு உயர்திறன் பயிற்சி உதவித் தொகை மேல்நிலை கல்வி, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 லிருந்து ரூ.7 ஆ யிரத்து 500 ஆகவும், பட்டம், பட்டயம் முடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.9 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டு வரும் மூலப்பொருள் செலவினங்க ளுக்கான இழப்பீட்டுத் தொகை தற்போது வழங்கப்படும் நபர் ஒன்றுக்கு ரூ.300 லிருந்து ரூ.900 ஆக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உயர்வு 1.4..2023-ந் தேதி முதல் கணக்கிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவர்னர் தமிழிசை ஒப்புதல்
    • மாநில அரசு பங்களிப்பாக ரூ.5 கோடி வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு திட்டங்கள், செலவினங்களுக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்து வருகிறார்.

    கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை புதுவை அரசு அனுப்பிய 32 கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    பிரதமரின் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டு சந்தா ரூ.92 ¼ லட்சம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு ரூ.59. லட்சத்து 69 ஆயிரம் மானியம், ஹர்கர்திரங்கா பிரச்சாரத்துக்கு ரூ.47 லட்சம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

    சுகாதாரத்துறை பயன்பாட்டுக்கு உயர்நிலை மயக்க மருந்து பணி நிலையத்தை வாங்க ரூ.3 லட்சத்து 32 ஆயிரம் செலவினத்துக்கு ஒப்புதல், நிலத்தடி நீர் ஆணைய பணியிடம் உருவாக்கல், தொடக்க கூட்டுறவு மானியமாக ரூ.1 லட்சத்து 68 ஆயிரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு வட்டி மானியமாக ரூ.25 லட்சம்,கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு பங்களிப்பாக ரூ.5 கோடி வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    • கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
    • கல்வித்துறை என்.எஸ்.எஸ். மாணவர்கள், புதுவை சமூக அமைப்புகள் மற்றும் பலர் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி, சென்னை காயத்ரி சாரிட்டீஸ், ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி ஓயிட் டவுன், மழைத்துளி உயிர்த்துளி அமைப்புகளுடன் இணைந்து தமிழரின் தேசிய மரமான பனைமரம் மீட்பு 6-ம் ஆண்டு தொடர் பயணத்தின் தொடக்கம், இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 ஆயிரம் பனை விதைகளை புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் பனை விதை நடவு விழா அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கிழக்கு கடற்கரையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி தலைவர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.

    வீராம்பட்டினம் கிராம மக்கள் குழு தலைமை தாங்கினார். வண்ணங்களின் சங்கம் பிரபாகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு முதல் பனை விதை நடவு பணியை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி, அரியாங்குப்பம் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன செவிலியர் கல்லூரி முதல்வர் பரிமளா தமிழ்வாணன், கிளப் ஆப் புதுச்சேரி ஓயிட் டவுன் தலைவர் திருஞானம், புதுச்சேரி நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரி சதீஷ்குமார், அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி தொகுத்து வழங்கினார்.

    புதுச்சேரி கல்வித்துறை என்.எஸ்.எஸ். மாணவர்கள், புதுவை சமூக அமைப்புகள் மற்றும் பலர் ஈடுபட்டனர். முடிவில் மண்வாசம் இளைஞர் மன்ற தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார். 

    • இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    • எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், ஆசிரியர் அரசு ஆண்கள் பள்ளி காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம், கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கவர்னர் தமிழிசை ஆவேசம்
    • மாலையில் தெலுங்கானா செல்ல வேண்டி இருப்பதால் இங்கு நல்ல விருந்தாகவே கொடுக்க நினைத்து உணவு பட்டியலை நானே தயாரித்தேன்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த தேனீர் விருந்தை தி.மு.க. வினர் புறக்கணித்தனர். எதிர்கட்சிகள் புறக்கணிப்பு குறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழகத்தில் கவர்னர் விருந்து மழை காரணமாக நடத்தப்படவில்லை. மழை அங்கு அதிகமாக பொழிகிறது.இங்கு நாம் அனைவரையும் சகோதரத்துடன் அழைத்து கொண்டாட வேண்டும் என்பது ஆசை. காலகாலமாக சுதந்திர தினத்தில் விருந்து வைத்து கொண்டாடுவது வழக்கம். மாலையில் தெலுங்கானா செல்ல வேண்டி இருப்பதால் இங்கு நல்ல விருந்தாகவே கொடுக்க நினைத்து உணவு பட்டியலை நானே தயாரித்தேன்.

    அனைவருக்கும் தேவை எது என்பதை பார்த்து பார்த்து செய்தேன். இதில் புறக்கணிப்பு என்பது பெருமைக்குரியது அல்ல. அரசியல்,கொள்கைகளை தாண்டி நடைபெறும் வழிமுறை. இதில் வரவில்லை என்றால் எனக்கு எதுவும் குறையில்லை. வராதவர்களை பற்றி கவலை இல்லை. வந்தவர்களை மகிழ்ச்சியாக வரவேற்றோம்.

    நான் தமிழகத்தை சேர்ந்தவள். தமிழகத்தில் எது நடந்தாலும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. தமிழகத்தில் தமிழிசை ஏன் மூக்கை நுழைக்கிறார் என புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா கேட்கிறார். சுதந்திர தினத்தன்று ஒரு கவர்னரை பார்த்து தமிழத்தை பற்றி எப்படி பேச முடியும் என கேட்கிறார்கள். தமிழக சட்ட மன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என கூறும் போது எனக்கு தெரிந்த உண்மையை கூறினேன்.

    தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்கு இங்கு எப்படி பதில் சொல்லலாம். அதற்கு நான் வர மாட்டேன் என தி.மு.க. சிவா கூறுவதால் எனக்கு நஷ்டமில்லை.

    புதுவை ஆட்சியை நான் பிடித்து வைத்திருப்பதாக எதிர்கட்சிகள் தவறாக கூறுகிறார்கள். புதுவையின் மீது அக்கறை இருந்தால் தமிழகத்தில் இருந்து புதுவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை வாங்கி தர வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

    • சாதனைகளின் உச்சமாக சந்திராயன் விண்கலம், நிலவில் தடம் பதிக்கும் இவ்வாண்டு இந்திய நாடு மேலும் சாதனைகள் படைத்திடும்.
    • .நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டி ருக்கிறோம்.

    நமது தேசத் தலைவர்கள் அரும்பாடு பட்டு தங்கள் இன்னுயிரைத் தந்து நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்தார்கள். அத்தகைய தியாகச் தலைவர்களின் வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தொலைநோக்குப் பார்வை கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ் கல்வி, மருத்துவம், அறிவியல், வேளாண்மை, விண்வெளி ஆராய்ச்சி என்று பல துறைகளிலும் இந்தியா இன்று உலகின் முன்னோடி நாடாகத் திகழ்கிறது.நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும்.

    அமைச்சர் லட்சுமி நாராணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களுக்கு சுதந்திர தின வாழ்த் துக்கள். தங்கள் இன்னுயிர் தந்து சுதந்திரம் பெற்றுத் தந்த தியாக பெரு மக்களை நினைவு கூறும் பொன்னாள் இது. வேறு எந்த நாடும் சுதந்திரம் பெற்ற பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு சாதனைகள், உள்கட்டமைப்பு வசதிகளை அடைந்தது இல்லை.

    சாதனைகளின் உச்சமாக சந்திராயன் விண்கலம், நிலவில் தடம் பதிக்கும் இவ்வாண்டு இந்திய நாடு மேலும் சாதனைகள் படைத்திடும்.

    எல்லா வேறுபாடுகளை களைந்து மறந்து அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம். காந்தியமும், கர்மவீரரின் கடமைகளும் முன்னேற்றப்பாதைகள் என அறிந்து செயல்படும் முதல்-அமைச்சருக்கு தோள் கொடுத்து புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வோம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை புதுவை மண்ணுக்குரியவை என்பதில் பெருமை கொள்வோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வெளியூர்களில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் நாம் உள்ளூரில் நடக்கும் சம்பவங்களை பார்க்க மறந்துவிட்டோம்.
    • கர்நாடகத்தில் வேறு ஆட்சி நடக்கும் போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை-அம்பை சாலையில் அமைந்துள்ள தருவை கிராமத்தில் பனங்காடு என்ற இடத்தில் பனை தேசிய திருவிழா-2023 என்ற நிகழ்ச்சி இன்றும், நாளையும் நடக்கிறது.

    இதில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து காரில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு வந்த அவரை கலெக்டர் கார்த்திகேயன், துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கற்பகதரு என்று அழைக்கப்படும் பனைமரம் பாதுகாக்கப்பட வேண்டியது என்பது அனைவரது கொள்கையாகும். பனை வளர்ப்பை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். அறிவாற்றலுடன் வளர வேண்டிய மாணவர்கள் தற்போது பள்ளிகளில் அரிவாளுடன் சுற்றும் நிலை உள்ளது.

    புத்தகத்தை எடுத்து க்கொண்டு திரிய வேண்டியவர்கள், கையில் கத்தியை வைத்துக்கொண்டு திரிவது மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. காவல்துறையும், நிர்வாகமும் ஏன் இந்த சம்பவத்தை கண்காணிக்க தவறினார்கள்.

    வெளியூர்களில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் நாம் உள்ளூரில் நடக்கும் சம்பவங்களை பார்க்க மறந்துவிட்டோம். நாங்குநேரி விவகாரத்தில் தீர ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்காக மட்டும் சாதியை பயன்படுத்துவதை தாண்டி சாதிய கொடுமைகள் இருக்கும் இடங்களை அலசி ஆராய்ந்து பொதுநலவாதிகள் முடிவெடுக்க வேண்டும்.

    மற்ற ஊர்களையும், மற்ற மாநிலங்களையும் பற்றி ஆட்சியில இருப்பவர்கள் கவலைப்படுகிறார்கள். நமது மாநிலத்தை பற்றி ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள். கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி இருந்தால் காவிரியை வழி நடத்துவோம் என சொன்னவர்கள், கர்நாடகத்தில் வேறு ஆட்சி நடக்கும் போது பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
    • அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    அதற்கேற்ப ஓட்டல்கள், சிறுநிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள், சிற்றுண்டி கடைகள் என எங்கு பார்த்தாலும் புற்றீசல்கள் போல பெருகிவிட்டது. நடைபாதைகள் முழுக்க கடைகளாகவே காட்சியளிக்கிறது.

    இதுபோன்ற சூழலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கலப்பட உணவுகள் குறித்து பொது மக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷவர்மா உணவு சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உணவு விஷமாக மாறி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இப்படி குறிப்பிட்ட நாளுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட சிக்கன், மீன், இறைச்சி போன்ற உணவகங்களில் பயன்படுத்தப்படுவதால் பொது மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து அரசின் கவனத்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கொண்டு சென்றனர். இதற்கிடையே உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    தரநிலை சட்டத்தை மீறி கலப்படம் செய்வோருக்கு பல அடுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறு உற்பத்தியாளர்கள் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், முதல்முறை ரூ.3 ஆயிரமும், 2-ம் முறை ரூ.6 ஆயிரமும், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    அதேபோல் தற்காலிக சிறு கடை வைத்திருப்போர் (சிறிய சில்லரை விற்பனையாளர்கள்) கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால், முதல்முறை என்றால் ரூ.1000, 2-வது முறை ரூ.2 ஆயிரம், மூன்றாவது முறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    ஒரு நாளைக்கு 500 லிட்டர் பால் வரை கையாளும் நிறுவனங்கள் கலப்படம் செய்தால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.4 ஆயிரம், 3-வது முறை ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இறைச்சி கடைகளில் ஒரு நாளைக்கு 10 சிறு விலங்குகள்(ஆடு,மாடு), 50 கோழிகள் வரை விற்கும் நிறுவனங்கள் முதல்முறை ரூ.2 ஆயிரம் அபராதம், 2-வது முறை ரூ.4 ஆயிரம் அபராதம், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    பதிவு பெறாமல் இயங்கும் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் வணிக நிறுவனங்களுக்கு முதல்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    உணவுக்கு பயன்படுத்தப்படாத தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    உணவுகளில் தடை செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தினால் ரூ.20 ஆயிரம், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஆணையை சுகாதாரத்துறை சார்பு செயலர் கந்தன் வெளியிட்டுள்ளார்.

    • தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
    • தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் தேசிய கல்விக் கொள்கை 3-வது ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சில குறை இருந்தால் சொல்வேன். தமிழ்நாடு பாட திட்டத்துக்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்திய தமிழிசை தமிழின துரோகி என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கூறியுள்ளார்.

    தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.

    தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து புதுச்சேரி பாடத்திட்டத்தை தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் விமர்சித்துள்ளார்.

    22 மொழிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் பேசியுள்ளார். தமிழகத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழிலும், பிளஸ்-2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதவில்லை.

    ஆனால், நாங்கள் தமிழை வளர்த்துதான், வருகிறோம். எனவே, தமிழை வைத்து எங்களுக்கு மதிப்பெண் போட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு உரிமை இல்லை.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கிடையாது. இதில் அரசியல் இருப்பதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்.

    அவருக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. 22 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

    மக்கள் பணத்தை எடுத்து என்னுடைய வசதிக்காக செலவு செய்யமாட்டேன் என்றார்.

    ×