search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goat theft"

    • ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன.
    • அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்ன சேலம் அருகே உள்ள ஏராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . விவசாயி. இவர் ஆடுகளை மேய்த்து கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் தம்பி கொளஞ்சியப்பன் வீட்டு அருகே தனக்கு சொந்தமான 18 ஆடுகளை கட்டிவிட்டு ஆடு வெளியே செல்லாமல் இருக்க வலைகளை கட்டி நிறுத்தி விட்டு அருகில் உள்ளஅவருடைய வீட்டிற்கு வழக்கம்போல் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆடுகள் சத்தம் போட்டு உள்ளன.

    சத்தத்தை கேட்டு வந்து பார்த்தபோது கார் ஒன்று நின்று கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கார் அருகே சென்ற போது கார் வேகமாக சென்றுவிட்டது. பிறகு ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது 15 ஆடுகள் மட்டுமே இருந்தன. மீதமுள்ள மூன்று ஆடுகள் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்தபுகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து ஆடு திருடி சென்றவர்களை சின்ன சேலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பனங்குளம் வடக்கு கிராமத்தில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடுகள் திருட்டு தொடர்ந்து கொண்டே உள்ளது. அதேபோல பனங்குளம் வடக்கு கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமுத்து மகன் சிவக்குமார் (வயது 40) என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    அப்போது ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.

    இதையடுத்து அவர்களை ஒரு மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றும் அந்த காரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 ஆடுகள் பறிமுதல்
    • அரக்கோணம் சிறையில் அடைத்தனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் விவசாயி. தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் 13 ஆடுகளை அடைத்து வைத்து இருந்தார்.

    காலை எழுந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த ஆடுகள் திடீரென காணாமல் போனது. இது குறித்து மோகனசுந்தரம் நெமிலி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடியவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சிறுனமல்லி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விடுத்து விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகுவேடு பகுதியை சேர்ந்த சலாம் (வயது 26) எனவும், அவர் பல்வேறு இடங்களில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சலாமை கைது செய்து அவரிடமிருந்து 6 ஆடுகள் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சலாமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

    குலசேகரன்பட்டினத்தில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு புதுக்குடியேற்று கிராமத்தை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது58). இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது ஆடுகளை குலசேகரன்பட்டினம் காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் நிழலுக்காக அமர்ந்து இருந்தார்.

    அப்போது அங்கு ஆட்டோவில் வந்த இருவர் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை பிடித்து ஆட்டோவில் ஏற்றினர். இதைப் பார்த்த பொன்பாண்டி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் ஆட்டோவில் வந்த இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்பு அவர்களை குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை இருவரிடமும் விசாரணை நடத்தினர்

    விசாரணையில் அவர்கள் குலசேகரன்பட்டினம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமணி (35), அவரது நண்பர் உதயமார்த்தாண்ட கோவிலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இசக்கிபாண்டி (35) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஐர்படுத்தினர்.
    ×